என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கவாசகி நிறுவனத்தின் 2021 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கவாசகி நிறுவனம் 2021 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் 2021 கவாசகி வெர்சிஸ் 1000 மாடல் விலை ரூ. 11.19 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது 2020 வெர்சிஸ் 1000 மாடலின் விலையை விட ரூ. 20 ஆயிரம் வரை ஆகும். புதிய 2021 கவாசகி வெர்சிஸ் 1000 மாடலில் 1043சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118.2 பிஹெச்பி பவர், 102 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. புதிய 2021 வெர்சிஸ் 1000 மாடலில் 5 ஆக்சிஸ் போஷ் ஐஎம்யு சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், 2 பவர் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
2021 கவாசகி வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளில் புல் எல்இடி ஹெட்லேம்ப், 21 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல் டூயல் டோன் நிறங்கள்- கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் என ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்.
டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் லெஜண்டர் வேரியண்ட் விசேஷ ஸ்டைலிங் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய பார்ச்சூனர் மாடல் துவக்க விலை 29.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31.57 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பார்ச்சூனர் லெஜண்டர் மாடல் விலை ரூ. 37.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. லெஜண்டர் வெர்ஷனில் பிரம்மாண்ட முன்புறம், மெல்லிய கிரில், பெரிய ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.
பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 177 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் ரூ. 42.34 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆடி இந்தியா நஇறுவனம் 2021 ஏ4 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 42.34 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.8 நொடிகளில் எட்டிவிடுகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய ஆடி ஏ4 மாடலில் ஒற்றை பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட எல்இடி டெயில் லைட்கள், 5 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் Z H2 மற்றும் Z H2 SE என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 21.90 லட்சம் மற்றும் ரூ. 25.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் புல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் சார்ந்து இயங்கும் 4.3-இன்ச் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

புது மோட்டார்சைக்கிள் 998சிசி, இன்-லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு, DOHC, 16-வால்வ், சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197.2 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
கவாசகி Z H2 மாடல் டிரெலிஸ் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல், மூன்றுவித ரைடிங் மோட்கள், குவிக்-ஷிப்டர் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மேட் இன் இந்தியா ஹூண்டாய் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது மேட்-இன்-இந்தியா ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு தென் ஆப்பிரிக்கா, பெரு மற்றும் சிலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
மத்திய அரசின் ஆத்மனிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் ஹூண்டாய் நிறுவனம் தனது மாடலை இந்தியாவில் இருந்து மற்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு முதல் தனது ஐ20 மாடலை ஏற்றுமதி செய்து வருகிறது.

நவம்பர் 2020 வரை மட்டும் ஹூண்டாய் நிறுவனம் பழைய ஐ20 மாடல்களில் 5.16 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை ஏற்றுமதி செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 30 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க 88 நாடுகளுக்கு தனது வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் முன்னணி ஏற்றுமதியாளராகவும் ஹூண்டாய் இருக்குகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரு ஸ்கூட்டர் மாடல்கள் விலையை மாற்றி உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்கூட்டர் மாடல்கள் விலையை மாற்றி உள்ளது. அதன்படி ஹீரோ டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பேஸ் மாடல் விலை ரூ. 61950 என துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 63450 என மாறி இருக்கிறது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 சீரிஸ் மாடல்களின் விலையில் மட்டும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹீரோ டெஸ்டினி 125 மாடல் தற்சமயம் ரூ. 66960 என்றும் டெஸ்டினி 125 அலாய் வீல் மாடல் விலை ரூ. 70450 என மாற்றப்பட்டு உள்ளது. இதேபோன்று ஹீரோ பிளெஷர் பிளஸ் பேஸ் வேரியண்ட் ரூ. 57300 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 61950 என மாறி இருக்கிறது.
தற்சமயம் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் ஸ்கூட்டர்களின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக இவை அனைத்தும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டன.
2020 டிசம்பர் மாதத்தில் புதிய மஹிந்திரா தார் மாடல் முன்பதிவில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தார் மாடல் ஆப் ரோடு எஸ்யுவி 2020 அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகமானது. இந்தியாவில் புதிய தார் மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
துவக்கம் முதலே புதிய மஹிந்திரா தார் முன்பதிவில் நல்ல வரேவேற்பை பெற்று வருகிறது. மிக குறுகிய காலக்கட்டத்தில் இந்த காரை வாங்க பல ஆயிரம் பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில், 2020 டிசம்பர் மாதத்தில் மட்டும் புதிய தார் மாடலை வாங்க 6500 முன்பதிவு செய்துள்ளனர்.

அதிக வரவேற்பு காரணமாக புதிய தார் மாடல் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் அதிகரிக்க இருக்கிறது. புதிய தார் விற்பனையில் 50 சதவீதம் யூனிட்கள் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் ஆகும்.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் ஒரே மாத்தில் 8638 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் டிசம்பர் 2020 மாதத்தில் மட்டும் 8638 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 8412 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.
2020 டிசம்பரில் இந்நிறுவனம் 713 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. முன்னதாக 2020 நவம்பர் மாதத்தில் வெறும் 31 யூனிட்களையே ஏற்றுமதி செய்து இருந்தது.

இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் புதிய சிட்டி, ஜாஸ், டபிள்யூஆர்-வி, அமேஸ், சிஆர்-வி மற்றும் சிவிக் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் சிவிக் டீசல் வேரியண்ட்டிற்கு ரூ. 2.50 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்பட்டது.
மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து புதிய வாகனங்கள் உருவாக்க கூட்டணி அமைத்துள்ளன.
மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் ஒன்றிணைந்து சில புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இரு நிறுவனங்களும் தங்களின் பிராண்டிங்கில் சிறிய கார் மற்றும் எம்பிவி மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் சிறிய கார் 560B எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடல் 2021 ஆண்டு இறுதியிலோ அல்லது 2022 துவக்கத்திலோ விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலாக இருக்கும் என தெரிகிறது. எனினும், இது பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் காம்பேக்ட் பேட்டரி எலெக்ட்ரிக் வெஹிகில் பிளாட்பார்ம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷன்களும் வழங்கப்படலாம்.
எம்பிவி-யை பொருத்தவரை இந்த கார் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்றும் இது எர்டிகா மற்றும் இன்னோவா க்ரிஸ்டா இடையே உள்ள இடைவெளியை போக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது ரீபேட்ஜ் வெர்ஷனாக இல்லாமல் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் பிளஸ் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஏழு பேர் பயணிக்கும் வேரியண்ட் விற்பனையகம் வர துவங்கியுள்ளது.
புதிய ஹெக்டார் கார் முன்புறம் மேம்பட்ட கிரில், டைமண்ட் ஸ்டட் ஸ்டைலிங் வழங்கப்படுகிறது. பம்ப்பரின் கீழ்புறம் ஹெட்லைட் யூனிட் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இந்த காரில் 18-இன்ச் அளவில் 5-ஸ்போக் டைமண்ட்-கட் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.

காரின் பின்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், இதன் டெயில் லேம்ப்கள் இடையே கிளாஸ் பிளாக் ஸ்ட்ரிப் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்க் நிற தீம் கொண்டுள்ளது. இந்த கார் இரண்டாம் அடுக்கு இருக்கை பென்ச் வடிவம் கொண்டிருக்கிறது.
புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 2020 டிசம்பர் மாத விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் 2020 டிசம்பர் மாத விற்பனையில் 13 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் 1.76 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது.
முன்னதாக 2019 டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 1.57 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2020 டிசம்பரில் டிவிஎஸ் நிறுவனம் 81,327 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது. இது 2019 டிசம்பருடன் ஒப்பிடும் போது 39 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.

2019 டிசம்பரில் டிவிஎஸ் நிறுவனம் 58,375 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் விற்பனை 2019 டிசம்பருடன் ஒப்பிடும் போது 27 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
ஸ்கூட்டர் விற்பனை பொருத்தவரை 2019 டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 74,716 யூனிட்களையும், 2020 டிசம்பரில் 77,705 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் என்டார்க் 125 போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன.
டிசம்பர் 2020 வாக்கில் டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டிசம்பர் 2020 மாதத்தில் மட்டும் 7487 யூனிட் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 14 சதவீதம் வளர்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு விற்பனையை ஒப்பிடும் போது 2020 காலாண்டில் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 2019 டிசம்பர் மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 6544 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடலை செய்தது. இதுதவிர புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.






