என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்காசர் எஸ்யுவி இந்திய வெளியீடு மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் அல்காசர் மாடல் இந்திய வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முன்னதாக அல்காசர் உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
முந்தைய தகவல்களின்படி ஹூண்டாய் அல்காசர் மாடல் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருந்தது. தற்போது இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், மே மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

அதன்படி புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலின் வீல்பேஸ் 2760 எம்எம் ஆக இருக்கிறது. புதிய ஹூண்டாய் கார் 2.0 லிட்டர் பெட்ரோல், யு2 1.5 விஜிடி என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 155 பிஹெச்பி மற்றும் 112 பிஹெச்பி திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
முந்தைய தலைமுறை என்ஜினை விட புதிய என்ஜின் 7 பிஹெச்பி கூடுதல் திறன் மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. ஹூண்டாய் அல்காசர் மாடல் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
சுசுகி நிறுவனம் 194 பிஹெச்பி பவர் வழங்கும் என்ஜின் கொண்ட 2021 ஹயபுசா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 சுசுகி ஹயபுசா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 16.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹயபுசா முந்தைய மாடல்களை விட அதிகளவு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புது மாடலில் ஹெட்லேம்ப், டர்ன் சிக்னல் மற்றும் டெயில் லேம்ப் உள்ளிட்டவை எல்இடி லைட்டிங் கொண்டிருக்கிறது. இந்த மாடல் மேம்பட்ட பிரேம் கொண்டிருக்கிறது. இது மோட்டார்சைக்கிள் விலையை குறைப்பதோடு, 50:50 வீதத்தில் எடை பிரிக்கப்பட்டு இருக்கிறது.
2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 194 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் இருவழி குவிக் ஷிப்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான முன்பதிவு மற்றும் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விரைவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.
பஜாஜ் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் விரைவில் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஏற்கனவே இந்திய விற்பனையகங்களை வந்தடைந்துள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் தற்போது அரோரா கிரீன் மற்றும் வைன் பிளாக், கேன்யான் ரெட் மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் அறிமுகமாகிறது. புது நிறங்கள் டாமினர் 400 மாடலில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. இரு டாமினர்களை வித்தியாசப்படுத்தும் அம்சங்களில் நிறம் மற்றும் பேட்ஜிங் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

புது நிறங்கள் தவிர பஜாஜ் டாமினர் 400 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் தொடர்ந்து 249சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் விலையும் சமீபத்தில் மாற்றப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 1.70 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறியுள்ளது.
இந்திய சந்தையில் பஜாஜ் டாமினர் 250 மாடல் யமஹா FZ25 மற்றும் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளைன் 250 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
போர்டு நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு விட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
போர்டு இந்தியா நிறுவனம் பிகோ, ஆஸ்பையர், பிரீஸ்டைல், இகோஸ்போர்ட் மற்றும் என்டேவர் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. புதிய விலை ஏப்ரல் முதல் அமலாகி இருக்கிறது.
இகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யுவி டைட்டானியம் பிளஸ், எஸ்இ மற்றும் எஸ் வேரியண்ட்கள் தவிர அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இகோஸ்போர்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ. 8.19 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 8.89 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகோ மற்றும் பிரீஸ்டைல் மாடல்கள் விலை ரூ. 18 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
பிளாக்ஷிப் புல்-சைஸ் எஸ்யுவியான என்டேவர் மாடல் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி விலை ரூ. 70 ஆயிரமும், டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி மற்றும் ஸ்போர்ட் 4x4 ஏடி வேரியண்ட்கள் விலை ரூ. 80 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆஸ்பையர் மாடல் விலை ரூ. 3 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பேபியா மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா பேபியா புதிய தலைமுறை மாடல் உருவாகி வருகிறது. இந்த மாடலின் டிசைன் வரைபடங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. நான்காவது தலைமுறை சூப்பர்மினி மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை ஸ்கோடா பேபியா வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0 பிளாட்பார்மில் உருவாகிறது. வரைபடங்களின் படி புதிய ஸ்கோடா கார் ஆக்டேவியா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் முந்தைய வேரியண்ட்களை விட அளவில் பெரியதாக இருக்கிறது.

மேலும் இதன் நீலம், அகலம் மற்றும் உயரம் என காரின் வெளிப்புறம் முழுக்க முந்தைய மாடலை விட பெரியதாகி இருக்கிறது. இந்த காரின் உள்புறமும் மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய பேபியா மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ ஆப்ஷன் வழங்கப்படலாம்.
வரும் வாரங்களில் அறிமுகமாக இருக்கும் ஸ்கோடா பேபியா ஆண்டு இறுதியில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய பேபியா மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
தற்காலிகமாக மூடப்பட இருக்கும் ஆலையில், அரசு உத்தரவுகள் சரியாக பின்பற்றப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை பணியமர்த்த இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஏப்ரல் 26 முதல் மே 14, 2021 வரை தனது உற்பத்தி ஆலையை தற்காலிகமாக மூடுகிறது. ஆலையில் வருடாந்தர சீரமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த காலக்கட்டத்தில் பிடாடியில் செயல்படும் இரண்டு ஆலைகளும் மூடப்படுகிறது. இதனால் இரு ஆலைகளிலும் பணிகள் முழுமையாக நிறுத்தப்படும். இந்த நடவடிக்கை காரணமாக இரு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் வினியோகமும் பாதிக்கப்படும்.
தற்காலிக இடைவெளி காலத்தில் கிளான்சா, அர்பன் குரூயிசர், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வினியோகம், சர்வீஸ் உள்ளிட்ட பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆலைகள் மூடப்பட்டு இருக்கும் போது, அரசு விதிகளுக்கு உட்பட்டு குறைந்த ஊழியர்களே பணியில் இருப்பர்.
இத்தாலியை சேர்ந்த வெஸ்பா பிராண்டு இந்த ஆண்டு தனது 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
இத்தாலி நாட்டு இருசக்கர பிராண்டான வெஸ்பா உற்பத்தியில் 1.9 கோடி யூனிட்களை கடந்துள்ளது. இந்த ஆண்டு 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வெஸ்பா தனது 1.9 கோடி யூனிட் ஜிடிஎஸ் 300 75-வது ஆண்டுவிழா ஸ்பெஷல் எடிஷன் மாடல் என தெரிவித்துள்ளது. இந்த யூனிட் பொன்டெடரா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்கள் வெஸ்பா ஜிடிஎஸ் 125சிசி மற்றும் 300சிசி, வெஸ்பா ப்ரிம்வெரா 50சிசி, 125சிசி மற்றும் 150சிசி மாடல்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை இந்த ஆண்டு முழுக்க விற்பனை செய்யப்படுகிறது. இரு மாடல்களும் ஸ்பெஷல் எல்லோ மெட்டாலிக் பாடிவொர்க் செய்யப்படுகிறது. இதன் சைடு பேனல் மற்றும் மட்கார்டு உள்ளிட்டவைகளில் 75 எண் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

வெஸ்பா தனது வாகனங்களை உலகம் முழுக்க சுமார் 83 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. வெஸ்பா வாகனங்கள் பொன்டெடரா, வின் பு மற்றும் பரமதி உள்ளிட்ட ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வெஸ்பா பிராண்டு 1.8 கோடிக்கும் அதிக யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சீரிஸ் கார்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி உள்ளது.
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது மாடல்களுக்கு BZ பெயர்களை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் மத்திய வர்த்தகம் மற்றும் காப்புரிமை பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது.

டொயோட்டாவின் புது BZ சீரிஸ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கானது ஆகும். டொயோட்டா BZ சீரிசில் 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் ஏழு புதிய எலெக்ட்ரிக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. சமீபத்தில் டொயோட்டா BZ4X கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது BZ சீரிசில் முதல் மாடல் ஆகும்.
இந்திய சந்தையில் பயன்படுத்த BZ, BZ, BZ1X, BZ2, BZ2X, BZ3, BZ3X, BZ4, BZ4X, BZ5 மற்றும் BZ5X போன்ற பெயர்களுக்கு பதிவு செய்துள்ளது. இவை கடந்த ஆண்டு மே முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுக்கான கால அவகாசம் 2030 வரை பொருந்தும்.
ஸ்கோடா நிறுவனத்தின் மூன்று புது எஸ்யுவி மாடல்கள் வெளியீடு திட்டமிட்டப்படி நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2021 ஆக்டேவியா மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வந்தது. இம்மாதம் அறிமுகமாக இருந்த நிலையில், 2021 ஸ்கோடா ஆக்டேவியா வெளியீடு ஓத்துவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு பெருமளவு அதிகரித்து வருவதால், இதன் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
`சமயங்களில் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு, உறுதியுடன் வருவது மிகவும் அவசியமானது. ஸ்கோடா ஆட்டோ புதிய ஆக்டேவியா வெளியீட்டை தற்போதைய நிலைமை மாறும் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. வெளியீடு சார்ந்த திட்டங்களை தொடர்ந்து தெரிவிப்போம். பாதுகாப்பாக இருந்து, வைரஸ் தொற்றை எதிர்த்து ஒன்றாக பாடுபடுவோம்.' என ஜாக் ஹாலிஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
2021 வோக்ஸ்வேகன் போலோ மாடல் 9.2 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.
வோக்ஸ்வேகன் நிறவனம் 2021 போலோ மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது முந்தைய மாடலை விட அகலமாக இருக்கிறது. புது எல்டி டிஆர்எல்கள், மேம்பட்ட மெல்லிய முன்புற கிரில், புல் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படகிறது.
பின்புறம் 2-செக்ஷன் எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. இந்த கார் லைப், ஸ்டைல் மற்றும் ஆர் லைன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப 15 முதல் 16 இன்ச் அளவில் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

இதன் கேபின் 9.2 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, புது ஸ்டீரிங் வீல், ப்ளூடூத் மொபைல் போன் இன்டர்பேஸ், ஹீட்டெட் மற்றும் எலெக்ட்ரிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVMகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய 2021 வோக்ஸ்வேகன் போலோ 1.0 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்கப்படுகிறது. புதிய போலோ மாடல் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 GLA காம்பேக்ட் பிரீமியம் எஸ்யுவி விரைவில் இந்திய சந்தையில் வெளியாகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய 2021 GLA மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. காம்பேக்ட் பிரீமியம் எஸ்யுவி மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த மாடல் இரு டர்போ பெட்ரோல், ஒரு டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் 7 ஸ்பீடு அல்லது 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் AMG GLA35 வேரியண்ட் ஏ35 4மேடிக் மாடலில் வழங்கப்பட்ட பவர் டிரெயின் வழங்கப்படும் என்றும் டீசல் வேரியண்ட்களில் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. தோற்றத்தில் புது மாடல் முந்தைய எஸ்யுவி போன்றே காட்சியளிக்கிறது.

புது மாடலின் முன்புறம் மேம்பட்ட கிரில், பம்ப்பர், மல்டிபீம் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகிறது. பின்புறம் மேம்பட்ட டெயில் லேம்ப்கள், பம்ப்பரில் பிளாக் இன்சர்ட்கள் உள்ளன. இத்துடன் 17 அல்லது 18 இன்ச் டையர்கள் வழங்கப்படுகின்றன. GLA-வின் AMG லைன் 19 இன்ச் அலாய் வீல் கொண்டிருக்கிறது.
இந்த எஸ்யுவி மாடல் 1.3 லிட்டர் இன்-லைன் 4 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்-லைன் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 301 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அனைத்து என்ஜின்களுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் அல்லது 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் ஐஎம்யு சிஸ்டம், ரைடு-பை-வயர் திராட்டிள், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
சுசுகி நிறுவனம் 2021 ஹயபுசா மாடலை ஏப்ரல் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த தகவலை சுசுகி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹயபுசா பல ஆண்டுகளாக பிரபல மாடலாக இருக்கிறது.
2021 ஹயபுசா மாடல் 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

புது மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.






