என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் ஜனவரி 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. அறிமுக நிகழ்விலேயே புதிய கார் விலை மற்றும் விநியோக விவரங்கள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்க அருகாமையில் உள்ள விற்பனையகம் அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.

     ஜீப் காம்பஸ்

    புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் முன்புறம் மேம்பட்ட எல்இடி ஹெட்லேம்ப் யூனிட், டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. முன்புற கிரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய ஏர் இன்டேக் வழங்கப்படுகிறது.

    உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, கிளைமேட் கண்ட்ரோல், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் மற்றும் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் சன்ரூப், டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.

    2020 ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் முழுமையான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடலாக நெக்சான் இவி காரை 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் 2020 ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்று உள்ளது.

    2020 ஆண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2529 நெக்சான் இவி மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் நெக்சான் இவி மட்டும் 63.2 சதவீத பங்குகளை பெற்று உள்ளது. டாடா நெக்சான் இவி மாடலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

     டாடா நெக்சான் இவி

    கவர்ச்சிகர விலை, சிறந்த செயல்திறன், நீண்ட தூரம் பயணிக்கும் வசதி மற்றும் இதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் என பல்வேறு காரணங்களால் இதன் விற்பனை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மாடல் துவக்க விலை ரூ. 13.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்று உள்ளது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றம் செய்யப்படுகிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாக்ஷிப் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இதன் விலை ரூ. 1997 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1,99,755 எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. 

    பஜாஜ் டாமினர் 400 மோட்டார்சைக்கிளில் 373.27சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.42 பிஹெச்பி பவர், 35 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

     பஜாஜ் டாமினர் 400

    மேலும் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் அப்சைடு டவுன் போர்க், மல்டி-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் 320 எம்எம் டிஸ்க், பின்புறம் 230 எம்எம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மோட்டார்சைக்கிளில் முழுக்க எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிஜிட்ல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-பேரெல் எக்சாஸ்ட் மற்றும் பிளாக், கிரீன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
    அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா பெங்களூரில் தனது ஆய்வு மையத்தை கட்டமைக்க இருக்கிறது.


    அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது பணிகளை துவங்க இருக்கிறது. முன்னதாக இதே தகவலை டெஸ்லா நிறுவனர் மற்றும் மத்திய அமைச்சர் உறுதிப்படுத்தி இருந்தனர்.

    டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஆய்வு மையத்தை பெங்களூரு நகரில் துவங்க இருக்கிறது. இதற்கான அரசு ஆவணம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

     டெஸ்லா எலெக்ட்ரிக் கார்

    டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது.., 

    "இந்தியாவின் பசுமை போக்குவரத்து சார்ந்த பயணத்தை கர்நாடகா வழிநடத்தும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா விரைவில் தனது ஆய்வு மையத்தை பெங்களுரில் துவங்க இருக்கிறது. நான் எலான் மஸ்கை இந்தியாவுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் வரவேற்று, வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்." 

    என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய 2021 ஸ்விப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மாடலின் 2021 எடிஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் காஸ்மெடிக் மா்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய பேஸ்லிப்ட் மாடல் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மாடல் தற்சமயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் இந்த மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

     மாருதி சுசுகி ஸ்விப்ட்

    ஸ்பை படங்களில் புதிய கார் முழுமையாக மறைக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது. எனினும், முன்புற கிரில் மட்டும் மறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய ஸ்விப்ட் மாடல் சர்வதேச மாடலில் உள்ளதை போன்ற டைமண்ட்-ஸ்டட்-பேட்டன் கொண்ட மெஷ் கிரில் கொண்டிருக்கும் என்றே தெரிகிறது.

    முன்புற கிரில் மட்டுமின்றி 2021 ஸ்விப்ட் மாடலில் டூயல் டோன் பெயின்ட், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் உள்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்பீட் டிரிபில் 1200 ஆர்எஸ் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்பீட் டிரிபில் 1200 ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் ஜனவரி 26 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.

    டீசர்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் மாடலில் உள்ளதை போன்ற ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் முன்புறம் தங்க நிற போர்க்குகள், கார்பன் பைபர் பென்டரில் டிரையம்ப் லோகோ காணப்படுகிறது.

     டிரையம்ப் ஸ்பீர்ட் டிரிபில் 1200 ஆர்எஸ்

    இத்துடன் எம் வடிவ எல்இடி டெயில் லைட்கள், ஆர்எஸ் கிராபிக்ஸ் உள்ளிட்டவை பியூவல் டேன்க் மீது காணப்படுகிறது. டிரையம்ப் நிறுவனம் புதிய மாடலுக்கென டீசர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. எனினும், இதில் மோட்டார்சைக்கிள் தோற்றம் பற்றிய காட்சிகள் இடம்பெறவில்லை.

    புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் விற்பனை முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் துவங்கி அதன் பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ இந்தியா புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ கார் விலை ரூ. 40.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய 220ஐ மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டீரிங் வீலில் பேடிள் ஷிப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட்

    பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. தோற்றத்தில் இந்த மாடல் பார்க்க இதன் டீசல் வேரியண்ட்டை போன்று காட்சியளிக்கிறது. 

    இத்துடன் புதிய காரில் பிஎம்டபிள்யூ பாரம்பரிய கிட்னி கிரில், பிரேம்லெஸ் டோர், எல்இடி ஹெட்லைட்கள், டெயில்-லைட் யூனிட்கள், ஸ்லோப்பிங் ரூப்லைன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 17 இன்ச் டபிள் ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ரூ. 15.96 லட்சம் விலையில் அறிமுகமாகி இருக்கிறது.


    ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் 2021 ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 15.96 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 

    புதிய 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது. மாற்றங்களை பொருத்தவரை இந்த மாடல் புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

     2021 ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்

    மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் டார்க்னெஸ் பிளாக் மெட்டாலிக் நிறத்திலும், டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் பியல் கிளேர் வைட் டிரைகலர் நிறத்திலும் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் 1084சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 98 பிஹெச்பி பவர், 103 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பாதுகாப்பிற்கு இந்த மாடலில் வீலி கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், ரியர் லிப்ட் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டு உள்ளது.
    சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய சி5 ஏர்கிராஸ் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் தனது சி5 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் இது சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும்.

    தற்போதைய தகவல்களின் படி புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் ஓசூரில் உள்ள சிட்ரோயன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. 

    தற்சமயம் சிட்ரோயன் நிறுவனம் தனது விற்பனை மையங்களை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் அறிமுகமானதும் விற்பனைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் அசத்தல் தள்ளுபடிகளை அறிவித்து உள்ளது. அதன்படி டியாகோ, டிகோர், நெக்சான் மற்றும் ஹேரியர் போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     டாடா கார்

    புதிய சலுகைகளின் படி என்ட்ரி லெவல் டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இவை எக்சேன்ஜ் போனஸ் மற்றும் இதர சலுகைகளாக வழங்கப்படுகின்றன. டாடா டிகோர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    டாடா நெக்சான் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலான ஹேரியர் எஸ்யுவி மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான சலுகை வழங்கப்படுகிறது.
    அப்ரிலியா நிறுவனம் டியூனோ 660 மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    அப்ரிலியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டியூனோ 660 நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய டியூனோ 660 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    புதிய டியூனோ 660 மாடல் ஆர்எஸ் 660 மோட்டார்சைக்கிளை சார்ந்து உருவாகி இருக்கிறது. இதன் வடிவமைப்பு டியூனோ வி4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 3-பாட் ஹெட்லேம்ப் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     அப்ரிலியா டியூனோ 660

    மேலும் இதில் எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்ப்லிட் சீட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மஸ்குலர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த மோட்டார்சைக்கிளில் 660சிசி பேரலெல் ட்வின் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 67 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது டஸ்டர், டிரைபர் மற்றும் க்விட் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. கார் மாடல் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாக ரெனால்ட் இந்தியா தெரிவித்து உள்ளது.

    விலை உயர்வின் படி ரெனால்ட் க்விட் துவக்க விலை ரூ. 3,12,800 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5,31,200 என மாறி இருக்கிறது. ரெனால்ட் க்விட் மாடல் விலை ரூ. 18,500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் மாடல் விலை ரூ. 5.20 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.50 லட்சம் என மாறி இருக்கிறது. அதன்படி டிரைபர் மாடல் விலை ரூ. 16 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டஸ்டர் எஸ்யுவி விலை ரூ. 28 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெனால்ட் டஸ்டர் மாடல் விலை ரூ. 9.57 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.87 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ×