என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    இந்தியாவில் ஹோண்டா கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது கிரேசியா 125சிசி ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய வேரியண்ட் கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மேம்பட்ட கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது.

    அதன்படி புது வேரியண்ட்டில் ஸ்போர்ட்ஸ் எடிஷன் பேட்ஜ், ரேசிங் ஸ்டிரைப்கள், ரெட்-பிளாக் நிற சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பியல் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

     ஹோண்டா கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன்

    புதிய ஹோண்டா கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஸ்கூட்டர் விலை ரூ. 82,564 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தோற்றம் தவிர புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் கிரேசியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் ஸ்கூட்டரிலும் ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே 124சிசி, சிங்கில் சிலிண்டர், பிஎஸ்-6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 8.14 பிஹெச்பி பவர், 10.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    கவாசகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.


    ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான கவாசகி, இந்திய சந்தையில் தனது மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    கவாசகி நிறுவனத்தின் கேஎல்எக்ஸ் 110, கேஎல்எக்ஸ் 140, கேஎக்ஸ் 100, டபிள்யூ800, இசட்650, வெர்சிஸ் 650 மற்றும் வல்கன் எஸ் போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சலுகைக்கு தேர்வான மாடல்களுடன் தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. இதை கொண்டு மாடல்களின் விலையை குறைக்க முடியும்.

     கவாசகி மோட்டார்சைக்கிள்

    வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்கள் வாங்கும் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான அக்சஸரீக்களையும் தள்ளுபடி கூப்பன் கொண்டு வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகை ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த வவுச்சர்கள் அனைத்து கவாசகி விற்பனை மையங்களிலும் செல்லுபடியாகும்.

    கவாசகி வெர்சிஸ் 650 மற்றும் வெர்சிஸ் 1000 போன்ற மாடல்களுக்கும் முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான அட்வென்ச்சர் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாகனத்தின் விலையை குறைக்கவோ அல்லது அக்சஸரீ வாங்க முடியும்.

    ஜாவா நிறுவனத்தின் பார்டி டூ மோட்டார்சைக்கிள் அலாய் வீல்களுடன் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.


    ஜாவா நிறுவனத்தின் பார்டு டூ மோட்டார்சைக்கிள் மேம்பட்ட மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

    ஸ்பை படங்களின் படி புதிய ஜாவா பார்டு டூ மோட்டார்சைக்கிள் பிளாக்டு-அவுட் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதுவும் முழுமையான பிளாக் பெயின்ட் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய மாடலில் குரோம் பினிஷ் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     ஜாவா பார்டி டூ

    இத்துடன் புதிய மாடலில் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவைதவிர 2021 ஜாவா பார்டி டூ மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய ஜாவா பார்டி டூ மாடலில் 293சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 26.2 பிஹெச்பி பவர், 27.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் ட்வின் ஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்சமயம் விற்பனையாகும் ஜாவா பார்டி டூ மாடலில் முன்புறம் 18 இன்ச், பின்புறம் 17 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய அலாய் வீல் மாடலிலும் இதே அளவு சக்கரங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 பல்சர் 220எப் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சத்தமின்றி பல்சர் 220எப் மோ்டடார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் 220எப் மாடல் விலை ரூ. 1.25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய பஜாஜ் பல்சர் 220எப் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி இதன் பாடி கிராபிக்ஸ் மாற்றப்பட்டு பிளாக் புளூ மற்றும் பிளாக் ரெட் என இரண்டு வித புதிய நிறங்களில் கிடைக்கிறது.

     2021 பஜாஜ் பல்சர் 220எப்

    இத்துடன் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அனலாக் டக்கோமீட்டருடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு உள்ளது. இதன் டிஜிட்டல் ஸ்கிரீன் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது.

    2021 பஜாஜ் பல்சர் 220எப் மாடலில் 220சிசி டிடிஎஸ்-எப்ஐ சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.4 பிஹெச்பி பவர், 18.55 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
    ஸ்கோடா நிறுவனத்தின் 2021 சூப்பர்ப் மாடல் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஸ்கோடா நிறுவனம் மேம்பட்ட சூப்பர்ப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 சூப்பர்ப் மாடல் துவக்க விலை ரூ. 31.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 34.99 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2021 ஸ்கோடா சூப்பர்ப் மாடல் தோற்றத்தில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் உள்ள மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்களுடன், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவே இன்டிகேட்டர்களாகவும் செயல்படுகின்றன.

     2021 ஸ்கோடா சூப்பர்ப்

    காரின் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட இன்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர்லின்க் மற்றும் வாய்ஸ் கமாண்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சூப்பர்ப் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    சுசுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    சுசுகி நிறுவனம் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மோட்டார்சைக்கிள் மாடலை ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நேக்கட் ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்125 மாடல் டிரைடன் புளூ மெட்டாலிக் மற்றும் டைட்டன் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், 4-வால்வு DOHC லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்125

    இந்த என்ஜின் 14.8 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மற்றும் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின் இதே செயல்திறன் வழங்கி வருகின்றன.

    புதிய சுசுகி மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 59 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.

    அதன்படி மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 9 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இதன் டபிள்யூ5 மற்றும் டபிள்யூ7 வேரியண்ட்களுக்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியும், டபிள்யூ9 மற்றும் டபிள்யூ11 வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4500 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஸ் போனஸ், ரூ. 6 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     மஹிந்திரா கார்

    மராசோ எம்2 வேரியண்டிற்கு கூடுதலாக ரூ. 20 ஆயிரமும், எம்4 மற்றும் எம்6 வேரியண்டிற்கு ரூ. 15 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 6500 தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா எக்ஸ்யுவி300 பெட்ரோல் வேரியண்டிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4500 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. 

    டீசல் வேரியண்டிற்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4500 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
    ஹோண்டா நிறுவனம் தனது கிரேசியா 125 ஸ்கூட்டர் விலையை இந்தியாவில் திடீரென மாற்றி இருக்கிறது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டரை கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா கிரேசியா 125 ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    தற்சமயம் ஹோண்டா கிரேசியா 125 ஸ்கூட்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கிரேசியா 125 பிஎஸ் டிரம் பிரேக் வேரியண்ட் புதிய விலை ரூ. 74,815 என்றும் டிஸ்க் பிரேக் புதிய விலை ரூ. 82,140 என மாறி இருக்கிறது. விலை உயர்வு தவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     ஹோண்டா கிரேசியா 125

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையிலானது. இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் மேட் சைபர் எல்லோ, பியல் சைரன் புளூ, மேட் ஆக்சிஸ் கிரே மற்றும் பியல் ஸ்பார்டன் ரெட் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டரில் பிஎஸ்6 ரக 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 10.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் வி டைப் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய EQA எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜெர்மன் நாட்டு ஆடம்பர் கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் தனது ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான EQA-வை இந்தியாவில் ஜனவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய EQA மாடல் அம்சங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

    முதற்கட்டமாக 188 பிஹெச்பி திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரை அறிமுகம் செய்து பின் 268 பிஹெச்பி திறன் கொண்ட மோட்டார் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     மெக்சிடிஸ் பென்ஸ் EQA கான்செப்ட்

    புதிய EQA எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் எலெக்ட்ரிக் இன்டெலிஜன்ஸ் நேவிகேஷன் சிஸ்டம் வசதி வழங்கப்படுகிறது. இது போக வேண்டிய இடத்திற்கு வேகமாக செல்லும் வழியை கண்டறியும் நுட்பம் கொண்டுள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQA முழு விவரங்கள் அறிமுக நிகழ்வில் வெளியாகும்.
    ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய டிபிஎக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சர்வதேச சந்தையை தொடர்ந்து புதிய டிபிஎக்ஸ் சூப்பர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் விலை ரூ. 3.82 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் முதல் பெர்பார்மன்ஸ் எஸ்யுவி மாடலாக இது வெளியாகி உள்ளது.

    புதிய டிபிஎக்ஸ் புல்-சைஸ் 5-சீட் எஸ்யுவி மாடல் ஆகும். இதன் முன்புறம் கிளாம்ஷெல் பொனெட், டூயல் ஏர் வென்ட்களுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழக்கமான டிபி முன்புற கிரில் வழங்கப்பட்டு உள்ளது. பம்ப்பரின் கீழ்புறத்தில் எல்இடி டிஆர்எல்கள் வழஹ்கப்பட்டு இருக்கிறது.

    ஆஸ்டின் மார்டின் டிபிஎக்ஸ்

    இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. பின்புற டெயில் லைட் வேண்டேஜ் மாடலில் இருந்ததை போன்று காட்சியளிக்கிறது. இத்துடன் ரூப்-மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், பவர்டு டெயில் கேட் மற்றும் ட்வின் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 542 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. 
    இந்தியாவில் பஜாஜ் அவெஞ்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவெஞ்சர் சீரிஸ் மோட்டர்சைக்கிள் மாடல்களின் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. அதன்படி அவெஞ்சர் குரூயிஸ் 220 மாடல் புதிய விலை ரூ. 1,24,635 ஆகவும் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடல் விலை ரூ. 1,02,592 என மாறி இருக்கிறது. 

    முன்னதாக இரு மாடல்களின் விலை முறையே ரூ. 1,22,630 என்றும் ரூ. 1,02,592 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. விலை உயர்வு தவிர இரு மோட்டார்சைக்கிள்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

     அவெஞ்சர்

    அவெஞ்சர் 220 குரூயிஸ் மாடலில் 220சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 18.76 பிஹெச்பி பவர், 17.55 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160சிசி, ஏர்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 14.79 பிஹெச்பி பவர், 13.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    அவெஞ்சர் சீரிஸ் மட்டுமின்றி பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர், டாமினர் சீரிஸ், பிளாட்டினா 100, பிளாட்டினா 110 ஹெச், சிடி100 மற்றும் சிடி 110 போன்ற மாடல்களின் விலையையும் உயர்த்தி உள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 15 மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கான 2021 ஆண்டு திட்டத்தை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 15 மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.

    15 மாடல்களில் சில புதிய மாடல்களும், சில பேஸ்லிப்ட்களும் அடங்கும். கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 10 மாடல்களை அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த ஆண்டு முதற்கட்டமாக புதிய ஏ கிளாஸ் லிமோசின் செடான் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

     மெர்சிடிஸ் பென்ஸ் கார்

    மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் முதலில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டு, விரைவில் இதன் விற்பனை துவங்க இருக்கிறது. ஏ கிளாஸ் லிமோசின் மட்டுமின்றி மெர்சிடிஸ் பென்ஸ் புதிய ஜிஎல்ஏ, எஸ் கிளாஸ், பேஸ்லிப்ட் செய்யப்பட்ட இ கிளாஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்த வரிசையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. 
    ×