என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் தில இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் மோட்டார்சைக்கிள் மாடல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வரிசையில், ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
விலை உயர்வின்படி ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடல் துவக்க விலை ரூ. 1,27,284 முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,42,895 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் 346சிசி, சிங்கிள் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புல்லட் 350 மோட்டார்சைக்கிளில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் ட்வின்-சைடெட் ஸ்ப்ரிங், முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா மாடல் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா தனது ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் 2.5 கோடி யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது. 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 20 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை கடந்து இருக்கிறது.

`2001 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல், 100-110சிசி என்ஜின் அல்லது சமீபத்திய சக்திவாய்ந்த 125சிசி என்ஜின் என அனைத்து வேரியண்ட்களும் நம்பிக்கை தரும் வெற்றி பெற்று இருக்கிறது.'
`கடந்த 20 ஆண்டுகளில் ஆக்டிவா மாடல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கிறது. இதற்கு பல்வேறு அம்சங்களை உதாரணமாக கூற முடியும்.' என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அட்சுஷி ஒகாடா தெரிவித்தார்.
ஹோண்டா ஆக்டிவா மாடலில் 109சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.7 பிஹெச்பி பவர், 8.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் மாடலுக்கான புது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போக்ஸ்வேகன் புதிதாக டைகுன் என்ற எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டைகுன் எஸ்யுவி-க்கான டீசரை போக்ஸ்வேகன் வெளியிட்டு இருக்கிறது.
முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மற்ற எஸ்யுவி மாடல்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் 2021 ஆண்டில் அறிமுகமாகும் என போக்ஸ்வேகன் ஏற்கனவே அறவித்து இருந்தது.

புதிய டைகுன் மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதன் முன்புறம் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், செங்குத்தான கிரில், பம்ப்பரில் பாக் லேம்ப் மற்றும் ஸ்கிட் பிளேட் ஹவுசிங் செய்யப்பட்டு இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
பிஎம்டபிள்யூ குழுமத்தின் 2020 வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 2020 ஆண்டு முழுவதும் இந்திய சந்தையில் 6,604 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 6,092 பிஎம்டபிள்யூ யூனிட்களும், 512 மினி கார்களும் அடங்கும். இதே ஆண்டு பிஎம்டபிள்யூ மோட்டராட் 2563 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து இருக்கிறது.
கடந்த ஆண்டு பிஎம்டபிள்யூ எக்ஸ்1, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் பிஎம்டபிள்யூ 5 உள்ளிட்டவை அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதுதவிர புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்7 அனைத்து பகுதிகளிலும் அமோக வரவேற்பு பெற்றது.

இத்துடன் வழக்கம்போல் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடல்கள் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஒட்டுமொத்த விற்பனையில் மினி கன்ட்ரிமேன் மட்டும் 40 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. மின் ஹேட்ச் மற்றும் மினி கன்வெர்டிபில் போன்ற மாடல்கள் 23 சதவீதம் விற்பனையாகி இருக்கின்றன.
இருசக்கர வாகனங்களை பொருத்தவரை பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் உள்ளிட்ட மாடல்கள் ஒட்டுமொத்த ஆண்டு விற்பனையில் 80 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன.
இவைதவிர பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் ஜிஎஸ்ஏ, பிஎம்டபிள்யூ எப் 750 மற்றும் 850 ஜிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் உள்ளிட்டவையும் விற்பனையாகி இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனம் குறைந்த விலை ஜூப்பிட்டர் புது வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஷீட் மெட்டல் வீல் வேரியண்ட் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 63,497 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய வேரியண்ட் இதுவரை வெளியாகி இருக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடல்களை விட குறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கிறது. மேலும் புது வேரியண்ட் தவிர சந்தையில் விற்பனையாகும் ஜூப்பிட்டர் மாடல்கள் விலை ரூ. 1645 முதல் ரூ. 2770 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

டிவிஎஸ் ஜூப்பிட்டர் புது வேரியண்ட் 109.7 சிசி, ஏர் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 7.3 பிஹெச்பி பவர், 8.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 6 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டிருக்கிறது.
சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இருபுறங்களில் டிரம் பிரேக் மற்றும் முன்புறம் டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் உற்பத்தி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சபாரி மாடலை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எனினும், அந்த விழாவில் இந்த மாடல் கிராவிடாஸ் என அழைக்கப்பட்டது.
தற்சமயம் புதிய சபாரி மாடல் உற்பத்தி துவங்கியதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புகைப்படத்தில் இருக்கும் கார் ஸ்டீல் ரிம் கொண்டிருப்பதால், அது லோயர் வேரியண்ட் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய டாடா சபாரி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த எஸ்யுவி மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலின் சில விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்திய சந்தையில் டாடா சபாரி மாடல் இரண்டு தலைமுறைகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் இது அதிக பிரபலமான எஸ்யுவி மாடலாகவும் விளங்கியது. அந்த வகையில், இந்த மாடல் அசத்தலான புது அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியா வந்தடைந்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் இந்தியா வந்தடைந்துள்ளது. இந்த கார் மும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
சோதனை மற்றும் இதர பணிகளுக்காக முதல் மாடல் இந்தியா கொண்டுவரப்பட்டு இருப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் புதிய ஐ பேஸ் மாடலை சார்ஜ் செய்ய பல்வேறு வசதிகளை வழங்க இருப்பதாக ஜாகுவார் தெரிவித்து இருக்கிறது.

டாடா பவர் நிறுவனம் நாடு முழுக்க 200-க்கும் அதிக சார்ஜிங் முனையங்களை நிறுவி இருக்கிறது. இவை அனைத்தும் இ.இசட். சார்ஜ் இவி நெட்வொர்க்கின் கீழ் நிறுவப்பட்டு உள்ளது.
புதிய ஜாகுவார் ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 389 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.
இதில் உள்ள 90 கிலோவாட் பேட்டரி எட்டு வருடங்கள் அல்லது 1,60,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஐந்து வருடங்களுக்கு சர்வீஸ் பேக்கேஜ், ஐந்து ஆண்டுகளுக்கு ஜாகுவார் ரோட்-சைடு அசிஸ்டண்ஸ், 7.4 கிலோவாட் ஏசி வால் மவுண்ட் செய்யப்பட்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி யமஹா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர்களில் யமஹா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. யமஹா நிறுவனத்துக்கு தமிழகம் ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது.
அதன் ஒட்டுமொத்த விற்பனையில் 23 சதவீத பங்களிப்பை தமிழகம் அளிக்கிறது. நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களான 125 சிசி, 150 சிசி, 250 சிசி ஆகியவை வளர்ந்து வரும் சந்தை திறனை கொண்டதாக இருக்கிறது.

இதுதவிர மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் நிறுவனம் வழங்கும் கவர்ச்சிகரமான நிதித் திட்டங்களின் கீழ் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் 5.99 சதவீதம் முதல் குறைந்த வட்டி விகிதத்தை பெறலாம்.
யமஹா பிஎஸ்6 மாடலின் தற்போதைய வரிசையில் 125 சிசி மாடலான பேசினோ 125 எப்ஐ, ரே இசட்ஆர் 125 எப்ஐ மற்றும் ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எப்ஐ மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இத்துடன் 150 சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் ஆர்15 வெர்ஷன் 3.0 மற்றும் எம்டி-15, எப்இசட் எப்ஐ மற்றும் எப்இசட்எஸ் எப்ஐ வெர்ஷன் 3.0 மாடல்களும், 250 சிசி மாடல்களில் எப்இசட் 25 மற்றும் தி நியூ எப்இசட்எஸ் 25 மாடல்களும் இருக்கின்றன.
ஒரே ஆண்டில் 12 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய டுகாட்டி முடிவு செய்து இருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் 12 புதிய மோட்டார்சைக்கிள்களை 2021 ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இவை அனைத்தும் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாகி வருகிறது.
இதுதவிர டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் பிஎஸ்6 மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை ரூ. 50 ஆயிரம் கட்டணத்தில் முன்பதிவு செய்ய முடியும்.

கடந்த ஆண்டு இறுதியில் டுகாட்டி நிறுவனம் புதிய பேனிகேல் வி2, ஸ்கிாம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் மல்டிஸ்டிராடா 950எஸ் என மூன்று பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு டுகாட்டி மான்ஸ்டர், ஸ்கிராம்ப்ளர், மல்டிஸ்டிராடா, பனிகேல், டயவெல் மற்றும் ஸ்டிரீட்-பைட்டர் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த பட்டியலில் முதற்கட்டமாக பிஎஸ்6 ஸ்கிராம்ப்ளர், டயவெல், புதிய எக்ஸ் டயவெல் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல்கள் ரிவெர்டு வி4 என்ஜின் சார்ந்து உருவாகி வருகின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தனது கார் மாடல்கள் விலையை அதிகப்படுத்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 15, 2021 முதல் அமலாக இருக்கிறது. விலை உயர்வு மாடல்களுக்கு 5 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அம்சங்களை வழங்குவதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. `தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கான புதிய விலை பிராண்டின் பிரீமியம் விலையை நிலைநிறுத்தவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்' என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 1.51 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பென்ஸ் மாடலில் மெர்சிடிஸ் மி கனெக்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்ட முதல் மெர்சிடிஸ் பென்ஸ் மாடல் இது ஆகும்.
இந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மாடல் விலை 2021 ஆண்டில் முதல் முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது டியோ ஸ்கூட்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா டியோ மாடல்- ஸ்டான்டர்டு, டீலக்ஸ் மற்றும் ரெப்சல் எடிஷன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தற்போதைய விலை உயர்வின் படி டியோ எஸ்டிடி வேரியண்ட் ரூ. 62,229 என மாறி இருக்கிறது. இதன் டிஎல்எக்ஸ் மற்றும் ரெப்சல் எடிஷன் முறையே ரூ. 65,627 மற்றும் ரூ. 68,127 என மாறி இருக்கின்றன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு தவிர இந்த ஸ்கூட்டரில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா டியோ ஸ்கூட்டர் 109 சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 7.6 பிஹெச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்திய சந்தையில் ஹோண்டா டியோ மாடல் டிவிஎஸ் ஜூப்பிட்டர் 110, ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மஹிந்திரா நிறுவன வாகனங்களின் புதிய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் புதிய விலை விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. விலை உயர்வு 1.9 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 4500 முதல் ரூ. 40 ஆயிரம் வரை விலை உயர்கிறது. புதிய விலை இன்று (ஜனவரி 8) முதல் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் விலையும் உயர்த்தப்படுகிறது.

புதிய விலை டிசம்பர் 1, 2020 முதல் ஜனவரி 7, 2021 வரை முன்பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் மஹிந்திரா தார் மாடல் டிசம்பர் மாதத்தில் மட்டும் 6500 முன்பதிவுகளை பெற்று இருந்ததாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
மேலும் புதிய மஹிந்திரா தார் வாங்க முன்பதிவு செய்யப்பட்ட மாடல்களில் 50 சதவீதம் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட வேரியண்ட்கள் என அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.






