என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மினி கூப்பர் நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மினி கூப்பர் நிறுவனம் தனது மினி மூன்று கதவு கொண்ட ஹேட்ச்பேக் மாடலின் லிமிடெட் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மினி பேடி ஹாப்க்ரிக் எடிஷன் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 41,70,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது மொத்தத்தில் 15 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இது கம்ப்லீட்லி பில்ட் அப் யூனிட் ஆக வழங்கப்படுகிறது. லிமிடெட் எடிஷன் மாடல் விசேஷமாக சில்லி ரெட் லிவெரி மற்றும் ஆஸ்பென் வைட் ரூப், பிளாக் மிரர் கவர்கள், 16 இன்ச் விக்டரி ஸ்போக் லைட்-வெயிட் அலாய் வீல் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த காரின் பொனெட் ஸ்கூப், டோர் ஹேண்டில்கள், பியூவல் பில்லர் கேப், வெயிஸ்ட்லைன் பினிஷர், மினி எம்ப்லெம் மற்றும் கிட்னி கிரில் ஸ்ட்ரட் உள்ளிட்டவை பியானோ பிளாக் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் காரின் பக்கவாட்டில் வெள்ளை நிற 37 எண் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய லிமிடெட் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இது 188 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 235 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 7 சீட்டர் ஹெக்டார் பிளஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் 2021 ஹெக்டார் பிளஸ் 7 சீட்டர் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹெக்டார் பிளஸ் துவக்க விலை ரூ. 1334800, எக்ஸ்-ஷோரூம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1832800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய 7 சீட்டர் வேரியண்ட் 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

2.0 லிட்டர் டீசல் யூனிட் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பெட்ரோல் என்ஜின் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வசதியுடன் கிடைக்கிறது.
எம்ஜி ஹெக்டார் பிளஸ் 6 சீட்டர் துவக்க விலை ரூ. 15,99,800 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19,12,800 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 6 சீட்டர் வேரியண்ட் 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
ஜீப் நிறுவனத்தின் 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி 2020 குவான்ஷௌ சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய காம்பஸ் மாடல் வரும் வாரங்களில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் முன்புறம் மேம்பட்ட எல்இடி ஹெட்லேம்ப் யூனிட், டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. முன்புற கிரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய ஏர் இன்டேக் வழங்கப்படுகிறது.

உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, கிளைமேட் கண்ட்ரோல், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் மற்றும் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் சன்ரூப், டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.
ஹோண்டா நிறுவனத்தின் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா சிபி350 மோட்டார்சைக்கிள் DLX மற்றும் DLX ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்சமயம் விலை உயர்வின் படி இவற்றின் விலை முறையே ரூ. 1,86,50 என்றும் ரூ. 1,92,500 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐஎன் எஸ்யுவி மாடலுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடலின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஸ்கோடா உருவாக்கி வந்த விஷன் ஐஎன் எஸ்யுவி மாடல் குஷக் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கோடா குஷக் மாடல் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்கோடா கார் பட்டாம்பூச்சி வடிவ கிரில், எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள், பாக் லைட்கள், ஸ்கிட் பிளேட், டைமண்ட் கட் அலாய் வீல், ரூப் ரெயில் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஸ்கோடா குஷக் மாடலில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என்றும் இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின்கள் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்திய சந்தையில் புது ஸ்கோடா குஷக் மாடல் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர், எம்ஜி ஹெக்டார், ஜீப் காம்பஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் போக்ஸ்வேகன் டைகுன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.51 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷன் புதிய வெளிப்புற நிறம், மேம்பட்ட இன்டீரியர், புது கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும் மெர்சிடிஸ் மி கனெக்ட் தொழில்நுட்பம் கொண்டு முதல் மெர்சிடிஸ் கார் இது ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷன் எஸ்350டி வேரியண்ட்டை தழுவி உருவாகி இருக்கிறது. இதில் 3.0 லிட்டர் இன்-லைன், 6 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 286 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.0 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் எஸ்யுவி மாடலை ஜனவரி 28 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. முன்னதாக இந்த மாடல் கான்செப்ட் வெர்ஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது.
புதிய ரெனால்ட் கைகர் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல்கள், ஸ்ப்லிட் டெயில் லேம்ப் டிசைன், ஸ்கப் பிளேட்கள், ரூப் ரெயில்கள், டூயல் டோன் அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் சமீபத்திய ஸ்பை படங்களில், புது ரெனால்ட் கைகர் மாடல் சன்ரூப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ரெனால்ட் கைகர் பிளாட்பார்ம் மற்றும் என்ஜின் உள்ளிட்டவை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் எஸ்யுவியில் வழங்கப்பட்டதை போன்றே உள்ளது.
புதிய கைகர் மாடலின் உள்புறம் பல்வேறு புது அம்சங்கள், மேம்பட்ட கனெக்டிவிட்டி மற்றும் சவுகரிய வசதிகள் வழங்கப்படுகிறது. இந்த கார் மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல், மவுன்டெட் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கவாசகி நிறுவனம் 2021 இசட்650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் நிறம் மட்டும் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மாடல் மெட்டாலிக் ஸ்பார்க் பெயின்டிங் மற்றும் ரிம்களில் புளோரசன்ட் கிரீன் நிறம் பூசப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 2021 இசட்650 மாடல் துவக்க விலை ரூ. 6,04,000, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் புல் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், அன்டர்பெல்லி எக்சாஸ்ட், ப்ளூடூத் சார்ந்த 4.3 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன், பெட்டல் டைப் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல் 649சிசி, இன்லைன் 2-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜின் 67.3 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பேஸ்லிப்ட் மாடல் துவக்க விலை ரூ. 12.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கார் வெளிப்புறம் புது வடிவமைப்பு கொண்ட பம்ப்பர், புதிய கிரில், அலாய் வீல்கள் மற்றும் பின்புறமும் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. உள்புறம் வென்டிலேட் செய்யப்பட்ட முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், டூயல்டோன் பெய்க் மற்றும் பிளாக் இருக்கைகள், லெதர் சீட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

2021 எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார் மற்றும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், பெட்ரோல் என்ஜினுக்கு டிசிடி யூனிட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் டாடா ஹேரியர், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ஹெக்டார் பேஸ்லிப்ட் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18.33 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கெத்தான கார் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சபாரி மாடலை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எனினும், அந்த விழாவில் இந்த மாடல் கிராவிடாஸ் என அழைக்கப்பட்டது.
புதிய டாடா சபாரி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த எஸ்யுவி மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலின் சில விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்திய சந்தையில் டாடா சபாரி மாடல் இரண்டு தலைமுறைகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் இது அதிக பிரபலமான எஸ்யுவி மாடலாகவும் விளங்கியது. அந்த வகையில், இந்த மாடல் அசத்தலான புது அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த எஸ்யுவி மாடல் இம்பேக்ட் 2.0 டிசைன் மற்றும் OMEGARC பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. புதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், க்ரியோடெக் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் வினியோகம் இந்திய சந்தையில் துவங்கி உள்ளது.
அப்ரிலியாவின் புது பிரீமியம் ஸ்கூட்டர் எஸ்எக்ஸ்ஆர் 160 பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மேக்சி ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ. 1.26 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
அறிமுகமாகி முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 வினியோகம் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனியார் விற்பனை மையம் புது ஸ்கூட்டர் வினியோகத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டு இருக்கிறது.

புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் ஏர்-கூல்டு சிங்கில் சிலிண்டர் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 160 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.8 பிஹெச்பி பவர் மற்றும் 11.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்திய சந்தைக்கென ஜீப் நிறுவனம் போடும் மாஸ்டர் பிளான் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பியட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் தனி பிராண்டு ஜீப் இந்தியாவில் நான்கு புது மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. இவை 2022 ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகிவிடும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.
ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் அப்டேட் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து மிட்-சைஸ் மூன்று அடக்கு இருக்கை கொண்ட எஸ்யுவி மாடல், பின் ராங்ளர், கிராண்ட் செரோக்கி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
இவற்றில் ராங்ளர் மற்றும் கிராண்ட் செரோக்கி மாடல்கள் ரங்கூனில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கென ஜீப் நிறுவனம் சுமார் 180 கோடிகளை முதலீடு செய்வதாக அறிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிட்ப் மாடல் ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.






