என் மலர்
கார்
- டேஷ்போர்டில் ஃபிரீ ஸ்டான்டிங் டிஸ்ப்ளே உள்ளன.
- பவர்டிரெய்னை பொருத்தவரை முன்பக்கத்தில், 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் மாடல் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட இ விட்டாரா, சமீபத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய இ விட்டாரா, மாருதி சுசுகியின் EVX கான்செப்ட்டில் இருந்து அதன் வடிவமைப்பைப் பெறுகிறது. கான்செப்ட் காரின் பெரும்பாலான வடிவமைப்பு அதன் உற்பத்தி மாடலிலும் காணப்படுகிறது. இந்த எஸ்யூவி Y-வடிவ DRLகளுடன் ஆங்குலர் ஹெட்லேம்ப் கிளஸ்டர்களைப் பெறுகிறது. அதே நேரத்தில் வீல் ஆர்ச், முன் மற்றும் பின்புற பம்பர்கள் மற்றும் கதவுகளின் கீழ் கிளாடிங்கின் விரிவான பயன்பாட்டையும் கொண்டுள்ளது. கனெக்ட்டட் டெயில் லைட்களும் வழங்கப்பட்டுள்ளன.
கேபினுக்குள், வேறு எந்த மாருதி மாடலிலும் காணப்படாத புதிய கேபின் வடிவமைப்பை இ விட்டாரா கொண்டு வருகிறது. டேஷ்போர்டில் ஃபிரீ ஸ்டான்டிங் டிஸ்ப்ளே உள்ளன.
அம்சங்களை பொறுத்தவரை, சர்வதேச சந்தைகளில் இ விட்டாரா மாடல் ADAS, ஆட்டோ-டிம்மிங் இன்னர் ரியர்-வியூ மிரர், டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட்டிங், நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற தொழில்நுட்பங்களுடன் வருகிறது.
மேலும் 19-இன்ச் வீல்கள், 10-வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர்டு டிரைவர் இருக்கை, இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், முன்புறத்தில் வென்டிலேட்டெட் இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஃபாக் லைட்டுகள் மற்றும் 360-டிகிரி கேமராக்கள் கொண்டிருக்கிறது.

இந்திய சந்தைக்கான இ விட்டாரா மாடலில் எந்தெந்த அம்சங்கள் வழங்கப்படும் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. பவர்டிரெய்னை பொருத்தவரை முன்பக்கத்தில், 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம்.
இதன் பேஸ் மாடலில் உள்ள மோட்டார் 142 bhp பவர் மற்றும் 192.5 Nm டார்க் வெளிப்படுத்தும் என்றும் டாப் எண்ட் மாடல் 172 bhp பவர் வெளிப்படுத்தும். சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் வழங்கப்படுகிறது. இருப்பினும் அது இந்தியாவிற்கும் வருமா என்பதைப் பார்க்க வேண்டும். புதிய இ விட்டரா மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 428 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளது.
புதிய இ விட்டாரா மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா BE 6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் மாருதி நிறுவனத்தின் நெக்சா டீலர்ஷிப் மூலம் விற்பனைக்கு வரும்.
- டிரைவருக்கான ஆக்டிவ் சீட், சரவுண்ட் லைட்கள் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றுடன் எலெக்ட்ரிக் முறையில் இருக்கை சரிசெய்யும் வசதியை பெறுகிறது.
- இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.
மினி இந்தியா நிறுவனம் புதிய கண்ட்ரிமேன் SE All4 காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கண்ட்ரிமேன் விலை ரூ.66.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CBU வழியில் இந்தியா கொண்டு வரப்பட்ட இந்த மாடல் தற்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களிலும் முன்பதிவு செய்யலாம். இந்த காரின் டெலிவரி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
வெளிப்புறத்தில், 2025 கன்ட்ரிமேன் SE All4 புதிய கிரில், ஹெட்லைட்களுக்கான புதிய வடிவமைப்பு, செதுக்கப்பட்ட பானட், ஜெட் பிளாக் ரூஃப், ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. JCW டிரிமில் மட்டுமே வழங்கப்படும் இது, ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரைப்ஸ், ரூஃப் ரெயில்கள், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் வீல் ஆர்ச்கள் போன்ற கருப்பு நிற கூறுகளைக் கொண்டுள்ளது.
லெஜண்ட் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய இரண்டு நிற ஆப்ஷன்களும் ஜெட் பிளாக்கில் முடிக்கப்பட்ட ரூஃப் மற்றும் மிரர் கேப்களால் பூர்த்தி செய்யப்படுகின்றன. மேலும், இந்த கார் LED DRLகள், ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் லைட்களுக்கு பிரத்யேக சிக்னேச்சர் மோட்களைப் பெறுகிறது.

புதிய மினி கன்ட்ரிமேன் SE All4 இன் உட்புறம் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் டேஷ்போர்டு டிரிம்கள் போன்ற JCW-க்கு ஏற்ற அம்சங்களுடன் வருகிறது. இது டிரைவருக்கான ஆக்டிவ் சீட், சரவுண்ட் லைட்கள் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றுடன் எலெக்ட்ரிக் முறையில் இருக்கை சரிசெய்யும் வசதியை பெறுகிறது. இந்த மாடலில் சிக்னேச்சர் ரவுண்ட் OLED டிஸ்ப்ளே, மினி டிஜிட்டல் கீ, HUD, போன் மிரரிங், குரூயிஸ் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா, ஆக்டிவ் கூலிங் ஏர் டக்ட்ஸ், மல்டிபிள் ஏர்பேக்குகள், TPMS மற்றும் ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.
கன்ட்ரிமேன் SE All4 மாடலில் 66.45kWh பேட்டரி பேக் உள்ளது, இது இரட்டை மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 440 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் உள்ள மின் மோட்டார்கள் 313bhp பவர் மற்றும் 494Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.
- புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் ஹூண்டாயின் 1.0 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- 118bhp பவர், 172Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வென்யூ N லைன் விலை ரூ.10.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் மூன்று வேரிண்ட்கள் மற்றும் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாடுகள் தொடங்கியதில் இருந்து அதன் புனே ஆலையில் இருந்து வெளிவரும் முதல் புதிய ஹூண்டாய் தயாரிப்பு இதுவாகும்.
N லைன் மாடல் வழக்கமான வென்யூவுடன் உள்புறம் மற்றும் வெளிப்புற தோற்றத்தின் பெரும்பகுதியைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பம்பர்கள், சக்கரங்கள் மற்றும் நிறங்கள் மட்டும் N லைன் மாலுக்கு ஏற்ப வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களைப் பார்க்கும்போது, இது வென்யூ மாடலின் HX8 மற்றும் HX10 வேரியண்ட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதே அம்சப் பட்டியலைப் பெற்று இருப்பதை கவனிக்க முடியும்.
டாப் என்ட் N10 வேரியண்ட் லெவல் 2 ADAS, இரட்டை வளைந்த 12.3-இன்ச் பனோரமிக் டிஸ்ப்ளே, ஆட்டோ IRVM, LED இன்டிகேட்டர்கள், பவர்டு டிரைவர் சீட், ரிக்ளைனிங் ரியர் சீட், பின்புற ஜன்னல் சன்ஷேட், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம், ஹூண்டாய் ப்ளூ-லிங்க் மற்றும் க்ளோவ் பாக்ஸ் கூலிங் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.

புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் ஹூண்டாயின் 1.0 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 118bhp பவர், 172Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டாப் என்ட் N10 வேரியண்டில் டிராக்ஷன் மற்றும் டிரைவ் மோட்களுடன் வருகிறது.
இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் கியா சொனெட் X லைன், டாடா நெக்சான் ரெட் டார்க் ரேஞ்ச், மஹிந்திரா XUV 3XO டர்போ ரேஞ்ச், மாருதி Fronx டர்போ, ஸ்கோடா கைலாக் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவை போட்டியாக அமைகின்றன.
- 1983 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கியது.
- இந்த மைல்கல்லை அடைய மாருதி சுசுகி நிறுவனத்திற்கு 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசுகி படைத்துள்ளது.
1983 ஆம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கிய மாருதி சுசுகி இந்த மைல்கல்லை அடைய 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.
விற்பனையான 3 கோடி கார்களில் அதிகபட்சமாக Alto மாடல் 47 லட்சம், Wagon R மாடல் 34 லட்சம், Swift மாடல் 32 லட்சம் விற்றுள்ளதாக மாருதி சுசுகி கூறியுள்ளது.
இதுகுறித்து பேசிய மாருதியின் தலைமை நிர்வாக அதிகாரி, "இந்தியாவில் 1,000 பேருக்கு 33 கார்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் எங்களுக்கு இன்னும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது" என்று தெரிவித்தார்.
- ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
- புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் நடைபெற்று வரும் மோட்டார் வாகன கண்காட்சியில், Fronx Flex Fuel கான்சப்ட் காரை சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியது.
இந்தியச் சந்தையில் உள்ள Fronx காரில் 1.2 லிட்டர் என்ஜின் K சீரிஸ் டூயல் ஜெட் என்ஜின் உள்ளது. 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்டிலும் கிடைக்கிறது. ஆனால், ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Fronx காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது.
இந்த யூனிட் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வசசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை விரைவில் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தக்கூடிய காரை சுசூகி நிறுவனம் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஹூண்டாய் Grand i10 Nios மாடல் ரூ.5.47 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
- ஹூண்டாய் i20 நைட் எடிஷன் மாடல் ரூ.9.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் நிறைய பட்ஜெட் கார்களை அறிமுகம் செய்துள்ளது.
அவ்வகையில், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களின் பட்டியல்:
1. ஹூண்டாய் i20 - ரூ.6.80 லட்சம்
2. ஹூண்டாய் Aura - ரூ.5.98 லட்சம்
3. ஹூண்டாய் Exter - ரூ.5.68 லட்சம்
4. ஹூண்டாய் Grand i10 Nios - ரூ.5.47 லட்சம்
5. ஹூண்டாய் i20 N-Line - ரூ.9.15 லட்சம்
6. ஹூண்டாய் Venue - ரூ.7.90 லட்சம்
- எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் எலிவேட் மாடலின் புதிய டாப் எண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. எலிவேட் ADV என்று அழைக்கப்படும் புதிய வேரியண்ட் ஸ்போர்ட் தோற்றத்தையும், தனித்துவமான காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய எலிவேட் மாடலின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலை ரூ. 15.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இதன் CVT டூயல்-டோன் மாடன் விலை ரூ. 16.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ADV மாடல் கிளாஸ் பிளாக் ஆல்பா-போல்ட் பிளஸ் முன்பக்க கிரில், ஆரஞ்சு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஹூட் டெக்கல், ORVMகள் மற்றும் ஆரஞ்சு சிறப்பம்சங்களுடன் பிளாக் அலாய் வீல்கள் என பிரத்யேக ஸ்டைலிங் அப்டேட்களுடன் வருகிறது. இத்துடன் ADV பேட்ஜ்கள், ஆரஞ்சு ஃபாக் லைட் மற்றும் ஆரஞ்சு நிற அக்சென்ட்களுடன் கூடிய பின்புற பம்பர் ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகின்றன.
எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில், எலிவேட் ADV மாடலில் ஹோண்டா சென்சிங் ADAS பொருத்தப்பட்டுள்ளது. இதில் லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன. நிலையான பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், லேன் வாட்ச் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ISOFIX மவுண்ட் ஆகியவை அடங்கும்.
எலிவேட் ADV மாடல், மீடியோராய்டு கிரே மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் நிறங்களில், சிங்கில் டோன் மற்றும் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது.
- இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற சந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டது.
- பாதுகாப்பு உதவி பிரிவில், Fronx 21 புள்ளிகளில் 16.50 புள்ளிகளைப் பெற்றது.
சுசுகி நிறுவனத்தின் Fronx மாடல் பாதுகாப்பு சோதனையில் அசத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தால் (ASEAN NCAP) சுசுகி Fronx மாடல் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசிய சந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் Fronx, ஒட்டுமொத்தமாக 77.70 புள்ளிகளைப் பெற்றது.
மேலும் சந்தையைப் பொறுத்து, இந்த மாடல் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளின் (ADAS) ஆப்ஷனையும் பெறுகிறது. இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் Fronx மாடலில் தற்போது வரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக முதிய பயணிகளுக்கான பாதுகாப்பில், Fronx 32 புள்ளிகளுக்கு 29.37 புள்ளிகளைப் பெற்றது.
குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பிற்கு (COP), Fronx 51 புள்ளிகளுக்கு 38.94 புள்ளிகளைப் பெற்றது. இதற்காக இந்த கார் 18 மாத (பின்புறம் எதிர்கொள்ளும்) மற்றும் மூன்று வயது (முன்னோக்கி எதிர்கொள்ளும்) டம்மிகளுடன் வாகனம் சோதிக்கப்பட்டது.
மோட்டார்சைக்கிள் ஓட்டுநரின் பாதுகாப்பை பொருத்தவரை, பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஹெட்லைட் செயல்திறன் மற்றும் ரைடர் விசிபிலிட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய Fronx 16 புள்ளிகளுக்கு 8.00 புள்ளிகளைப் பெற்றது. சோதிக்கப்பட்ட மாறுபாடு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் ஆகும். இது இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற சந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டது.

பாதுகாப்பு உதவி பிரிவில், Fronx 21 புள்ளிகளில் 16.50 புள்ளிகளைப் பெற்றது. அனைத்து வகைகளிலும் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), முன் மற்றும் பின் பயணிகளுக்கான சீட் பெல்ட் நினைவூட்டல்கள், குழந்தை இருக்கைகளுக்கான ISOFIX மவுண்ட்கள் மற்றும் பாதசாரி-பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
ஆட்டோனமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB), லேன் டிபார்ச்சர் வார்னிங் (LDW), லேன் கீப் அசிஸ்ட் (LKA), ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் (FCW), பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் (BSD) மற்றும் ஆட்டோ ஹை பீம் (AHB) போன்ற ADAS அம்சங்கள் சந்தையைப் பொறுத்து தரநிலையாகவோ அல்லது விருப்பமாகவோ வழங்கப்படுகின்றன.
- இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- இந்த கார் ஏழு இருக்கை அமைப்பிலும் கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம், கேரன்ஸ் சீரிசில் CNG வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 11.77 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. டீலர் தரப்பில் ஃபிட்டிங் செய்து தரப்படும் கேரன்ஸ் CNG பிரீமியம் (O) வேரியண்டின் விலையை விட ரூ. 77,900 அதிகம் ஆகும். இதன் விலை ரூ. 10.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கேரன்ஸ் மாடலில் உள்ள CNG கிட் அரசு அனுமதி பெற்று லோவாடோ வழங்குகிறது. இது மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் மூன்றாம் தரப்பு உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் தொழில்நுட்ப அம்சங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 113bhp பவர் மற்றும் 144Nm டார்க் வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் ஏழு இருக்கை அமைப்பிலும் கிடைக்கிறது.

அம்சங்களைப் பொறுத்தவரை, கியா கேரன்ஸ் CNG காரில் 8-இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, வழிகாட்டுதல்களுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 12.5-இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆறு ஏர்பேக்குகள், 5 டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், வீல் கவர்களுடன் கூடிய 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் மற்றும் TPMS போன்ற அம்சங்கள் உள்ளன.
- விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி பொறியியல் கல்லூரி இணைந்து தயாரிப்பு
- ஸ்ரீ சத்யத்மதீர்த்த சுவாமிஜி ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்தார்.
விப்ரோ நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து உருவாக்கிய ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூருவில் இயக்கப்பட்டது
ஆர்.வி. பொறியியல் கல்லூரிக்கு சென்ற ஆன்மீகத் தலைவர் உத்தராதி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்யத்மதீர்த்த சுவாமிஜி ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்தார்.
ஓட்டுநர் இல்லாத கார் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்றும் அடுத்த சில மாதங்களில் இந்த கார் முறையாக அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டுநர் இல்லாமல் கார் இயக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
- முற்றிலும் புதிய வென்யூ மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.
- புதிய வென்யூ அதே கப்பா 1.2 MPi பெட்ரோல், 1.0 TGDi பெட்ரோல் மற்றும் 1.5 U2 CRDi டீசல் மோட்டார்களுடன் கிடைக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய வென்யூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. காஸ்மெடிக் மாற்றங்களைத் தவிர்த்து, புதிய வென்யூ பரிமாண ரீதியாக அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் வென்யூ மாடலை விட புதிய வென்யூ 48 மிமீ உயரமும், 30 மிமீ அகலமும் கொண்டுள்ளது.
முற்றிலும் புதிய வென்யூ மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதிய வென்யூ மாடலை வாடிக்கையளர்கள் ரூ. 25,000 முன்பணம் செலுத்தி, அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்ஷிப் அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
மாற்றங்களை பொருத்தவரை புதிய வென்யூ வெளிப்புறத்தில் குவாட்-பீம் எல்இடி ஹெட்லைட்கள், இரட்டை ஹார்ன் டிஆர்எல்-கள், ஹாரிசன் எல்இடி டெயில் லைட்டுகள், டார்க் குரோம் ரேடியேட்டர் கிரில், பிரிட்ஜ்-டைப் ரூஃப் ரெயில்கள், சி-பில்லர் மற்றும் 'வென்யூ' லோகோ ஆகியவை உள்ளன. உட்புறத்தில், இரட்டை 12.3-இன்ச் கிளஸ்டர், பின்புற ஜன்னல் சன்ஷேடுகள், டூயல்-டோன் லெதர் இருக்கைகள், சரவுண்ட் லைட்கள், டி-கட் ஸ்டீயரிங், பின்புற ஏசி வென்ட்கள் உள்ளன.
புதிய வென்யூ அதே கப்பா 1.2 MPi பெட்ரோல், 1.0 TGDi பெட்ரோல் மற்றும் 1.5 U2 CRDi டீசல் மோட்டார்களுடன் கிடைக்கிறது. இவை 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் அல்லது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
இந்த யூனிட்கள் முறையே 118bhp பவர் / 172Nm டார்க் (1.0 TGDi), 82bhp பவர் /113Nm டார்க் (1.2 MPi), மற்றும் 114bhp பவர் / 250Nm டார்க் (1.5 U2 CRDi) வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.
- சென்டனரி பிரைவேட் கலெக்ஷன் பாரம்பரிய பிளாக் அன்ட் வைட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
- இந்த கார் கிரில்லின் மேல் உள்ள ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி 18 காரட் தங்கத்தில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், 100 ஆண்டுகளை நிறைவு செய்த "ஃபேண்டம்" பெயரை நினைவுகூரும் வகையில், புதிதாக "ஃபேண்டம் சென்டனரி பிரைவேட் கலெக்ஷன்" வெளியிட்டுள்ளது. இது உலகளவில் வெறும் 25 யூனிட்கள் அடங்கிய லிமிட்டெட் எடிஷன் சீரிஸ் ஆகும். இந்த சிறப்பு மாடலை உருவாக்க 40,000 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய லிமிட்டெட் எடிஷன் சீரிஸ் இதுவரை மேற்கொண்ட 'மிகவும் சிக்கலான மற்றும் தொழில்நுட்ப ரீதியில் லட்சியமான பிரைவேட் கலெக்ஷன்' என்று நிறுவனம் கூறுகிறது.
வெளிப்புறத்தில் தொடங்கி, சென்டனரி பிரைவேட் கலெக்ஷன் பாரம்பரிய பிளாக் அன்ட் வைட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் அதன் சூப்பர் ஷாம்பெயின் கிரிஸ்டல் ஃபினிஷ் என்று அழைக்கும் இந்த நிறம் தனித்துவமானது. இந்த கார் கிரில்லின் மேல் உள்ள ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி 18 காரட் தங்கத்தில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இந்த ஹூட் லோகோ லண்டனில் உள்ள ஹால்மார்க்கிங் & அஸே அலுவலகத்தில் இருந்து 'ஃபேண்டம் சென்டனரி' ஹால்மார்க்கைக் கொண்டுள்ளது என்று ரோல்ஸ் ராய்ஸ் கூறுகிறது. ஹூட் லோகோவின் அடிப்பகுதி எனாமல் பூசப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தை முழுமையாக்குவது ரோல்ஸ் ராய்ஸ் பேட்ஜ்கள், இது முதல் முறையாக 24 காரட் தங்கம் மற்றும் வெள்ளை எனாமல், தனித்துவமான 'ஃபேண்டம்' சக்கரங்களுடன் முடிக்கப்பட்டுள்ளது.
கேபினை பொருத்தவரை, உட்புறம் கடந்த கால ஃபேண்டம் மாடல்களில் இருந்து உத்வேகத்தைப் பெறுவதோடு, நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. பின்புற இருக்கைகள் 1926 ஆம் ஆண்டின் 'ஃபேண்டம் ஆஃப் லவ்' ஆல் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஃபேண்டம் வரலாற்றில் இருந்து இடங்கள் மற்றும் கலைப்பொருட்களை சித்தரிக்கும் இருக்கை அப்ஹோல்ஸ்டரியில் அடுக்கு கலைப்படைப்புகள் உள்ளன.






