search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVS Jupiter"

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா ஆக்டிவா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருக்கிறது.

    இந்தியாவில் 2013-ம் ஆண்டு அறிமுகமான டி.வி.எஸ். ஜூப்பிட்டர் 25 லட்சம் யூனிட் விற்பனையை கடந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் இந்க மைல்கல் எட்டியிருக்கும் ஜூப்பிட்டர் விற்பனையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

    அந்த வகையில் கடந்த 30 மாதங்களில் அதிவேகமாக பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையான மாடலாக ஜூப்பிட்டர் இருக்கிறது என டி.வி.எஸ். மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. கடந்த பத்து மாதங்களில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றது.



    இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்கூட்டர்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்து இருக்கின்றது. நகர வாசிகள் பலரும் கியர் இல்லாத இருசக்கர வாகனங்களை தங்களது போக்குவரத்துக்கு தேர்வு செய்கின்றனர். இந்த தேவை நகரங்கள் மட்டுமின்றி ஊரக பகுதிகள் மற்றும் சிறிய நகரங்களிலும் அதிகரித்து வருகின்றது.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகவேக விற்பனையாகி வரும் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் விற்பனையில் இன்னமும் ஹோன்டா ஆக்டிவா மாடலுக்கு அடுத்த இடத்திலேயே இருக்கிறது. 2017-18 நிதியாண்டில் மட்டும் முப்பது லட்சம் ஹோன்டா ஆக்டிவா யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது இந்திய ஸ்கூட்டர் சந்தையில் 47 சதவிகிதம் ஆகும். 

    இந்திய ஸ்கூட்டர் சந்தையில் மொத்தம் 67.19 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் 100 முதல் 110 சிசி பிரிவு வாகனங்கள் அதிகளவு விற்பனையாகி இருக்கும் நிலையில், 125சிசி பிரிவு வாகன விற்பனை வேகமாக வளர்ந்து வருகிறது.
    ×