என் மலர்tooltip icon

    கார்

    ஆடி நிறுவனம் புதிய கியூ5 பேஸ்லிப்ட் மாடலுக்கான இந்திய முன்பதிவை துவங்கி இருக்கிறது.


    ஆடி இந்தியா நிறுவனம் 2021 ஆடி கியூ5 பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய கியூ5 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இந்த மாடல் இம்மாத இறுதியில் அறிமுகமாகிறது.

    பேஸ்லிப்ட் மாடலை ஆடி நிறுவனம் 2020 ஜூன் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக இந்த மாடலின் தயாரிப்பு பணிகள் இந்திய ஆலையில் துவங்கியது.

     2021 ஆடி கியூ5 பேஸ்லிப்ட்

    2021 ஆடி கியூ5 பேஸ்லிப்ட் மாடலில் புல்-எல்.இ.டி. ஹெட்லைட்கள், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புது வடிவமைப்பு கொண்ட டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கியூ5 மாடலில் 2 லிட்டர் டி.எப்.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் 7 ஸ்பீடு எஸ் டிரானிக் ஆட்டோமேடிக் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. டாடா பன்ச் விலை ரூ. 5.49 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.09 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை அறிமுக விலை தான், டிசம்பர் 31, 2021 வரை மட்டுமே இந்த விலை பொருந்தும்.

    புதிய டாடா பன்ச் மாடலுக்கான முன்பதிவு டாடா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். இந்த மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., பாக் லைட்கள், ரூப் ரெயில்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.

     டாடா பன்ச்

    டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் சொனெட் ஆனிவர்சரி எடிஷன் மாடல் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது.


    கியா சொனெட் ஆனிவர்சரி எடிஷன் இந்தியாவில் அறிமுகமானது. இதன் விலை ரூ. 10.79 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.89 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்திய சந்தையில் ஒரு வருடத்தை நிறைவு செய்ததை அடுத்து செல்டோஸ் மாடலுக்கும் இதேபோன்ற காரை கியா இந்தியா அறிமுகம் செய்தது. இதுதவிர, கியா சொனெட் மாடலும் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

     கியா சொனெட்

    கியா சொனெட் ஆனிவர்சரி எடிஷன் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் உற்பத்தி இந்த நிதியாண்டு முடியும் வரை நடைபெறும். சொனெட் ஆனிவர்சரி எடிஷன் ஹெச்.டி.எம். மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் அரோரா பிளாக் பியல், கிராவிட்டி கிரே, சில்வர் ஸ்டீல் மற்றும் கிளேசியர் வைட் பியல் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய 3 சீரிஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 3 சீரிஸ் ஐகானிக் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் பெட்ரோல் மாடல் விலை ரூ. 53.50 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 54.90 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய லிமிடெட் எடிஷன் மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு கிடைக்கும். 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஐகானிக் எடிஷன் மினரல் வைட், கார்பன் பிளாக் மற்றும் கஷ்மிரி சில்வர் போன்ற பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.

     பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் ஐகானிக் எடிஷன்

    பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடலின் கிரில் பகுதியில் எல்.இ.டி. லைட்கள் உள்ளன. இவை முன்புற தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது. இந்த காரில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 
    ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கியூ5 மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கி இருக்கிறது.


    ஆடி நிறுவனம் இந்தியாவில் கியூ5 எஸ்.யு.வி. மாடலின் உற்பத்தியை ஔரங்காபாத்தில் உள்ள ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் துவங்கி இருக்கிறது. இந்த கார் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இந்த காரின் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், 18 இன்ச் அலாய் வீல் வழங்கப்படுகிறது.

     ஆடி கியூ5

    புதிய ஆடி கியூ5 மாடலில் 2 லிட்டர் டி.எப்.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 12 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு எஸ் டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் மாடல் இந்தியாவில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் சந்தா முறையிலான சேவையை டைகுன் எஸ்.யு.வி. மாடலுக்கும் நீட்டித்து இருக்கிறது. வோக்ஸ்வேகன் டைகுன் எஸ்.யு.வி. மாடல் ரூ. 10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவக்க விலையில் கிடைக்கிறது. 

    இந்திய சந்தையில் புதிய டைகுன் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டைகுன் ஜிடி லைன் மாடல் விலை ரூ. 14.99 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
     
     வோக்ஸ்வேகன் டைகுன்

    காருக்கான வாடகை தொகையில் ஆன்-ரோடு பைனான்சிங், பராமரிப்பு, இன்சூரன்ஸ் போன்றவை அடங்கும். புதிய வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்தியர்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வேகன் குஷக் காரின் பிளாட்பார்மிலேயே உருவாகி இருக்கிறது.

    டைகுன் மாடலில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட், சக்திவாய்ந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் டி.எஸ்.ஜி. யூனிட் வழங்கப்படுகிறது.
    இந்திய சந்தையில் ஜீப் ராங்ளர் மாடலின் விலை அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

    ஜீப் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ராங்ளர் எஸ்.யு.வி. மாடலை உற்பத்தி செய்ய துவங்கியது. இந்நிறுவனத்தின் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல்கள் ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

    கடந்த வாரம் ஜீப் காம்பஸ் மாடலின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ராங்ளர் மாடலின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ராங்ளர் மாடல் அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்கள் விலையும் ரூ. 1.25 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     ஜீப் ராங்ளர்

    விலை உயர்வை தொடர்ந்து ஜீப் ராங்ளர் அன்லிமிடெட் விலை ரூ. 55.15 லட்சம் என்றும் ஜீப் ராங்ளர் ரூபிகான் விலை ரூ. 59.15 லட்சம் என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ராங்ளர் எஸ்.யு.வி. மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.700 மாடல் இரண்டே நாட்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்துள்ளது. முதல் நாள் முன்பதிவு 57 நிமிடங்களில் நிறைவுற்ற நிலையில், இரண்டாம் நாளில் இரண்டு மணி நேரங்களில் 25 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டன.

    முதற்கட்டமாக எக்ஸ்.யு.வி.700 மாடல் ரூ. 11.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கியது. இந்த விலை முதல் 25 ஆயிரம் யூனிட்களுக்கு பொருந்தும். இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    லெக்சஸ் நிறுவனத்தின் புதிய இ.எஸ். பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    லெக்சஸ் நிறுவனம் 2021 இ.எஸ்.300ஹெச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லெக்சஸ் இ.எஸ். விலை ரூ. 56.65 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலின் விலை முந்தைய மாடலை விட ரூ. 10 ஆயிரம் அதிகம் ஆகும்.

    லெக்சஸ் இ.எஸ். மாடல் எக்ஸ்-குயிசிட் மற்றும் லக்சரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இ.எஸ். மாடலின் கேபின் எந்த மாற்றமும் பெறவில்லை. இந்த காரில் வெண்டிலேட் செய்யும் சீட்கள், 360-டிகிரி கேமரா, 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     லெக்சஸ் இ.எஸ். பேஸ்லிப்ட்

    இந்த கார் 2.5 லிட்டர், 4 சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் மற்றும் 16 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது 215 பி.ஹெச்.பி. திறன், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த காரில் முன்புற டிரைவ் வசதி மற்றும் சி.வி.டி. யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் லெஜண்டர் 4x4 மாடல் 4 சிலிண்டர் டீசல் என்ஜினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் லெஜண்டர் 4x4 மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 42.33 லட்சம் ஆகும். ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட லெஜண்டர் 4x2 மாடல் விலை ரூ. 37.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் டொயோட்டா லெஜண்டர் 4x2 மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய பார்ச்சூனர் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் 2700 லெஜண்டர் யூனிட்களை டொயோட்டா விற்பனை செய்து உள்ளது. 

     டொயோட்டா லெஜண்டர்

    புதிய லெஜண்டர் மாடலில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 201 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.700 மாடல் வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்.யு.வி.700 மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது வேரியண்ட்கள் ஏ7 வடிவில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. 

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 புதிய வேரியண்ட்களுக்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 7) காலை 10 மணிக்கு துவங்குகிறது. புதிய எக்ஸ்.யு.வி.700 ஏ7 மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் விலை ரூ. 19.99 லட்சம் என்றும் ஆல்-வீல் டிரைவ் மாடல் விலை ரூ. 22.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    புதிய வேரியண்ட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் வெர்ஷனில் 2 லிட்டர் எம் ஸ்டேலியன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 197 பி.ஹெச்.பி. திறன், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 

    டீசல் வெர்ஷனில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர், எம்ஹாக் யூனிட் உள்ளது. இது 153 பி.ஹெச்.பி. திறன், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
    மஹிந்திராவின் புதிய தலைமுறை தார் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் இந்திய முன்பதிவில் 75 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய விற்பனை துவங்கிய ஒரே வருடத்தில் மஹிந்திரா இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. 

    மஹிந்திரா தார் மாடலுக்கான மொத்த முன்பதிவில் ஆட்டோமேடிக் வேரியண்டை 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாங்கியுள்ளர். 25 சதவீத முன்பதிவுகள் பெட்ரோல் மாடலுக்கு கிடைத்துள்ளது. ஜூலை 2021 மாதத்தில் தார் எஸ்.யு.வி.-க்கான விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டது.

     மஹிந்திரா தார்

    இந்தியாவில் புதிய தார் மாடல் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 150 பி.ஹெச்.பி. திறன், 300 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 130 பி.ஹெச்.பி. திறன், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. 

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
    ×