என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் தனது நான்காவது எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. டிகுவான் எஸ்யுவி மாடல் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும், சிறிது காலத்திற்கு இந்த மாடல் விற்பனையை நிறுத்தி, பின் புது தோற்றத்தில் இந்த மாடலை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்தது.

    தற்போது இந்த மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனை மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருந்தது. எனினும், புது மாடல் வெளியீட்டை வோக்ஸ்வேகன் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     வோக்ஸ்வேகன் டிகுவான்

    டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் எல்இடி மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட மெல்லிய ஹெட்லேம்ப்கள், கூர்மையாக காட்சியளிக்கும் கிரில், ரி-டிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், இதன் மத்தியில் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பம்ப்பரில் முன்புற சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த கார் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் கொண்டிருக்கும். இது 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4MOTION ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    இரண்டு புது நிறங்கள் மற்றும் 17 புது அம்சங்களுடன் 2021 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    கியா நிறுவனத்தின் 2021 செல்டோஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ 9.95 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.65 லட்சம் ஆகும். டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புது கியா செல்டோஸ் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கியா எஸ்பி கான்செப்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் மாடல் 2019 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. பின் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இடம்பிடித்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின் 2021 மால் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     கியா செல்டோஸ்

    இந்த மாடல் புது லோகோவுடன் அறிமுகமாகி இருக்கிறது. இதுதவிர இரண்டு புது வேரியண்ட் மற்றும் 17 புது அம்சங்களை 2021 செல்டோஸ் மாடல் கொண்டிருக்கிறது. புது லோகோ காரின் பொனெட் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. 

    2021 கியா செல்டோஸ் மாடலில் ஒரு டீசல், இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் IVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஏப்ரல் மாத வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் 53,298 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 19 சதவீதம் குறைவு ஆகும். 53,298 யூனிட்களில் 48,789 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4509 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    ஏப்ரல் 2020 காலக்கட்டத்தில் இந்தியாவில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக வாகனங்கள் விற்பனை முற்றிலும் தடைப்பட்டது. பின் வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகின. இந்த ஆண்டு துவக்கம் முதலே வாகனங்கள் விற்பனையில் கணிசமான வளர்ச்சியை நிறுவனங்கள் பதிவு செய்தன.

    தற்போது சில தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருவதால், வாகன விற்பனை சரிவடைய துவங்கி இருக்கிறது. இதே காரணத்தால் ராயல் என்பீல்டு வாகனங்கள் விற்பனையும் குறைந்து இருக்கிறது. 

    ஸ்கோடா நிறுவனம் தனது புதிய தலைமுறை பேபியா மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிட இருக்கிறது.

     
    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை பேபியா மாடலை நாளை (மே 4) சர்வதேச சந்தையில் வெளியிடுகிறது. இது விற்பனைக்கு வரும் நான்காம் தலைமுறை பேபியா மாடல் ஆகும். இதன் முதல் தலைமுறை மாடல் 22 ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

     ஸ்கோடா பேபியா

    புது தலைமுறை பேபியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது முந்தைய மாடலை விட 111 எம்எம் நீளமாகவும், 48 எம்எம் அகலமாகவும் இருக்கிறது. மேலும் இந்த கார் கூடுதலாக 50 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது.

    புதிய பேபியா மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ ஆப்ஷன் வழங்கப்படலாம். வரும் வாரங்களில் அறிமுகமாக இருக்கும் ஸ்கோடா பேபியா ஆண்டு இறுதியில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய பேபியா மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏப்ரல் மாத ஏற்றுமதியில் 592 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.


    இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 1,26,570 யூனிட்களை உள்நாட்டில் விற்பனை செய்து இருக்கிறது.

     பஜாஜ் மோட்டார்சைக்கிள்

    ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த மாதம் மட்டும் 2,21,603 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 592 சதவீதம் அதிகம் ஆகும். ஒட்டுமொத்த ஏற்றுமதியை எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. 

    இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் 2020 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 மார்ச் மாதத்தில் 1,81,393 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரலில் பஜாஜ் ஆட்டோ 30.22 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

    கியா இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலை மேம்படுத்தி அறிமுகம் செய்து இருக்கிறது.


    கியா இந்தயா நிறுவனம் புதிய சொனெட் மாடலை அறிமுகம் செய்தது. புது சொனெட் துவக்க விலை ரூ. 6.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது மாடலில் கியா நிறுவனம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.25 லட்சம் ஆகும்.

    2021 கியா சொனெட் மாடலில் கியா இந்தியாவின் புது லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் இரண்டு புது வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.7 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடி ஏடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

     2021 கியா சொனெட்

    இத்துடன் புது சொனெட் மாடலில் பேடில் ஷிப்டர்கள், வாய்ஸ் அசிஸ்ட் வசதி கொண்ட சன்ரூப், ரியர் விண்டோ சன்ஷேட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. பேடில் ஷிப்டர்கள் HTX 7DCT, GTX+ 7DCT பெட்ரோல், HTX AT, GTX + AT டீசல் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.

    வாய்ஸ் அசிஸ்ட் சன்ரூப் வசதி டாப் எண்ட் மாடல்களான HTX+, GTX+ வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ரியர் வியூ விண்டோ சன்ஷேட்கள் HTX, HTX+ மற்றும் GTX+வேரியண்ட்களில் கிடைக்கிறது. 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேட்ச்பேக் மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் நிறங்களை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது. டியாகோ விக்ட்ரி எல்லோ நிற வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டது. 

    தற்போது டியாகோ ஹேட்ச்பேக் மாடல் பிளேம் ரெட், பியூர் சில்வர், அரிசோனா புளூ, பியல்சென்ட் வைட் மற்றும் டேடோனா கிரே என ஐந்து நிறங்களில் கிடைக்கும் என டாடா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக மார்ச் 2021 மாதத்தில் அரிசோனா புளூ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

     டாடா டியாகோ

    விற்பனை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து டியாகோ விக்ட்ரி எல்லோ நிற வேரியண்ட் டாடா வலைதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறது. தற்போது டியாகோ ஹேட்ச்பேக் மாடல் XE, XT, XZ மற்றும் XZ+ ட்ரிம்களில் மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்த கார் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவன இந்திய சந்தையில் மார்ச் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் மார்ச் 2021 மாத வாகன விற்பனையில் 115 சதவீத வளரச்சியை பதிவு செய்துள்ளது. மார்ச் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 2.02 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

     டிவிஎஸ் ஸ்கூட்டர்

    இதே காலக்கட்டத்தில் வாகன ஏற்றுமதி 164 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மார்ச் 2021 வாக்கில் டிவிஎஸ் நிறுவனம் 1.05 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. 2020 மார்ச் மாதத்தில் இது 50,197 யூனிட்களாகவே இருந்தது. 2020 மார்ச் மாதத்தில் உள்நாட்டில் 94,103 யூனிட்களை விற்பனை செய்தது.

    ஸ்கூட்டர்களை பொருத்தவரை டிவிஎஸ் நிறுவனம் 206 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 2021 மார்ச் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 1.04 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனம் விரைவில் மேம்பட்ட அபாச்சி ஆர்ஆர்310 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது செல்டோஸ் மாடல் பல்வேறு புது அம்சங்களுடன் வெளியாக இருக்கிறது.


    2021 கியா செல்டோஸ் மாடல் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த எஸ்யுவி மாடல் ஒட்டுமொத்த ஸ்டைலிங், டிசைன், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது.

    எனினும், சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் கியா அறிமுகம் செய்த முதல் மாடல் கியா செல்டோஸ் தான். இது 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கியா எஸ்பி கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

     கியா செல்டோஸ்

    பின் 2019 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தலான அம்சங்கள், தலைசிறந்த என்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கியா செல்டோஸ் அறிமுகமானது. அறிமுகமான சிறு காலக்கட்டத்திலேயே இது அந்த பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இடம்பெற்றது.

    தற்போது கியா நிறுவனம் 2021 செல்டோஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த மாடல் இந்தியா வர இருக்கிறது. 2021 செல்டோஸ் மாடல் கியா நிறுவனத்தின் புது லோகோ கொண்டிருக்கும் என தெரிகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் சர்வதேச பந்தய களத்தில் சோதனை செய்யப்படுகிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது EQS மாடலை அறிமுகம் செய்தது. பல்வேறு அதிநவீன அம்சங்கள் நிறைந்த புது EQS குறைந்த ரைடு உயரம், பிரம்மாண்ட மஞ்சள் நிற ஏஎம்ஜி பிராண்டிங் கொண்டுள்ளது. EQS மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிஸ்போக் பிளாட்பார்ம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் மாடல் ஆகும். 

     மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி EQS

    வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் நர்பர்கிரிங் களத்தில் சோதனை செய்யப்படுகிறது. பென்ஸ் நிறுவனத்தின் EQE, EQE எஸ்யுவி மற்றும் EQS எஸ்யுவி மாடல்களும் இதே பிளாட்பார்மில் உருவாகின்றன. இந்த கார் மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 770 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இது 334 பிஹெச்பி பவர், 458 என்எம் டார்க் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 சிவிக் மாடல் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஹோண்டா நிறுவனம் தனது புது சிவிக் மாடல் புகைப்படங்களை வெளியிட்டது. 50 ஆண்டுகள் வரலாற்றில் மிகவும் அதிகநவீன அம்சங்கள் நிறைந்த மாடலாக ஹோண்டா சிவிக் இருக்கிறது. இதன் இந்திய வெளியீட்டுக்கு மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்ற சூழலில் தற்போது இதன் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

     2022 ஹோண்டா சிவிக்

    புது மாடல் முந்தைய வெர்ஷன்களை விட மிக எளிமையான டிசைன் கொண்டிருக்கிறது. இது மேன்-மேக்சிமம், மெஷின் மினிமம் என அழைக்கப்படுகிறது. புதிய கார் அளவில் 4673 எம்எம் நீளம், 1801 எம்எம் அகலம், 1415 எம்எம் உயரம், 2735 எம்எம் வீல்பேஸ் கொண்டுள்ளது.

     2022 ஹோண்டா சிவிக்

    இந்த மாடலில் புது எல்இடி ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் எல்இடி லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் புளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் யூனிட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்கள் உள்ளன.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் சிஎன்ஜி வேரியண்ட் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


    மாருதி சுசுகி வேகன் ஆர் சிஎன்ஜி மாடல் விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் மாருதி நிறுவனம் தனது சிஎன்ஜி வேகன் ஆர் மாடலை - ஆடம் ஆரஞ்சு, நட்மெக் பிரவுன் மற்றும் பூல்சைட் புளூ என மூன்று புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.

    முன்னதாக இந்த மாடல் சாலிட் வைட், சில்கி சில்வர் மற்றும் மேக்மா கிரே என மூன்று நிறங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் மொத்தத்தில் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. புது நிறங்கள் மட்டுமின்றி வேகன் ஆர் மாடலுக்கு அசத்தலான சலுகையும் வழங்கப்படுகிறது.

     மாருதி சுசுகி வேகன் ஆர் சிஎன்ஜி

    மாருதி சுசுகி வேகன் ஆர் சிஎன்ஜி மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், சிஎன்ஜி வசதியுடன் வழங்கப்படுகிறது. பெட்ரோல் திறனில் இந்த மாடல் 67 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. சின்ஜி கொண்டு இயக்கும் போது 58 பிஹெச்பி பவர், 78 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், VXi வேரியண்டிற்கு மட்டும் கூடுதலாக AMT யூனிட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் மாருதி சுசுகி வேகன் ஆர் சிஎன்ஜி மாடல் விலை ரூ. 5.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்குகிறது.
    ×