என் மலர்tooltip icon

    கார்

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ நியோ, ஸ்கார்பியோ மற்றும் மராசோ மாடல்கள் விலையை மாற்றியது.


    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை இம்மாதமே அமலாகிறது. 2021 ஆண்டில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை நான்காவது முறையாக உயர்த்தி இருக்கிறது.

    விலை உயர்வின் படி மஹிந்திரா மராசோ எம்.பி.வி. மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 12 ஆயிரமும், எம் பிளஸ் வேரியண்ட் ரூ. 13 ஆயிரமும், டாப் எண்ட் மாடலான எம்ஜி பிளஸ் வேரியண்ட் ரூ. 14 ஆயிரமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     மஹிந்திரா பொலிரோ நியோ

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பொலிரோ நியோ மாடலின் என்10 மற்றும் என்10 ஒ வேரியண்ட்கள் விலை ரூ. 30 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 18 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இம்மாதம் கார்களுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் புதிய ரெனால்ட் கார் வாங்குவோருக்கு வழங்கப்படுகின்றன. சிறப்பு சலுகைகளுடன் ஆறு மாதங்களுக்கு மாத தவணை விடுமுறை வசதியும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ரெனால்ட் ரீலிவ் (R.E.Li.V.E) ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை ரெனால்ட் வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஸ்கிராப் செய்து அதற்கு சிறந்த மதிப்பீட்டை பெற முடியும். இதை புதிய கார் வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் மாடல்களுக்கு பொருந்தும்.

    ரெனால்ட் க்விட்

    தள்ளுபடி ரூ. 10 ஆயிரம்
    எக்சேன்ஜ் போனஸ் ரூ. 20 ஆயிரம்
    கார்ப்பரேட் போனஸ் ரூ. 10 ஆயிரம்

    ரெனால்ட் டிரைபர் 2020 & 2021

    2020 மாடல் தள்ளுபடி ரூ. 25 ஆயிரம்
    எக்சேன்ஜ் பலன் ரூ. 25 ஆயிரம்
    கார்ப்பரேட் பலன் ரூ. 10 ஆயிரம்

    2021 மாடல் தள்ளுபடி ரூ. 15 ஆயிரம்
    எக்சேன்ஜ் போனஸ் ரூ. 25 ஆயிரம்
    கார்ப்பரேட் பலன் ரூ. 10 ஆயிரம்

    ரெனால்ட் டஸ்டர்

    ரெனால்ட் டஸ்டர் 

    தள்ளுபடி ரூ. 20 ஆயிரம்
    எக்சேன்ஜ் போனஸ் ரூ. 30 ஆயிரம்
    கார்ப்பரேட் பலன் ரூ. 30 ஆயிரம்

    ரெனால்ட் கைகர் லாயல்டி பலன் ரூ. 90 ஆயிரம்
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 மாடல் விரைவில் இந்த என்ஜினுடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் 130 பி.ஹெச்.பி. திறன் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே என்ஜின் எக்ஸ்.யு.வி.300 ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் வடிவில் ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    எக்ஸ்.யு.வி.300 ஸ்போர்ட்ஸ் மாடல் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலையில், இந்த என்ஜின் எக்ஸ்.யு.வி.300 ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 130 பி.ஹெச்.பி. திறன், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

    தற்போதைய எக்ஸ்.யு.வி.300 மாடல் - டபிள்யூ4, டபிள்யூ6, டபிள்யூ8 மற்றும் டபிள்யூ8 ஒ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 130 பி.ஹெச்.பி. என்ஜின் டாப் எண்ட் மாடல்களில் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் 2021 கார்னிவல் மாடல் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் 2021 கார்னிவல் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கார்னிவல் மாடலின் துவக்க விலை ரூ. 24.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த எம்.பி.வி. மாடல் முந்தைய வேரியண்டை விட பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    2021 கியா கார்னிவல் விலை விவரம்

    பிரீமியம் 7 சீட்டர் ரூ. 24.95 லட்சம்
    பிரீமியம் 8 சீட்டர் ரூ. 25.15 லட்சம்
    பிரெஸ்டிஜ் 7 சீட்டர் ரூ. 29.49 லட்சம்
    பிரெஸ்டிஜ் 8 சீட்டர் ரூ. 29.95 லட்சம்
    லிமோசின் 7 சீட்டர் ரூ. 31.99 லட்சம்
    லிமோசின் பிளஸ் 7 சீட்டர் ரூ. 33.99 லட்சம்

     2021 கியா கார்னிவல்

    புதிய கார்னிவல் மாடலில் கியா இந்தியா புது கார்ப்பரேட் லோகோ கொண்டிருக்கிறது. கார்னிவல் லிமோசின் மாடலில் லெதர் இருக்கைகள், 8 இன்ச் இன்போடெயின்மெண்ட் , ஓ.டி.ஏ. மேப் அப்டேட்கள், யு.வி.ஓ. சப்போர்ட், இ.சி.எம். மிரர், 10.1 இன்ச் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன.

    2021 கியா கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. திறன், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    கியா நிறுவனத்தின் சொனெட் எஸ்.யு.வி. மாடல் ஆறு ஏர்பேக், வென்டிலேடெட் சீட்களை கொண்டிருக்கிறது.


    கியா இந்தியா நிறுவனம் தனது சொனெட் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்ததாக அறிவித்து இருக்கிறது. புது மைல்கல் விற்பனை துவங்கிய ஒரே வருடத்தில் எட்டப்பட்டுள்ளது. கியா இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் சொனெட் மாடல் மட்டும் 32 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

    இந்தியாவில் சொனெட் மாடல் 17 வேரியண்ட் மற்றும் பல்வேறு என்ஜின், டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது. சொனெட் மாடல் மொத்த விற்பனையில் டாப் எண்ட் ஜிடி லைன் 64 சதவீதமும், புதிய ஐ.எம்.டி. கியர்பாக்ஸ் மாடல் 26 சதவீதமும் பெற்று இருக்கிறது.

     கியா சொனெட்

    இந்த எஸ்.யு.வி. மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், வாய்ஸ் கண்ட்ரோல் எலெக்ட்ரிக் சன்ரூப், யு.வி.ஓ. கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குர்கா பி.எஸ்.6 மாடல் அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.


    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 குர்கா ஆப் ரோடு எஸ்.யு.வி. மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. புதிய பி.எஸ்.6 குர்கா மாடல் முழுமையாக மாற்றப்பட்டு பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    புதிய குர்கா பி.எஸ்.6 மாடல் ரெட், கிரீன், வைட், ஆரஞ்சு மற்றும் கிரே என ஐந்துவித நிறங்களில் கிடைக்கிறது. வெளிப்புற தோற்றம் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

     போர்ஸ் குர்கா

    2021 குர்கா மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பிளாக்டு-அவுட் முன்புற பம்ப்பர், என்ஜின் பேஷ் பிளேட், பாக் லேம்ப்கள், பெண்டர்களின் மேல் இன்டிகேட்டர்கள், கிளாடிங் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த மாடல் 2.6 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் 2015 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் இந்திய விற்பனையில் 25 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஸ்விப்ட் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

    இந்திய பயணிகள் வாகனங்கள் பிரிவில் 2020-21 ஆண்டு அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஸ்விப்ட் இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு ஸ்விப்ட் மாடல் 5 லட்சம் யூனிட்கள் விற்பனையை எட்டியது. பின் 2013-இல் பத்து லட்சம், 2016-இல் 15 லட்சம், 2018-இல் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்து தற்போது 25 லட்சம் யூனிட்களை எட்டியுள்ளது. 

     மாருதி சுசுகி ஸ்விப்ட்

    "ஸ்விப்ட் சீரிசில் ஒவ்வொரு புது தலைமுறை மாடலும் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றன. இதுவரை இந்தியாவில் 25 லட்சத்திற்கும் அதிக ஸ்விப்ட் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன." என்று மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். 
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 10 லட்சம் பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரிவில் புதிய எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் போஜுன் இ200 மாடலை தழுவி உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 39 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

     எம்ஜி கார்

    இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடல் 3 அல்லது 4 சீட்டர் வடிவில் வெளியாகும் என தெரிகிறது. புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் இசட்.எஸ். இ.வி. மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பி.எஸ்.6 குர்கா மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது.


    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 போர்ஸ் குர்கா மாடலை செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பி.எஸ்.6 மாடல் மேம்பட்ட என்ஜின், ஸ்டைலிங் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    குர்கா பி.எஸ்.6 மாடலில் மேம்பட்ட 2.6 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     போர்ஸ் குர்கா டீசர்

    புதிய போர்ஸ் குர்கா மாடலின் முன்புறம் மேம்பட்ட கிரில், புது ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புறம் புதிய பம்ப்பர் டிசைன் வழங்கப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட டெயில் லேம்ப், டெயில் கேட்டில் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் டையர் வழங்கப்படுகிறது.

    ஆடி நிறுவனத்தின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றன.


    ஆடி நிறுவனம் இ டிரான் ஜி.டி. சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவை துவங்கியது. புதிய எலெக்ட்ரிக் கூப் மாடல்களின் முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். இ டிரான் ஜி.டி. மாடலுடன் ஆடி நிறுவனம் ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

    ஆடி இ டிரான் ஜி.டி. மற்றும் ஆடி ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மாடல்களில் 800 வோல்ட் ஆர்கிடெக்ச்சர் உள்ளது. இந்த காரை 270 கிலோவாட் திறன் கொண்ட டி.சி. சார்ஜர்களை கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். இ டிரான் மாடல்களை 5 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 22.5 நிமிடங்களே ஆகும்.

     ஆடி இ டிரான் ஜி.டி.

    இ.பி.ஏ. சோதனைகளில் ஆடி இ டிரான் ஜி.டி. முழு சார்ஜ் செய்தால் 383 கிலோமீட்டர்களும், ஆடி ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மாடல் 373 கிலோமீட்டர்களும் செல்லும் என தெரியவந்துள்ளது. ஓவர்பூஸ்ட் மோடில் இ டிரான் ஜி.டி. மாடல் 637 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. ஆடி ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

    மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் ரூ. 22,500 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலை செப்டம்பர் மாதத்தில் உயர்த்தப்போவதாக மாருதி சுசுகி நிறுவனம் கடந்த மாதமே அறிவித்தது. அந்த வரிசையில், மாருதி சுசுகி கார் மாடல்கள் விலை 1.9 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    இதன் காரணமாக கார் மாடல்கள் விலை ஆயிரம் ரூபாயில் துவங்கி, அதிகபட்சம் ரூ. 22,500 வரை உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு மாடலின் விலை உயர்வு விவரம் பின்வருமாறு..,

     மாருதி சுசுகி கார்

    ஆல்டோ மாடலுக்கு ரூ. 16,100
    வேகன்ஆர் மாடலுக்கு ரூ. 12,500
    எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 7,500
    விட்டா பிரெஸ்ஸா மாடலுக்கு ரூ. 10 ஆயிரம்
    டிசையர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம்
    ஸ்விப்ட் மாடலுக்கு ரூ. 13 ஆயிரம்
    பலேனோ மாடலுக்கு ரூ. 15,200
    இக்னிஸ் மாடலுக்கு ரூ. 14,680
    சியாஸ் மற்றும் எஸ் கிராஸ் மாடல்களுக்கு ரூ. 20,500
    டூர் எஸ் மாடலுக்கு ரூ. 20,300
    ஈகோ மாடலுக்கு ரூ. 22,500
    எர்டிகா மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் 
    எக்ஸ்.எல்.6 மாடலுக்கு ரூ. 12,311

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடியை அறிவித்து இருக்கிறது.


    இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடியை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் அரினா மற்றும் நெக்சா விற்பனை மையங்களில் கிடைக்கும் வாகனங்களுக்கு பொருந்தும். 

    மாருதி சுசுகி அரீனா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல்களுக்கும் ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 2 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எர்டிகா எம்.பி.வி. மாடலுக்கு மட்டும் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இத்துடன் சி.என்.ஜி. மாடல்களுக்கும் எந்த சலுகையும் பொருந்தாது. 

     மாருதி சுசுகி கார்

    நெக்சா விற்பனை மையங்களில் கிடைக்கும் கார்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை, ரூ. 5 ஆயிரம் வரையிலான கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
    ×