search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட்
    X
    பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட்

    அசத்தல் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ இந்தியா புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ கார் விலை ரூ. 40.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய 220ஐ மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டீரிங் வீலில் பேடிள் ஷிப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட்

    பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. தோற்றத்தில் இந்த மாடல் பார்க்க இதன் டீசல் வேரியண்ட்டை போன்று காட்சியளிக்கிறது. 

    இத்துடன் புதிய காரில் பிஎம்டபிள்யூ பாரம்பரிய கிட்னி கிரில், பிரேம்லெஸ் டோர், எல்இடி ஹெட்லைட்கள், டெயில்-லைட் யூனிட்கள், ஸ்லோப்பிங் ரூப்லைன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 17 இன்ச் டபிள் ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    Next Story
    ×