என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 ஜிஎல்சி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 ஜிஎல்சி எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஜிஎல்சி மாடலின் துவக்க விலை ரூ. 57.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஜிஎல்சி மாடல் மெர்சிடிஸ் மி கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் முதலில் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷனில் வழங்கப்பட்டு இருந்தது. தற்சமயம் இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும் வழங்கப்படுகிறது.

     2021 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி

    கனெக்டெட் தொழில்நுட்பம் மட்டுமின்றி புது மாடலில்ல பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய பென்ஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 195 பிஹெச்பி, 320 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் டீசல் என்ஜின் 192 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.

    வால்வோ நிறுவனத்தின் புதிய 2021 எஸ்60 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    வால்வோ கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய 2021 எஸ்60 செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வால்வோ எஸ்60 மாடல் இன்ஸ்க்ரிப்ஷன் எனும் ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் 2021 வால்வோ எஸ்60 விலை ரூ. 45.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய 2021 வால்வோ எஸ்60 மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எஸ்60 விநியோகம் மார்ச் மாதத்தில் துவங்க இருக்கிறது.

    புதிய வால்வோ எஸ்60 அந்நிறுவனத்தின் சமீபத்திய வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதில் அகலமான கிரில், நடுவில் வால்வோ லோகோ இடம்பெற்று இருக்கிறது. பக்கவாட்டுகளில் மெல்லிய எல்இடி தார் ஹேமர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளது.

     2021 வால்வோ எஸ்60

    முன்புற பம்ப்பரில் பெரிய ஏர் இன்டேக் வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் குறைந்த அளவு வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் பெரிய டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் சி வடிவ எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    2021 வால்வோ எஸ்60 செடான் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்படவில்லை.

    இந்தியாவில் 2021 வால்வோ எஸ்60 மாடல் க்ரிஸ்டர் வைட் பியல், ஆனிக்ஸ் பிளாக், மேபிள் பிரவுன், டெனிம் புளூ மற்றும் பியூஷன் ரெட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    சிஎப் மோட்டோ நிறுவனத்தின் எம்டி800 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.

    சீனாவை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான சிஎப் மோட்டோ தனது எம்டி800 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இது கேடிஎம் 790 அட்வென்ச்சர் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. 

    புதிய எம்டி800 மாடல் ரோடு மற்றும் ஆப்-ரோடு என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் முதல் வேரியண்ட் அலாய் வீல்களும், ஆப்-ரோட் வேரியண்ட் வயர்-ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட், பீக் வடிவம் மற்றும் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் பெரிய பியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், டெயில்-செட் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய எம்டி800 மோட்டார்சைக்கிளில் கேடிஎம் 790 மாடலை போன்றே 799சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 95 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    எனினும், எம்டி800 மாடலில் இந்த என்ஜின் வழங்கும் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இத்துடன் அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் ட்வின் டிஸ்க் பிரேக், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு புதிய சிஎப் மோட்டோ எம்டி800 மாடலில் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் மாடல் புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் புதிய ரெனால்ட் கைகர் மாடல் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. டீசரில் புதிய மாடல் ஹெட்லேம்ப் டிசைன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    டீசரின் படி 2021 ரெனால்ட் கைகர் மாடலில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடல் ஹெட்லேம்ப் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இது சி வடிவ ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     ரெனால்ட் கைகர்

    இந்த மாடலில் டோ-ஸ்லாட் கிரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரெனால்ட் லோகோ எல்இடி டெயில் லைட்களின் கீழ் பொருத்தப்படுகிறது. புதிய ரெனால்ட் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 76 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் நிசான் மேக்னைட், கியா சொனெட், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டொயோட்டா அர்பன் குரூயிசர், டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்யுவி300 மற்றும் போர்டு இகோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.  

    மஹிந்திரா நிறுவனத்தின் 2021 ஸ்கார்பியோ மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் 2021 ஸ்கார்பியோ மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. முந்தைய ஸ்பை படங்களுடன் ஒப்பிடும் போது, தற்போதைய படங்களில் புதிய கார் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில் புதிய ஸ்கார்பியோ மாடல் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ மாடல் 2021-22 நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    அந்த வகையில் புதிய ஸ்கார்பியோ மாடல் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய ஸ்பை படங்களின் படி ஸ்கார்பியோ மாடல் அளவில் பெரியதாகவும், பெரிய டெயில்கேட் மற்றும் விண்ட்ஷீல்டு வைப்பர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் ஸ்போர்ட் தீம் கொண்ட அலாய் வீல்கள், பெரிய ரூப் ரெயில்கள், இன்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ORVMகள் உள்ளிட்டவை வழங்கப்படலாம். மேலும் இந்த எஸ்யுவி மாடலில் ட்வின்-பாட் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் ரைட் வேரியண்ட் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் ரேபிட் ரைடர் வேரியண்ட்டை இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்சமயம் இதன் விலை ரூ. 7.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 30 ஆயிரம் அதிகம் ஆகும்.

    ரைடர் வேரியண்ட் ஸ்கோடா ரேபிட் செடான் இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் வென்டோ, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் புதிய ஹோண்டா சிட்டி போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது. மேலும் இது போட்டி நிறுவன மாடல்களின் விலையை விட ரேபிட் ரைடர் விலை குறைவாக இருக்கிறது. 

     ஸ்கோடா ரேபிட் ரைடர்

    ஸ்கோடா ரைபட் ரைடர் வேரியண்ட் டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீரிங் வீல், பவர் விண்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏர்கான் வென்ட்கள், ORVMகள், பின்புறம் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ரைடர் பிளஸ் மாடலின் விலையை ரூ. 20 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்சமயம் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 8.19 லட்சம் என்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 9.69 லட்சம் என மாறி இருக்கிறது. 
    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தி இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 34 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படுகிறது.

    ஆல்டோ, செலரியோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விப்ட், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது. மாருதி டூர் எஸ் மாடலின் விலையில் ரூ. 5061 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 7 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     மாருதி சுசுகி கார்

    ஸ்விப்ட் மற்றும் எர்டிகா போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்படு இருக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸா, ஆல்டோ, டிசையர் மற்றும் வேகன் ஆர் போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 10 ஆயிரம், 12,500, ரூ. 14 ஆயிரம் மற்றும் ரூ. 23 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.

    முன்னதாக டிசம்பர் 2020 மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது விலையை உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. அதன்படி விலை உயர்வு தற்சமயம் அமலாகி இருக்கிறது.
    டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எக்ஸ்எல் 100 வின்னர் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்எல் 100 வின்னடர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 49,599 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்எல் 100 ஐ டச் ஸ்பெஷல் எடிஷன் மாடலை விட ரூ. 400 அதிகம் ஆகும்.

    புதிய வின்னர் எடிஷன் பிரத்யேகமாக டிலைட் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் இது டூயல் டோன், பெய்க் மற்றும் டேன் நிற ஸ்ப்லிட் சீட் செட்டப் கொண்டிருக்கிறது. இத்துடன் எக்ஸ்எல் 100 வின்னர் எடிஷன் குரோம் எக்சாஸ்ட் ஷீல்டு, குரோம் மிரர்களை கொண்டுள்ளது.

     டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிஷன்

    இந்த மொபெட் 99.7சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 4.3 பிஹெச்பி பவர், 6.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இது வையர்-ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது. இதன் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
    சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இது பர்க்மேன் ஸ்டிரீட் மாடலை தழுவி உருவாகி வருகிறது. முன்னதாக பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கள் டெல்லி சாலையில் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இம்முறை பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மறைக்கப்படவில்லை. இந்த மாடலில் ஐசி-என்ஜின் கொண்டு இயங்குகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டூயல் டோன் நிறத்தில் கிடைக்கிறது.

     சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட்

    இந்த ஸ்கூட்டரின் கீழ்புறம், முன்புற ஹேண்டில்பார் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் புளூ ஹைலைட்கள் செய்யப்பட்டு உள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இந்த மாடலின் எக்சாஸ்ட் பைப் நீக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் வித்தியாசமான அலாய் வீல், டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு இந்தியாவில் ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    டேட்சன் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கு அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் டேட்சன் நிறுவனம் ரெடிகோ, கோ மற்றும் கோ பிளஸ் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. சலுகைகள் வேரியண்ட் மற்றும் பகுதிகளுக்கு ஏற்ப வேறுபடும். மேலும் இந்த சலுகை ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    டேட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகையும், ரெடிகோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது.

     டேட்சன் கோ

    ஐந்து பேர் பயணிக்கக்கூடிய கோ மற்றும் ஏழு பேர் பயணிக்கக்கூடிய கோ பிளஸ் மாடல்களில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் 67 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் சிவிடி வேரியண்ட் 76 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    லெக்சஸ் நிறுவனத்தின் எல்எஸ் 500ஹெச் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் கார் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஆடம்பர கார் உற்பத்தியாளரான லெக்சஸ் இந்திய சந்தையில் எல்எஸ் 500ஹெச் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் எல்எஸ் 500ஹெச் நிஷிஜின் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2.22 கோடி எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய லெக்சஸ் நிஷிஜின் எடிஷன் வெளிப்புறம் ஜின்-இ-லஸ்டர் நிறம் கொண்டிருக்கிறது. புதிய நிறம் தவிர இந்த மாடலின் பம்ப்பரில் சிறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் முழுநிலவு கடலில் பிரதிபலிக்கும் நிகழ்வை ஒட்டி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் வீல் மற்றும் சென்டர் கன்சோல் பட்டன்கள் எளிதில் இயக்கும் வகையில் இடமாற்றம் செய்யப்ப்டடு உள்ளது.

     லெக்சஸ் எல்எஸ் 500ஹெச்

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலிலும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் மோட்டார் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை ஒருங்கிணைந்து 354 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகின்றன. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் லெக்சஸ் எல்எஸ் 500ஹெச் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்ஜெ மற்றும் ஆடி ஏ8எல் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலை இம்மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்த மாடல் துவக்க விலை ரூ. 29.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய பேஸ்லிப்ட் மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் கணிசமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. தற்சமயம் 2021 பார்ச்சூனர் மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இந்த மாடல் ஸ்டான்டர்டு மற்றும் லெஜண்டர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     பார்ச்சூனர்

    டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. லெஜண்டர் வெர்ஷனில் பிரம்மாண்ட முன்புறம், மெல்லிய கிரில், பெரிய ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.

    பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 177 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 
    ×