என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
2021 சுசுகி ஹயபுசா மாடலின் முதற்கட்ட யூனிட்கள் விற்று தீர்ந்துள்ளன. விற்பனைக்கு வந்த ஒரே வாரத்தில் 101 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட யூனிட்களுடன் பின்புற சீட் கவுல் வழங்கப்பட்டது. இதே சலுகை அடுத்தக்கட்ட யூனிட்களுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிய ஹயபுசா மோட்டார்சைக்கிள் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் விலை ரூ. 16.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல் விலையை விட ரூ. 2.65 லட்சம் அதிகம் ஆகும். புது மாடலில் புல் எல்இடி லைட்டிங், எல்சிடி ஸ்கிரீன் மற்றும் மேம்பட்ட டிசைன் கொண்டுள்ளது.
2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புது சுசுகி ஹயபுசா மாடல் கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை துவங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானாவில் செயல்படும் தனது உற்பத்தி ஆலையில் வாகன உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது. எனினும், ஆலையை மூடாமல் நோயாளிகளுக்கு பயன்தரும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தியை துவங்குகிறது. இதே பணிகளை குஜராத் ஆலையிலும் மேற்கொள்ள இருப்பதாக மாருதி தெரிவித்து இருக்கிறது.

`கார் உற்பததி பணிகளின் போது மாருதி சுசுகி குறைந்த அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய சூழலில் கிடைக்கும் ஆக்சிஜன் அனைத்தும் உயிர்களை காப்பாற்றவே பயன்படுத்தப்பட வேண்டும்.' என மாருதி சுசுகி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்திக்காக மாருதி சுசுகி ஏற்கனவே திட்டமிட்டிருந்த வருடாந்திர பராமரிப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. முன்னதாக பராமரிப்பு பணிகளுக்காக மே 1 முதல் மே 9 வரை ஆலைகளை மூட மாருதி சுசுகி திட்டமிட்டு இருந்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய EQS மாடல் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எஸ் கிலாஸ் மாடலுக்கு இணையான EQS எலெக்ட்ரிக் எஸ்யுவியை அறிமுகம் செய்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் இந்த மாடல் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு "Coming Soon" என குறிப்பிடப்பட்டு உள்ளது. EQS மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிஸ்போக் பிளாட்பார்ம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் மாடல் ஆகும். பென்ஸ் நிறுவனத்தின் EQE, EQE எஸ்யுவி மற்றும் EQS எஸ்யுவி மாடல்களும் இதே பிளாட்பார்மில் உருவாகின்றன.
இந்த கார் மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 770 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இது 334 பிஹெச்பி பவர், 458 என்எம் டார்க் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3.80 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது 3 சீரிஸ், 2 சீரிஸ் கிரான் கூப், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5 மற்றும் எக்ஸ்7 உள்ளிட்ட மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட்லைன் மற்றும் 220ஐ எம் ஸ்போர்ட் குயிஸ் விலை முறையே ரூ. 80 ஆயிரம் மற்றும் ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 220ஐ ஸ்போர்ட் ட்ரிம் விலை மாற்றப்படவில்லை.

3 சீரிஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் பெட்ரோல் வேரியண்ட் 330ஐ ஸ்போர்ட் மற்றும் 330ஐ எம் ஸ்போர்ட் மாடல்கள் முறையே ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 320டி லக்சரி எடிஷன் விலை ரூ. 60 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ எஸ் டிரைவ் 20ஐ ஸ்போர்ட்எக்ஸ் மற்றும் எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் மாடல்கள் விலை முறையே ரூ. 1,30,000 மற்றும் ரூ. 90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலான எஸ்டிரைவ்20டி எக்ஸ்லைன் விலை ரூ. 1,10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
எக்ஸ்3 சீரிஸ் விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. எக்ஸ்5 எஸ்யுவி விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. எக்ஸ்5 மற்றும் எக்ஸ்7 மாடல்கள் விலை முறையே ரூ. 60 ஆயிரம் மற்றும் ரூ. 3.80 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது பேன் அமெரிக்கா சீரிஸ் மாடலை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பேன் அமெரிக்கா 1250 மற்றும் 1250 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 துவக்க விலை ரூ. 16.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். பேன் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் மாடலின் விலை ரூ. 19.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

இதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் ஆன்-ரோடு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் ஸ்பெஷல் வேரியண்ட் ஆப்-ரோடு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. இதில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், ஸ்போக் வீல்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. பேன் அமெரிக்கா 1250 ஆல்-அரவுண்ட் எல்இடி லைட்டிங், டிஆர்எல்கள், உயரமான விண்ட்-ஸ்கிரீன், அப்-ஸ்வெப்ட் எக்சாஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய பேன் அமெரிக்கா 1250 இரு வேரியண்ட்களிலும் 1250சிசி, வி ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 149 பிஹெச்பி பவர், 127 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப் கிளட்ச் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்து இருக்கிறது. நாடு முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புது அறிவிப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் ஆலை ஏப்ரல் 29 துவங்கி மே 5 வரை மூடப்படுகிறது.

கொடிய வைரசிடம் இருந்து தனது ஊழியர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுதவிர தேவ்நந்தன் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜன் வினியோகத்தை அதிகப்படுத்த இருப்பதாக எம்ஜி மோட்டார் தெரிவித்து உள்ளது.
முன்னதாக எம்ஜி கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களை அதனை டெலிவரி பெற இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என எம்ஜி மோட்டார் தெரிவித்தது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹன்டர் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய கிளாசிக் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹன்டர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350சிசி பிரிவில் அறிமுகமாக இருக்கிறது.

இந்த மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாகும் என தெரிகிறது. சமீபத்தில் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்த Meteor 350 மாடலும் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பை படங்களின் படி புது மாடல் ஒற்றை சீட் கொண்டிருக்கிறது. மேலும் பிலாக் அலாய் வீல்கள், அகலமான ஹேன்டில்பார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் வட்ட வடிவ ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர்கள் உள்ளன. வட்ட வடிவ ஹெட்லேம்ப் கிளஸ்டர் எல்இடி டே-டைம் ரன்னிங் லைட் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புற தோற்றம் Meteor 350 போன்றே காட்சியளிக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் டேகர் எட்ஜ் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 1.02 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டேகர் எட்ஜ் எடிஷன் பல்சர் 220எப், பல்சர் 180 மற்றும் பல்சர் 150 மாடல்களில் கிடைக்கிறது.
டேகர் எட்ஜ் எடிஷன் புது நிறங்களில் ஆன காஸ்மெடிக் அப்கிரேடுகளை பெற்று இருக்கிறது. டாப் எண்ட் பல்சர் 220எப் மாடல்- பியல் வைட், சபையர் புளூ, வொல்கானிக் ரெட் மற்றும் ஸ்பார்கிள் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1.28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பல்சர் 180 டேகர் எட்ஜ் எடிஷன் மாடல் - பியல் வைட், வொல்கானிக் ரெட் மற்றும் ஸ்பார்கிள் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய பஜாஜ் பல்சர் 150 டேகர் எட்ஜ் எடிஷன் மாடல் - பியல் வைட் மற்றும் சபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் விலை முறையே ரூ. 1.02 மற்றும் ரூ. 1.05 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புது கிரெட்டா எஸ்யுவி மாடலை கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கிரெட்டா 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கிரெட்டா மாடல் E, EX, S, SX மற்றும் SX(O) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் புது கிரெட்டா மாடல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது கிரெட்டா மாடல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வின்படி கிரெட்டா டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 19,600 வரையிலும், பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ. 13,600 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
தற்போது கிரெட்டா பெட்ரோல் வேரியண்ட்கள் விலை ரூ. 9,99,990 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17,67,400 என மாறி இருக்கிறது. டீசல் வேரியண்ட் பேஸ் மாடல் விலை ரூ. 10,51,000 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17,62,400 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பியாஜியோ நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் விலை வெளியீட்டிற்கு முன் அதன் வலைதளத்தில் பதிவிடப்பட்டது.
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா SXR 125 விரைவில் இந்திய சந்தையில் வெளியாக இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் புது மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஆகும். வெளியீட்டிற்கு முன் இந்த ஸ்கூட்டர் விலை அதன் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய அப்ரிலியா SXR 125 விலை ரூ. 1.16 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது SXR 160 மாடலை விட ரூ. 9 ஆயிரம் குறைவு ஆகும். விலை அறிவிப்பை தொடர்ந்து அப்ரிலியா SXR 125 மாடலுக்கான முன்பதிவும் துவங்கி இருக்கிறது.

புதிய அப்ரிலியா SXR 125 முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் வைட், மேட் புளூ, ரெட் மற்றும் நெரோ கிரே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. அப்ரிலியா SXR 125 வடிவமைப்பு SXR 160 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
SXR 125 மாடலில் 125சிசி சிங்கில் சிலிண்டர் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.3 பிஹெச்பி பவர், 9.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் வெளியானதும் இந்த ஸ்கூட்டர் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. அதன்படி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலை விட SXR 125 விலை ரூ. 27 ஆயிரம் அதிகம் ஆகும்.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
கியா மோட்டார் கார்ப்பரேஷன் புது லோகோவை அறிமுகம் செய்தது. புது லோகோ அறிமுகம் செய்யப்பட்டதோடு, பிராண்டு பெயரை கியா மோட்டார்ஸ்-இல் இருந்து கியா இந்தியா என மாற்றி இருக்கிறது. மேலும் ஏழு எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கியா இந்தியா தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி பிராண்டாக கியா இருக்கிறது. இந்திய சந்தையில் 2018 ஆம் ஆண்டு கியா நிறுவனம் களமிறங்கியது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தப்பூர் பகுதியில் கியா தனது ஆலையை நிறுவி இருக்கிறது. 2018 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தனது எஸ்பி கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது.
இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலை ஆகஸ்ட் 2019-இல் கியா செல்டோஸ் பெயரில் அறிமுகம் செய்தது. பின் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாக கியா செல்டோஸ் மாறியது. இதைத் தொடர்ந்து கியா சொனெட் மற்றும் கியா கார்னிவல் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் ஜூலை மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என ஓலா தெரிவித்து இருக்கிறது. முன்னதாக ஓலா நிறுவனம் ஹைப்பர்சார்ஜர் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த இருப்பதாக அறிவித்தது.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 18 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். இதை கொண்டு ஸ்கூட்டரை அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். அந்த வகையில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 150 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

மேலும் இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 60 நிமிடங்களே ஆகும். இந்தியாவில் செயல்படுத்தப்பட இருக்கும் ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் உலகிலேயே மிகவும் அதிக பகுதிகளில் செயல்படும் இருசக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க் ஆக இருக்கும்.
ஒலா நிறுவனம் முதல் ஆண்டில் மட்டும் 400-க்கும் அதிக நாடுகளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிக சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவ திட்டமிட்டு இருக்கிறது. முதற்கட்டமாக 5 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜ் பாயிண்ட்களை சுமார் 100 நகரங்களில் கட்டமைக்க இருக்கிறது.






