என் மலர்tooltip icon

    கார்

    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மேட் எடிஷன் மாடல் இந்தியா முழுக்க விற்பனைக்கு வந்துள்ளது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ரேபிட் மேட் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரேபிட் மேட் எடிஷன் துவக்க விலை ரூ. 11.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேட் எடிஷன் மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. காரின் நிறம் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர மேட் எடிஷனில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

     ஸ்கோடா ரேபிட்

    புதிய ரேபிட் மேட் எடிஷன் மாடலிலும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109 பி.ஹெச்.பி. திறன், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் நிசான் மோட்டார் இந்தியா 2816 யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. இதில் நிசான் மற்றும் டேட்சன் நிறுவன மாடல்கள் அடங்கும். 

    இதுவரை நிசான் மேக்னைட் எஸ்.யு.வி. மாடல் 65 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. 2020 ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் இதுவரை அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது. 

     நிசான் மேக்னைட்

    செப்டம்பர் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது நிசான் வாகன விற்பனை கடந்த மாதம் 260 சதவீதம் அதிகரித்தது. மேலும் நிசான் மோட்டார் இந்தியா ஏற்றுமதியிலும் கடந்த மாதம் 5900 யூனிட்களை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 211 யூனிட்களே ஏற்றுமதி செய்யப்பட்டன.

    'பண்டிகை காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்துள்ளனர். எனினும், செமி கண்டக்டர் குறைபாடு காரணமாக கார்களை வினியோகம் செய்வது சவால் நிறைந்த பணியாக மாறி இருக்கிறது,' என நிசான் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹேரியர் கேமோ எடிஷன் மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் கேமோ எடிஷன் விற்பனையை நிறுத்தியது. இந்தியாவில் பண்டிகை காலம் துவங்க இருப்பதை ஒட்டி டாடா மோட்டார்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஹேரியர் கேமோ எடிஷன் மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த மாடல் மொத்தம் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. டாடா ஹேரியர் கேமோ எடிஷன் அதன் ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 30 ஆயிரம் விலை அதிகம் ஆகும். கேமோ எடிஷன் மாடல் ஆலிவ் கிரீன் நிறத்தில் கிடைத்தது. இந்த கார் தோற்றத்தில் ராணுவ வாகனம் போன்றே காட்சியளிக்கிறது.

     டாடா ஹேரியர் கேமோ எடிஷன்

    ஹேரியர் கேமோ எடிஷனில் 2 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 இந்திய விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய எக்ஸ்.யு.வி.700 அனைத்து வேரியண்ட்களின் விலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    அதன்படி மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 விலை ரூ. 11.99 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.09 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 ஒன்பது வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    விற்பனை மையங்களில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் எக்ஸ்.யு.வி.700 கிடைக்கும். புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 7 ஆம் தேதி துவங்குகிறது. வினியோகம் அக்டோபர் 10-இல் துவங்குகிறது.

    புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் 2 லிட்டர் எம் ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. 

    டொயோட்டா நிறுவன கார்களின் விலையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை அக்டோபர் முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்களை ஓரளவு ஈடு செய்ய முடியும்.

    இம்முறை எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. விலை ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும். அடுத்த மாதம் முதல் வாகனங்களுக்கான புதிய விலை பட்டியல் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

     டொயோட்டா கார்

    கடந்த மாதம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து யாரிஸ் செடான் மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக டொயோட்டா அறிவித்தது. 
    டொயோட்டா நிறுவனத்தின் எதிர்கால திட்டத்தின் அங்கமாக புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் யாரிஸ் செடான் மாடல் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. யாரிஸ் மாடலுக்கு மாற்றாக மாருதி சுசுகி சியாஸ் மாடலை தழுவி உருவாகும் புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெல்டா எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது. 

    யாரிஸ் மாடலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து டொயோட்டா அதிகாரப்பூர்வ சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு கிடைக்கும். 

     டொயோட்டா யாரிஸ்

    "செப்டம்பர் 27, 2021 முதல் யாரிஸ் மாடல் இந்திய விற்பனையை நிறுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்யும் டொயோட்டா நிறுவன திட்டத்தின் அங்கமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்," என டொயோட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்.யு.வி.700 அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.

    தற்போது டேஸ்லிங் சில்வர் மற்றும் எலெக்ட்ரிக் புளூ நிற எக்ஸ்.யு.வி.700 மாடல்கள் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் 2 லிட்டர் எம் ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை சி வடிவ எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாக் லைட்கள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டாடா பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் அந்நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதே தொழில்நுட்பம் கொண்ட நெக்சான் இ.வி. 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து டிகோர் இ.வி. பேஸ்லிப்ட் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. டிகோர் இ.வி.  மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் டி எலெக்ட்ரிக் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. 

     டாடா எலெக்ட்ரிக் வாகனம்

    'சாலையில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எனும் மைல்கல் எங்களின் புதுமையான எலெக்ட்ரிக் வாகனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கின்றன என்பதை நிரூபிக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க நினைத்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.'

    'எங்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை நீட்டிக்க உத்வேகம் அளித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து மேலும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவர்,' என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார். 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் டாடா பன்ச் மாடல் மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் சிட்ரோயன் சி3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய பன்ச் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரலாம். டாடா பன்ச் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     டாடா பன்ச்

    புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை டாடா நிறுவனம் தனது ஆல்பா-ஆர்க் பிளாட்பார்மில் உருவாக்கி இருக்கிறது. இதன் வடிவமைப்பு இமேக்ட் 2.0 டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் மல்டி-பன்ஷன் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்படும் என தெரிகிறது.
    லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்.யு.வி. மட்டும் இந்திய விற்பனையில் குறிப்பிட்ட யூனிட்களை பதிவு செய்தது.

    லம்போர்கினி நிறுவனம் இந்திய விற்பனையில் 300 யூனிட்களை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் லம்போர்கினி தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது லம்போர்கினி தினத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 

    லம்போர்கினி தின கொண்டாட்டங்கள் வார இறுதி நாட்களில் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிக வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு லம்போர்கினி கார்களை ஓட்டி மகிழ்ந்தனர். இத்துடன் பூனே, ஹம்பி மற்றும் டெல்லியில் பிரத்யேக விருந்து உபசரிப்பும் வழங்கப்பட்டது.

     லம்போர்கினி கார்

    இத்தாலி நாட்டு சூப்பர் கார் உற்பத்தியாளரான லம்போர்கினி உருஸ் கேப்சியூல், ஹரிகேன் எஸ்.டி.ஒ., ஹரிகேன் இவோ ஆர்.டபிள்யூ.டி. ஸ்பைடர் மற்றும் உருஸ் கிராபைட் கேப்சியூல் போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது. விற்பனையான 300 யூனிட்களில் 100 யூனிட்கள் உருஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அல்ட்ரோஸ் சி.என்.ஜி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்களின் சி.என்.ஜி. வேரியண்ட் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சி.என்.ஜி. மாடல்கள் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சமீபத்தில் அல்ட்ரோஸ் சி.என்.ஜி. மாடல் சோதனை செ்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்தியாவில் அல்ட்ரோஸ் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

     டாடா கார்

    இதில் சி.என்.ஜி. கிட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களில் சி.என்.ஜி. கிட் வழங்கப்படாது என தெரிகிறது.
    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ நியோ, ஸ்கார்பியோ மற்றும் மராசோ மாடல்கள் விலையை மாற்றியது.


    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை இம்மாதமே அமலாகிறது. 2021 ஆண்டில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை நான்காவது முறையாக உயர்த்தி இருக்கிறது.

    விலை உயர்வின் படி மஹிந்திரா மராசோ எம்.பி.வி. மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 12 ஆயிரமும், எம் பிளஸ் வேரியண்ட் ரூ. 13 ஆயிரமும், டாப் எண்ட் மாடலான எம்ஜி பிளஸ் வேரியண்ட் ரூ. 14 ஆயிரமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     மஹிந்திரா பொலிரோ நியோ

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பொலிரோ நியோ மாடலின் என்10 மற்றும் என்10 ஒ வேரியண்ட்கள் விலை ரூ. 30 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 18 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    ×