என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மாருதி சுசுகி நிறுவனம் மே மாதத்திற்கான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் செயல்படும் தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் LXi வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விட்டாரா பிரெஸ்ஸா ZXi மற்றும் ZXi+ வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், LXi மற்றும் VXi வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி ஆல்டோ மாடலுக்கு ரூ. 17 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 14 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. டிசையர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ 8 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி வேகன் ஆர் மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், சிஎன்ஜி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஈகோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், செலரியோ மற்றும் எர்டிகா மாடல்களுக்கு முறையே ரூ. 15ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆடம்பர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உருவெடுக்கும் பணிகளில் பென்ட்லி ஈடுபட்டு வருகிறது.
பென்ட்லி நிறுவனம் 2025 வாக்கில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இன்டெர்னல் கம்பஷன் என்ஜின்களை மாற்றி முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற இருக்கிறது. புது எலெக்ட்ரிக் எஸ்யுவி மூலம் முழுமையான ஆடம்பர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாறுகிறது.

முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை உற்பத்தி செய்ய பென்ட்லி நிறுவனம் ஆடி நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது. பென்ட்லியின் புது எலெக்ட்ரிக் எஸ்யுவி வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆர்டெமிஸ் பிளாட்பார்மை பயன்படுத்த இருக்கிறது.
புது எலெக்ட்ரிக் மாடல்கள் வழக்கமான மாடல்களை விட அதிக எடை கொண்டிருக்கும் என பென்ட்லி தெரிவித்து இருக்கிறது. முழுமையான எலெக்ட்ரிக் மாடல் மட்டுமின்றி பிளையிங் ஸ்பர் மற்றும் கான்டினென்டல் ஜிடி மாடல்களின் பிளக் இன் ஹைப்ரிட் வெர்ஷன்களை உருவாக்கும் பணிகளில் பென்ட்லி ஈடுபட்டு வருகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது பேபியா மாடல் பல்வேறு பாடி ஸ்டைல்களை கொண்டிருக்கிறது.
செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் நான்காவது தலைமுறை பேபியா மாடலை அறிமுகம் செய்தது. புது மாடல் தலைசிறந்த பாதுகாப்பு, அதிநவீன தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என ஸ்கோடா தெரிவித்து இருக்கிறது.
ஸ்டான்டர்டு மாடல் தவிர, புது பேபியா காம்பி, மான்ட் கர்லோ, காம்பி மான்ட் கர்லோ, பிளாக் எடிஷன் காம்பி ஸ்கவுட்லைன், க்ளெவர் மற்றும் காம்பி க்ளெவர் போன்ற பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. அறிமுகத்தின் போது புது பேபியா ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும்.

புது பேபியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த மாடல் பின்புற இருக்கை பயனர்களுக்கு அதிக இடவசதியை வழங்குகிறது. உள்புறம் புதிய LED ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக பேபியா மாடலில் ஆப்ஷனல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.
புது தலைமுறை ஸ்கோடா பேபியா மாடல் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் MPI EVO என்ஜின் இருவித டியூனிங்கிலும், 3 சிலிண்டர் TSI EVO என்ஜின் இருவித டியூனிங்கிலும், 1.5 லிட்டர் TSI 4 சிலிண்டர் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா ஹேச்ட்பேக் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. கடந்த மாதம் கேம்ரி, பார்ச்சூனர் லெஜண்டர், இன்னோ க்ரிஸ்டா போன்ற மாடல்களின் விலை ரூ. 1,18,000 வரை உயர்த்தப்பட்டது.

கிளான்சா ஹேட்ச்பேக் மாடல் ஜி மற்றும் வி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஜி ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 15,700, ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 33,900 மற்றும் டாப் எண்ட் வி வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் மிட் மற்றும் ஹை கிரேட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் விலை முறையே ரூ. 12,500, ரூ. 2500 மற்றும் பிரீமியம் கிரேட் வேரியண்ட் விலை ரூ. 5,500 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஹஸ்க்வர்னா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹஸ்க்வர்னா நிறுவனம் தனது வாகனங்களை படிப்படியாக எலெக்ட்ரிக் மயமாக்க திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் இ பைலன் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதுதவிர இ ஸ்கூட்டர் மாடல் புகைப்படத்தை கடந்த ஆண்டு வெளியிட்டு இருந்தது.

அந்த வரிசையில் புது எலெக்ட்ரிக் மாடல்கள் 2022 முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என பிரெர் மொபிலிட்டி ஏஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக கான்செப்ட் மாடல் மற்றும் இ ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது.
தற்போது இரு மாடல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இ ஸ்கூட்டர் 4kW மோட்டார் கொண்டிருக்கும். எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 4kW மற்றும் 10kW மோட்டார் கொண்டிருக்கும். இரு எலெக்ட்ரிக் மாடல்களும் பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
2018 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறையாக வால்வோ இந்தியா தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வில் S90, XC40, XC60 மற்றும் XC90 போன்ற மாடல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாடல்களுக்கான விலை உயர்வு மே 3 ஆம் தேதி முதல் அமலாகிறது.
உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பது, கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவது போன்ற காரணங்களால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2018 முதல் வாகனங்கள் விலையை வால்வோ உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

வால்வோ கார்கள் புது விலை விவரம்
- வால்வோ S90 D4 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 60,90,000
- வால்வோ XC40 T4 R டிசைன் ரூ. 41,25,000
- வால்வோ XC60 D5 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 60,90,000
- வால்வோ XC90 D5 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 88,90,000
வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய S60 செடான் மாடல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 45.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆக இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய XUV700 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் XUV700 மாடலை 2022 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் 2021 அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
இந்தியாவில் அறிமுகமானதும், இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் XUV500 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் XUV700 பல்வேறு புது அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா XUV700 நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என்றும் XUV500 மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய XUV700 மஹிந்திரா நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகத்தரம் வாய்ந்த அம்சங்கள் நிறைந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த கார் லெவல் 1 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் பார்க்கிங், லேன் சேன்ஜ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய XUV700 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இரு வேரியண்ட்களும் சவுகரியமான இடவசதியை வழங்கும்.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கைகர் மாடல் விலையை திடீரென மாற்றி இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனக்கின் கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது. ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே தனது கார் மாடல்கள் விலை உயர்த்தப்படும் என அறிவித்து இருந்தது. அந்த வகையில், தற்போது இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புது கைகர் மாடல் விலை ரூ. 3 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 33 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் RXE, RXL, RXT மற்றும் RXZ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ரெனால்ட் கைகர் பேஸ் வேரியண்டான RXE விலையில் எந்த மாற்றமும் மேறஅகொள்ளப்படவில்லை. இதன் மிட்-ரேன்ஜ் RXL வேரியண்ட் விலை ரூ. 23 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வின் படி இந்த வேரியண்ட் புது விலை ரூ. 6.32 லட்சத்தில் துவங்கி ரூ. 7.62 லட்சம் என மாறி இருக்கிறது.
இதேபோன்று RXT வேரியண்ட் விலை ரூ. 6.80 லட்சத்தில் துவங்கி ரூ. 8.80 லட்சம் என மாறி இருக்கிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.69 லட்சத்தில் துவங்கி ரூ. 9.75 லட்சம் என மாறி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் சிஎன்ஜி மாடல் 2021 நிதியாண்டில் அதிகம் விற்பனையாகி இருக்கிறது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவு உயரத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக பலர் சிஎன்ஜி திறன் கொண்ட வாகனங்களை தேர்வு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது.

முன்னணி கார் விற்பனையாளரான மாருதி சுசுகி 2021 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுசுகி சிஎன்ஜி மாடல்கள் விற்பனையில் 41.6 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகியின் வேகன் ஆர் சிஎன்ஜி மாடல் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து எர்டிகா சிஎன்ஜி, ஈகோ சிஎன்ஜி மற்றும் செலரியோ சிஎன்ஜி உள்ளிட்டவை அதிகம் விற்பனையாகும் மாடல்கள் பட்டியலில் உள்ளன.
சுசுகி நிறுவனம் தனது வி ஸ்டாம் 1050 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்து இருக்கிறது.
ஹயபுசா மற்றும் GSX-S1000 மாடல்களை தொடர்ந்து சுசுகி நிறுவனம் தனது வி ஸ்டாம் 1050 மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய 2021 வி ஸ்டாம் 1050XT மாடல் புது நிறங்களில் கிடைக்கிறது. அதன்படி இந்த மாடல் ஸ்டீலி கிரே மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

2021 சுசுகி வி ஸ்டாம் 1050 மாடல் கேண்டி டேரிங் ரெட் / கிளாஸ் ஸ்பார்கில் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. புதிய 2021 சுசுகி வி ஸ்டாம் முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லண்டனில் இதன் விலை முறையே 9,999 யூரோக்கள் மற்றும் 11,599 யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புது மாடல்கள் யூரோ 5 புகை விதிகளுக்கு உட்பட்டு உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இரு மாடல்களும் எதிர்காலத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் எம்ஜி குளோஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் குளோஸ்டர் எஸ்யுவி மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு பேஸ் வேரியண்ட் தவிர அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இதன் காரணமாக குளோஸ்டர் மாடல் துவக்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அதன்படி எம்ஜி குளோஸ்டர் துவக்க விலை ரூ. 29.98 லட்சம் ஆகும். எம்ஜி குளோஸ்டர் பேஸ் வேரியண்ட் தவிர மற்ற மாடல்கள் விலை ரூ. 50 ஆயிரத்தில் துவங்கி ரூ. 80 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. ஸ்மார்ட் 6 சீட்டர் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரமும், 7 சீட்டர் வேரியண்ட் விலை ரூ. 70 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்கள் புது விலை முறையே ரூ. 31.98 லட்சம், ரூ. 35.38 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் விரைவில் பொலிரோ பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
2021 மஹிந்திரா பொலிரோ பேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் வந்தடைந்தது. தற்போதைய புகைப்படங்களின் படி 2021 மஹிந்திரா பொலிரோ மாடல் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புது நிறம் தவிர இந்த எஸ்யுவி மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி புது பொலிரோ மாடலில் ஒரே என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் அப்டேட் செய்யப்படாத மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா பொலிரோ இருக்கிறது. இந்த ரக்கட் எஸ்யுவி கணிசமான அளவு விற்பனையாகி வருகிறது.

புது மாடலில் ஒரே ஹெட்லேம்ப் யூனிட், புது கிரில், பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டூயல் டோன் பினிஷ் இந்த காரின் முக்கிய அப்டேட் ஆக இருக்கிறது. இந்த எஸ்யுவி பேன்ஸி ஷேட் ரெட், பம்ப்பர் சேடின் கிரே நிறம் கொண்டிருக்கிறது. இதன் ரியர் வியூ மிரர்கள் பிளாக் பினிஷ் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மஹிந்திரா பொலிரோ மாடல் பி4, பி6 மற்றும் பி6 (ஒ) என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வேரியண்ட்களும் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.






