என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பார்ச்சூனர்
    X
    பார்ச்சூனர்

    அசத்தல் அப்டேட்களுடன் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் அறிமுகம்

    டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்.


    டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் லெஜண்டர் வேரியண்ட் விசேஷ ஸ்டைலிங் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய பார்ச்சூனர் மாடல் துவக்க விலை 29.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31.57 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பார்ச்சூனர் லெஜண்டர் மாடல் விலை ரூ. 37.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     பார்ச்சூனர் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர்

    டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. லெஜண்டர் வெர்ஷனில் பிரம்மாண்ட முன்புறம், மெல்லிய கிரில், பெரிய ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.

    பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 177 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 
    Next Story
    ×