search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மினி கூப்பர் லிமிடெட் எடிஷன்
    X
    மினி கூப்பர் லிமிடெட் எடிஷன்

    மினி கூப்பர் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

    மினி கூப்பர் நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மினி கூப்பர் நிறுவனம் தனது மினி மூன்று கதவு கொண்ட ஹேட்ச்பேக் மாடலின் லிமிடெட் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மினி பேடி ஹாப்க்ரிக் எடிஷன் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 41,70,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இது மொத்தத்தில் 15 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இது கம்ப்லீட்லி பில்ட் அப் யூனிட் ஆக வழங்கப்படுகிறது. லிமிடெட் எடிஷன் மாடல் விசேஷமாக சில்லி ரெட் லிவெரி மற்றும் ஆஸ்பென் வைட் ரூப், பிளாக் மிரர் கவர்கள், 16 இன்ச் விக்டரி ஸ்போக் லைட்-வெயிட் அலாய் வீல் கொண்டிருக்கிறது.

     மினி கூப்பர் லிமிடெட் எடிஷன்

    மேலும் இந்த காரின் பொனெட் ஸ்கூப், டோர் ஹேண்டில்கள், பியூவல் பில்லர் கேப், வெயிஸ்ட்லைன் பினிஷர், மினி எம்ப்லெம் மற்றும் கிட்னி கிரில் ஸ்ட்ரட் உள்ளிட்டவை பியானோ பிளாக் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் காரின் பக்கவாட்டில் வெள்ளை நிற 37 எண் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய லிமிடெட் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இது 188 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 235 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×