search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300
    X
    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

    மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் இந்த பெயரில் வெளியாகும் என தகவல்

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 இ.வி. மாடல் இந்த பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.


    மஹிந்திரா நிறுவனம் பல்வேறு பயணிகள் வாகனங்களை புதிதாக உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் 13 புதிய கார்கள், எட்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் அடங்கும். இவை அனைத்தையும் 2027 ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் எக்ஸ்.யு.வி.400 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

    மஹிந்திரா குழுமத்தின் ஆட்டோ மற்றும் ஃபார்ம் பிரிவு நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜுரிக்கர் செய்தியாளர்களுடன் உரையாடும் போது எக்ஸ்.யு.வி.300 இ.வி. மாடல் எக்ஸ்.யு.வி.400 பெயரில் அறிமுகம் செய்வது பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது என தெரிவித்தார். எனினும், இதுபற்றிய இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    முன்னதாக எக்ஸ்.யு.வி.400 பெயரில் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டது. இந்த மாடல் போர்டு நிறுவனத்தின் பி பிளாட்பார்மில் உருவாகும் என்றும் கூறப்பட்டது. பின் மஹிந்திரா மற்றும் போர்டு நிறுவனங்கள் இடையிலான கூட்டணி அமையாத காரணத்தால், எக்ஸ்.யு.வி.300 இ.வி. மாடலை எக்ஸ்.யு.வி.400 பெயரில் அறிமுகம் செய்வது பற்றிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×