என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்தியாவை பூர்விகமாக கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஆம்பியர் எலெக்ட்ரிக் இந்திய சந்தையில் 75 ஆயிரம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து உள்ளது. இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், புது மைல்கல்லை தற்சமயம் எட்டியுள்ளது.

    விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை தொடர்ந்து ஆம்பியர் தனது 300-வது விற்பனையகத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கி உள்ளது. கொரோனாவைரஸ் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் ஆம்பியர் எலெக்ட்ரிக் நாடு முழுக்க 80 விற்பனையகங்களை துவங்கி இருக்கிறது.

     ஆம்பியர் ஸ்கூட்டர்

    சமீபத்திய அறிக்கையின் படி இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் மத்திய அரசின் பசுமை போக்குவரத்து திட்டம் பற்றிய விழிப்புணர்வே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    2021 டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகம்.


    டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஸ்கிராம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 8.49 லட்சம் மற்றும் ரூ. 7.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரு மோட்டார்சைக்கிள் மாடல்களின் அம்சங்கள் மற்றும் என்ஜின் ஒன்று தான். எனினும், இவை நிறங்களின் அடிப்படையில் வித்தியாசப்படுகிறது. ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் மாடல் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் மெஷின் பினிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பெல்ட் கவர்கள், மாற்றக்கூடிய அலுமினியம் சைடு பேனல்கள் வழங்கப்படுகின்றன.

     2021 ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க்

    இரு மாடல்களிலும் புல் எல்இடி லைட்டிங், பிளாட்டர் சீட், 10-ஸ்போக் அலாய் வீல்கள், அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் மோனோ ஷாக், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், போஷ் கார்னெரிங் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் மாடல்களில் பிஎஸ்6 ரக 803சிசி, ஏர்-கூல்டு, ல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் இரு டுகாட்டி மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து விற்பனையகங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் ஐ டர்போ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 7.73 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய அல்ட்ரோஸ் டர்போ சார்ஜ் வேரியண்டிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.

    டாடா அல்ட்ரோஸ்

    தோற்றத்தில் டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ வேரியண்ட் ஸ்டான்டர்டு மாடல் போன்றே காட்சியளிக்கிறது. இதன் அம்சங்கள் மற்றும் உபகரணங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் இந்த கார் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், எல்இடி டெயில் லைட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

    புதிய காரில் ஐ டர்போ பேட்ஜிங் மற்றும் ஹார்பர் புளூ எனும் நிறத்தில் கிடைக்கிறது. இவை தவிர ஸ்டான்டர்டு வேரியண்ட் போன்றே ஹை ஸ்டிரீட் கோல்டு, டவுன்டவுன் ரெட், மிட்-டவுன் கிரே மற்றும் அவென்யூ வைட் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

    டாடா அல்ட்ரோஸ் ஐ டர்போ வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 140 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
    ஆஸ்திரேலிய மண்ணில் மாஸ் காட்டிய இளம் இந்திய வீரர்களுக்கு புத்தம் புதிய தார் காரை பரிசாக வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.


    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இளம் இந்திய அணிக்கு உலகம் முழுக்க பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. டெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்று அசத்தியது. 

    இந்நிலையில், வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்திய அணியில் அசத்திய ஆறு இளம் வீரர்களுக்கு புத்தம் புதிய மஹிந்திரா தார் காரை பரிசாக வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் இந்திய அணியை சேர்ந்த நடராஜன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஷூப்மன் கில் மற்றும் நவ்தீப் சைனி உள்ளிட்ட ஆறு இளம் வீரர்களுக்கு மஹிந்திரா தார் கார் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

    காரை வென்ற முகமது சிராஜ் அதில் பயணிக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இவர் கடைசி போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும் தொடரில் அதிகபட்சமாக 13 விக்கெட்களை வீழ்த்தினார்.
    ஒகினாவா பிராண்டின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஒகினவா இந்தியாவில் புதிய ஸ்கூட்டரை டூயல் எனும் பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒகினவா டூயல் மாடல் விலை ரூ. 58,998 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் சுமைதாங்கும் வசதியுடன் கிடைக்கிறது. 

    இதன் முன்புறம் மற்றும் பின்புறங்களில் அதிக எடை கொண்ட பொருட்களை வைத்து பயணிக்கும் வகையிலான கேரியர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர டெலிவரி பெட்டி, அடுக்குகள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவைகளையும் ஒகினவா கூடுதல் அக்சஸரீயாக வழங்குகிறது.

     ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    மேலும் இதன் பக்கவாட்டுகளில் பூட்ரெஸ்ட், மேட் டிசைன், போன் வைக்கும் ஸ்டாண்டு, சார்ஜிங் போர்ட் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஒகினவா டூயல் 250வாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும்.

    இந்த ஸ்கூட்டரை வாங்குவோர் 48V 28Ah பேட்டரியை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இது 45 நிமிடங்களில் 80 சதவீதமும், மூன்று மணி நேரத்தில் முழுமையாகவும் சார்ஜ் ஆகிறது. இதன் சிறிய பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

    ஒகினவா டூயல் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பயர் ரெட் மற்றும் சன்ஷைன் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கடந்த காலாண்டு நிகர லாபம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இருசக்கர வாகனம் மற்றும் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 2020-2021-ம் நிதி ஆண்டின் 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கை நேற்று நடந்த இயக்குனர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    2020-2021-ம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.9,279 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் நிகர லாபமாக ரூ.1,556 கோடி கிடைத்துள்ளது. இது 2019-2020-ம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 23 சதவீதம் அதிகம் ஆகும். முதன்முறையாக 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இந்த காலாண்டில் தான் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

     பஜாஜ் மோட்டார்சைக்கிள்

    இந்த காலாண்டில் உள்நாட்டில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 469 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த ஆண்டை காட்டிலும் 8 சதவீதம் அதிகம் ஆகும். 34 ஆயிரத்து 230 வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 65 சதவீதம் குறைவு ஆகும். 

    இந்த காலாண்டில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 398 இருசக்கர வாகனங்களும், 78 ஆயிரத்து 713 வர்த்தக வாகனங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டை காட்டிலும் 22 சதவீதம் அதிகம் ஆகும்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் பஜாஜ் பல்சர் மாடல் அதிகபட்சமாக 4 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. பல்வேறு சர்வதேச சந்தைகளில் அதிகபட்சமாக 3 லட்சத்து 80 ஆயிரம் பஜாஜ் பாக்சர் மாடல் வாகனம் விற்பனை ஆகி உள்ளன.

    டெல்லி ஐஐடி-யுடன் ஹூண்டாய் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், டெல்லி ஐஐடியில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கான அறக்கட்டளை உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

    இதற்கான ஒப்பந்தங்களை டெல்லி ஐஐடி இயக்குனர் வி.ராம்கோபால் ராவ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ்எஸ் கிம் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

    புதிய தலைமுறைக்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதற்காக மாற்று ஆற்றல் மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக, பேட்டரி தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்யும் டெல்லி ஐஐடி மாணவர்களுக்கு கோனா எலக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் நன்கொடையாக வழங்கி உள்ளது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய EQA மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQA எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எஸ்யுவி அந்நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் எலெக்ட்ரிக் கார் ஆகும். புதிய கார் விற்பனை சர்வதேச சந்தையில் வரும் மாதங்களில் துவங்க இருக்கிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQA வெளிப்புற தோற்றம் ஜிஎல்ஏ மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் தனித்துவமாக வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி புதிய கார் கிளாஸ்-பிளாக் பினிஷ் கொண்ட பேனல், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     மெர்சிடிஸ் பென்ஸ் EQA

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி 66.5kWh பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 188 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டு இருக்கிறது. இது டபுள்-டெக்கர் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டுள்ளது.

    புதிய EQA எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் டூயல் மோட்டார் வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக செல்லும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் புதிய 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் துவக்க விலை ரூ. 51.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய லிமோசின் வெர்ஷன் ஸ்டான்டர்டு 3 சீரிஸ் சலூன் மாடலின் நீண்ட வீல்-பேஸ் கொண்ட வேரியண்ட் ஆகும். 3 சீரிஸ் ஸ்டான்டர்டு மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கிரான் லிமோசின் மாடல் 2 பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 53.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கிரான் லிமோசின் மாடலுக்கான முன்பதிவு இந்த மாத துவக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

     பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின்

    புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலில் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 258 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.6 நொடிகளில் எட்டிவிடும். இரு என்ஜின்களுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்கள் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. 

    விலை உயர்வின் படி பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மாடல் தற்சமயம் ரூ. 2.50 லட்சம் என்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மாடல் ரூ. 2.90 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமான மூன்றே மாதங்களில் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

     பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்

    இரு பிஎம்டபிள்யூ மாடல்களிலும் பிஎஸ்6 ரக 312சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் கேடிஎம் 390 டியூக் மாடலுக்கும் ஜி 310 ஜிஎஸ் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கும் போட்டியாக அமைகிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வாகனங்கள் உற்பத்தியில் புது மைல்கல் கடந்துள்ளது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உற்பத்தியில் 10 கோடி யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 10 கோடியை குறிக்கும் யூனிட் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ஆலையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது எக்ஸ்டிரீம் 160ஆர் ஆகும்.

    கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 5 கோடி யூனிட்களை உற்பத்தி செய்ததாக தெரிவித்து இருக்கிறது. மேலும் உலகின் மிகப்பெரும் இருசக்கர வாகன உற்பத்தியாளர் என்ற பட்டத்தை தொடர்ந்து 20-வது ஆண்டாக ஹீரோ மோட்டோகார்ப் தக்கவைத்து கொண்டுள்ளது.

     ஹீரோ மோட்டோகார்ப்

    புது மைல்கல்லை கொண்டாடும் வகையில் ஸ்பிளென்டர் பிளஸ், கிளாமர், பேஷன் ப்ரோ, எக்ஸ்டிரீம் 160ஆர், மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மற்றும் டெஸ்டினி 125 போன்ற மாடல்களின் செலபிரேஷன் எடிஷன் வேரியண்ட்டை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் அறிமுகம் செய்தார். புதிய செலபிரேஷன் எடிஷன் மாடல்கள் பிப்ரவரி 2021 வாக்கில் விற்பனைக்கு வர இருக்கின்றன. 
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி மாடல் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து துவங்கி இருக்கிறது.


    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் தனது ஜிம்னி மாடலின் ஏற்றுமதி துவங்கி உள்ளதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்ட யூனிட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அசத்தலான வடிவமைப்பு மற்றும் ரக்கட் ஆப்-ரோடு அம்சங்களால் சுசுகி ஜிம்னி மாடல் அதிக பிரபலமானது. தற்சமயம் இந்த மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு உலகளவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     மாருதி சுசுகி ஜிம்னி

    தற்சமயம் 184 சுசுகி ஜிம்னி யூனிட்கள் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கிளம்பியுள்ளது. இவை லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

    சுசுகி ஜிம்னி ஆப்-ரோடு எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103.2 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ×