என் மலர்tooltip icon

    கார்

    சிட்ரோயன் நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் இந்திய விலை மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சிட்ரோயன் நிறுவனம் சி5 ஏர்கிராஸ் மாடல் இந்திய விலையை உயர்த்தியது. இந்தியாவில் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இரு வேரியண்ட்களின் விலையும் தற்போது ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. 

    விலை உயர்வின் படி சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் பீல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 31.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என மாறி இருக்கிறது. இதன் ஷைன் வேரியண்ட விலை தற்போது ரூ. 32.80 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என மாறியது.

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மாடலாக சி5 ஏர்கிராஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், எட்டு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டு கார் மாடல்கள் நிறத்தை திடீரென மாற்றியமைத்து இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் நெக்சான் மாடல்களின் பியூர் சில்வர் நிற வேரியண்ட்டை சத்தமின்றி வலைதளத்தில் இருந்து நீக்கியது. தற்போது நெக்சான் கார் ஐந்து நிறங்களிலும், டியாகோ மாடல் நான்கு நிறங்களிலும் கிடைக்கிறது.

    முன்னதாக நெக்சான், டியாகோ மற்றும் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல்களின் நிறங்களையும் டாடா மோட்டார்ஸ் மாற்றியமைத்தது. இந்த ஆண்டு மே மாதத்தில் நெக்சான் டெக்டானிக் புளூ, கடந்த மாதம் ஹேரியர் கேமோ எடிஷன் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுத்தியது. 

     டாடா டியாகோ

    புது மாற்றங்களை தொடர்ந்து நெக்சான் எஸ்.யு.வி. மாடல் அட்லஸ் பிளாக், போலியேஜ் கிரீன், கேல்கேரி வைட், டேடோனா கிரே மற்றும் பிளேம் ரெட் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. நெக்சான் மாடல் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 முதல் யூனிட் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சுமித்துக்கு வழங்கப்பட்டது.


    மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்தியாவில் வினியோகம் செய்ய துவங்கியது. புதிய எக்ஸ்.யு.வி.700 முதல் யூனிட் 2020 பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சுமித் அண்டிலுக்கு வழங்கப்பட்டது. இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எக்ஸ்.யு.வி.700 கோல்டு எடிஷன் மாடல் ஆகும். 

    கோல்டு எடிஷன் மாடலில் முன்புற கிரில் கோல்டன் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மஹிந்திராவின் புது லோகோ சேட்டின் கோல்டு நிறத்தில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் டெயில்கேட் பகுதியில் 68.55 எனும் எண்கள் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டு இருக்கிறது. உள்புற இருக்கைகளில் தங்க நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    முன்னதாக மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நாடு முழுக்க 14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்களை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக அறிவித்தது. இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 நான்கு வேரியண்ட்கள், இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடல் இந்தியாவில் நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய ஏ45 எஸ் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 416 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

     மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ்

    புதிய மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. மாடலில் ஏ.எம்.ஜி. ரக முன்புற கிரில், அகலமான ஏர் இன்டேக், பிளேர்டு வீல் ஆர்ச்கள், 19 இன்ச் லைட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டூயல் டிப் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.700 வினியோக விவரங்கள் வெளியாகி உள்ளது.


    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 விரைவில் இந்திய சாலைகளில் வலம்வர இருக்கிறது. புதிய பிளாக்‌ஷிப் எஸ்.யு.வி.700 மாடலின் வினியோகம் இந்தியாவில் அக்டோபர் 30 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் புதிய எக்ஸ்.யு.வி.700 வாங்க இதுவரை சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    முதற்கட்டமாக பெட்ரோல் யூனிட்களை வினியோகம் செய்யப் போவதாக மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் 14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்று காரணமாக வினியோக திட்டத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் ரூ. 11.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விலை எக்ஸ்.யு.வி.700 மாடலின் முதல் 25 ஆயிரம் யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது புதிய எக்ஸ்.யு.வி.700 விலை ரூ. 12.49 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி விரைவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பில் செய்யலாமா என ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசின் அதிக வரி மற்றும் நிலையற்ற திட்டங்கள் இடையூறாக இருப்பதாக ஆடி இந்தியா தெரிவித்து இருக்கிறது.

    'இந்திய கார் சந்தை மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறோம். எனினும், எங்களுக்கு நிலையான திட்டம் தேவை. திட்டம் நிலையாக இல்லையெனில், சரியாக திட்டம் தீட்ட முடியாது. இதன் காரணமாக ஜெர்மனியில் உள்ள எங்களின் தலைமையகத்திடம் முதலீட்டு திட்டத்தை நியாயப்படுத்த முடியாது,' என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

     ஆடி எலெக்ட்ரிக் கார்

    2020 ஏப்ரல் மாதம் முதல் இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் டீசல் மாடல்களுக்கு மாற்றாக பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதுவரை இந்திய சந்தையில் மூன்று எலெக்ட்ரிக் மாடல்களை ஆடி அறிமுகம் செய்துள்ளது. 
    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 குர்கா மாடல் இந்திய வினியோக விவரங்களை பார்ப்போம்.


    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 குர்கா எஸ்.யு.வி. மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய குர்கா மாடல் விலை ரூ. 13.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. 

    இந்த நிலையில், புதிய குர்கா மாடல் நாடு முழுக்க வினியோகம் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. வரும் மாதங்களில் வினியோக பணிகள் பல்வேறு நிகரங்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கின்றன.

     2021 போர்ஸ் குர்கா

    இந்திய சந்தையில் புதிய போர்ஸ் குர்கா மாடல் மஹிந்திரா தார் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இரண்டாம் தலைமுறை மாடலான குர்கா பி.எஸ்.6 பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய 2.6 லிட்டர் டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. குர்கா பி.எஸ்.6 மாடலின் சஸ்பென்ஷன் டபுள் விஷ்போன் மற்றும் காயில் ஸ்ப்ரிங்களை கொண்டு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய பன்ச் மாடல் விலை ரூ. 5.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த காருக்கான முன்பதிவு ரூ. 21 ஆயிரம் கட்டணத்தில் நடைபெற்று வருகிறது. முன்பதிவை தொடர்ந்து டாடா பன்ச் வினியோகம் துவங்கி இருக்கிறது.

    டாடா பன்ச் மாடல் மொத்தம் ஏழுவித நிறங்கள் மற்றும் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.

     டாடா பன்ச்

    புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., பாக் லைட்கள், ரூப் ரெயில்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.
    மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் பேஸ்லிப்ட் மாடல் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ பேஸ்லிப்ட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    அந்த வகையில் புதிய பலேனோ பேஸ்லிப்ட் மாடல் முற்றிலும் புதிய கிரில், பம்ப்பர், ரீ-ஸ்டைல் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பின்புறமும் மாற்றப்பட்டு புதிய பம்ப்பர் மற்றும் டெயில்கேட்கள் வழங்கப்படலாம். காரின் பக்கவாட்டில் அதிக மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது.

     மாருதி பலேனோ

    வெளிப்புற மாற்றங்கள் தவிர இதன் ஹார்டெக்ட் பிளாட்பார்மில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. உள்புறமும் சிறு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டேஷ்போர்டு மாற்றப்படுகிறது.

    இந்த காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, சிறிய எம்.ஐ.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப் போன்ற அம்சங்களும் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ சி.என்.ஜி. மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. வேரியண்ட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு மாடல்களில் டியாகோ சி.என்.ஜி. மாடல் முதலில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    மேலும் டியாகோ சி.என்.ஜி. மாடலுக்கான முன்பதிவுகளை சில விற்பனையாளர்கள் ஏற்கனவே துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டியாகோ சி.என்.ஜி. மாடல் எக்ஸ்.இ. மற்றும் எக்ஸ்.டி. என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

     டாடா டியாகோ

    டியாகோ சி.என்.ஜி. மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் சி.என்.ஜி. கிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் வெளிப்புற தோற்றத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் 65 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. முன்பதிவு துவங்கிய இரண்டே ஆண்டுகளில் இத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    புதிய எக்ஸ்.யு.வி.700 முன்பதிவு அக்டோபர் மாத வாக்கில் துவங்கியது. முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்தது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் டுயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூப், எலெக்ட்ரிக் பிரேக், வயர்லெஸ் சார்ஜிங், ஸ்டீரிங் வீல், 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கியர்பாக்ஸ்-ஐ பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய லிமிடெட் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களின் ஜி.எக்ஸ். வேரியண்டில் கிடைக்கின்றன. 

    லிமிடெட் எடிஷனில் 360 டிகிரி கேமரா, டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஏர் பியூரிபையர், வயர்லெஸ் சார்ஜர், இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கப் பிளேட்கள் உள்ளன. 

     இன்னோவா க்ரிஸ்டா

    இவைதவிர இன்னோவா க்ரிஸ்டா மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்விட்டி, ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிஷன் மாடலில் 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை 150 ஹெச்.பி. திறன், 360 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 166 ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ×