என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஸ்கோடா நிறுவனத்தின் 2021 ஆக்டேவியா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடல் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
புது ஸ்கோடா ஆக்டேவியா வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், 2021 ஆக்டேவியா மாடல் ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஸ்கோடா விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடல் விலை ரூ. 27.5 லட்சத்தில் துவங்கி ரூ. 32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஆக்டேவியா மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடல் வெளியீட்டை தொடர்ந்து இதன் விநியோகம் துவங்கும் என ஸ்கோடா இந்தியா இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். மேலும் இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
பிரீமியம் சூப்பர்கார் உற்பத்தி செய்யும் மெக்லாரென் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ப்ரிட்டனை சேர்ந்த பிரீமியம் சூப்பர்கார் உற்பத்தியாளரான மெக்லாரென் இந்திய சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கென விற்பனை முகவர்களை நியமிப்பது, சர்வீஸ் சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.
மெக்லாரென் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மற்ற பகுதிகளுடன் இந்தியாவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கான வலைதளம் இன்னும் துவங்கப்படவில்லை. மெக்லாரென் வாகனங்கள் அனைத்தும் கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

இந்தியாவில் முதற்கட்டமாக ஜிடி, அர்டுரா 720எஸ் மற்றும் 720எஸ் ஸ்பைடர் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய மெக்லாரென் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய சந்தையில் லம்போர்கினி, போர்ஷ், பெராரி மற்றும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக மெக்லாரென் களமிறங்குகிறது. எனினும், இதுகுறித்து மெக்லாரென் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
ஆடி நிறுவனத்தின் இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஆடி நிறுவனம் தனது இ டிரான் மாடலை இந்திய வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. இ டிரான் மாடல் ஆடி நிறுவனத்தின் முதல் ஆல் எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். வரும் மாதங்களில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இ டிரான் மாடல் முன்புறம் ஒற்றை பீஸ் பிளான்க்டு-அவுட் கிரில் வழங்கப்படுகிறது. இத்துடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், இ டிரான் மாடலுக்கான பிரத்யேக டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. டெயில் லேம்ப்கள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் உள்ளது. இது டெயில்கேட் முழுக்க நீள்கிறது.
இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்ப்படுகின்றன. இவை இணைந்து 402 பிஹெச்பி பவர், 664 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400-க்கும் அதிக கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும்.
டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா 950 S GP மோட்டார்சைக்கிள் 973சிசி, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
இத்தாலி நாட்டு சூப்பர்பைக் உற்பத்தியாளரான டுகாட்டி இந்தியாவில், மல்டிஸ்டிராடா 950 S GP வைட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போதே, இந்த மாடலின் வைட் நிறம் வெளியாகும் என டுகாட்டி அறிவித்து இருந்தது.
இந்தியாவில் டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 S GP வைட் மாடல் விலை ரூ. 15.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு நாட்டில் உள்ள அனைத்து டுகாட்டி விற்பனையகங்களிலும் நடைபெறுகிறது. புது நிற வேரியண்ட் விலை ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.

புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அம்சங்கள் அடிப்படையில் மல்டிஸ்டிராடா 950S மற்றும் 950 S GP வைட் மாடல்களில் எந்த வித்தியாசமும் இல்லை. டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 S GP மாடலில் 937சிசி, ட்வின் சிலிண்டர் டெஸ்டாஸ்டிரெட்டா என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 111 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் டுகாட்டி குவிக் ஷிப்ட் பை-டைரெக்ஷனல் குவிக் ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க அனைத்து சுங்க சாவடிகளிலும் வாகனங்கள் மஞ்சள் கோடில் இருந்தால் பணம் செலுத்த வேண்டாம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுக்க செயல்பட்டு வரும் சுங்க சாவடிகளுக்கு புது விதிமுறைகளை பிறப்பித்து இருக்கிறது. புது விதிமுறைகள் சுங்க சாவடிகளில் மக்கள் காதிருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புது விதிமுறைகளின் படி, சுங்க சாவடிகளில் வாகன வரிசை 100 மீட்டர்களுக்கும் அதிகமாக நிற்காது. மேலும் சுங்க சாவடிகளில் ஒரு வாகனத்திற்கு அதிகபட்சம் பத்து நொடிகளுக்குள் பணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.

ஒருவேளை சுங்க சாவடியில் வாகன வரிசை 100 மீட்டர்களை கடந்து இருந்தால், வாகனங்கள் கட்டணமின்றி சுங்க சாவடியை கடக்க முடியும். இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சரியாக 100 மீட்டர் பகுதியில் மஞ்சள் நிற கோடி வரையப்பட இருக்கிறது.
சுங்க சாவடிகளில் பாஸ் டேக் முறை பின்பற்றப்படுவதால், இங்கு வாகனங்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைந்து இருக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகன உரிமையாளர்கள் எரிபொருள் சேமிக்க முடியும். தற்போது சதவீத சுங்க சாவடிகளில் பாஸ்டேக் முறை பின்பற்றப்படுகிறது.
ஜெர்மனி நாட்டில் தானியங்கி வாகனங்களை பொது சாலையில் அனுமதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது.
பொது சாலைகளில் தானியங்கி வாகனங்களை அனுமதிக்கும் சட்டத்திற்கு ஜெர்மனி நாட்டின் பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இருக்கிறது. அதன்படி 2022 முதல் ஜெர்மனி சாலைகளில் தானியங்கி வாகனங்கள் இயக்கப்பட இருக்கின்றன.

தானியங்கி வாகனங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த அனுமதிக்கும் புது திட்டம், தானியங்கி வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், தானியங்கி வாகனங்களில் பாதுகாப்பிற்கு ஓட்டுனர் அமர வேண்டிய அவசியம் இருக்காது.
தானியங்கி வாகனத்தினுள் பாதுகாப்பிற்காக ஓட்டுனர் அமர்ந்து இருக்கும் நிலையில் ஜெர்மனியில் நீண்ட காலமாக வாகன சோதனை நடைபெற்று வந்தது. தற்போது பாராளுமன்றத்தின் கீழ் சபையில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தாலும், மேல் சபையில் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே சட்டமாக்கப்படும்.
ஹோண்டா நிறுவனத்தின் முதல் ஆடம்பர விமானம் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் குறைந்த எடை கொண்ட சிறு விமானத்தை உருவாக்கி இருக்கிறது. பல ஆண்டு கால தொடர் முயற்சி காரணமாக இந்த விமானத்திற்கு தேவையான சான்றிதழ்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டாவின் முதல் விமானம் ஹோண்டாஜெட் எலைட் எஸ் என அழைக்கப்படுகிறது.

ஓவர்-தி-விங்-என்ஜின் மவுண்ட் கொண்டிருக்கும் ஹோண்டாஜெட் எலைட் எஸ் சிறப்பான டேக்-ஆப் வெயிட் கொண்டிருக்கிறது. இதன் டேக்-ஆப் வெயிட் 90 கிலோ வரை அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் கூடுதல் பயணிகள் இதில் பயணம் செய்யலாம். இத்துடன் அதிகபட்சம் 225 கிலோமீட்டர் வரை கடக்க முடியும்.
தற்போது பல்வேறு கார் மாடல்களில் பரவலாக வழங்கப்படும் ஆட்டோபைலட் அம்சம் இந்த விமானத்தில் உள்ளது. இது அட்வான்ஸ்டு ஸ்டீரிங் ஆக்மென்டேஷன் சிஸ்டம் என அழைக்கிறது. இதனால் விமான சற்று நேரம் ஓய்வு எடுக்க முடியும். இந்த விமானம் கன்மெட்டல், லூக்ஸ் கோல்டு மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது. தனி விமானத்தை வாங்கி பயன்படுத்த நினைப்போருக்கு புதிய ஹோண்டாஜெட் எலைட் எஸ் சிறந்த தேர்வாக இருக்கும்.
கியா இந்தியா நிறுவனத்தின் எம்பிவி கார் மாடல் அசத்தலான சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது புது வாடிக்கையாளர்களுக்கு ‘Satisfaction Guarantee Scheme’ எனும் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை கியா கார்னிவல் மாடலை வாங்குவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

புது திட்டத்தின் கீழ் கியா கார்னிவல் மாடலை வாங்குவோர், காரை பிடிக்காத பட்சத்தில் அதனை திரும்ப கொடுத்துவிடலாம். இவ்வாறு காரை திரும்ப கொடுக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் கார் 1500 கிலோமீட்டர்களுக்குள் ஓடியிருக்க வேண்டும். இத்துடன் காருக்கு எந்த சேதமும், வேறு எந்த கோளாறும் ஏற்பட்டிருக்க கூடாது.
இந்த திட்டம் கார்னிவல் மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். காரை திரும்ப வழங்கும் போது 95 சதவீத தொகை திரும்ப வழங்கப்படுகிறது. இத்துடன் காரை வழங்கும் போது NOC சான்றும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
கேடிஎம் நிறுவனத்தின் 2021 ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கேடிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை 2021 ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட கேடிஎம் விற்பனையாளர்கள் புதிய ஆர்சி 390 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு விற்பனையாளருக்கும் ஏற்ப, முன்பதிவு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின்படி 2021 கேடிஎம் ஆர்சி 390 மாடல் அடுத்த ஒரு மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய கேடிஎம் ஆர்சி 390 விலை முந்தைய மாடலை விட ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய கேடிஎம் ஆர்சி 390 விலை ரூ. 2.66 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய ஆர்சி 390 பல்வேறு மாற்றங்களுடன் வெளியாகும் என தெரிகிறது.
இந்த மாடலில் 373சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. புது மாடல் டிஎப்டி டிஸ்ப்ளே, குவிக் ஷிப்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா சுப்ரா மாடல் விற்பனைக்கு வருகிறது.
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பிரைட் ஆரஞ்சு நிற 1994 டொயோட்டா சுப்ரா விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் பாரெட் ஜேக்சன் சந்தையில் ஏலம் விடப்பட இருக்கிறது. இந்த சுப்ரா மாடல் 2001 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் வெளியான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் வெளிப்புறம் கேண்டி ஆரஞ்சு நிற பெயின்டிங், நியூக்ளியர் கிளாடியேட்டர் கிராபிக்ஸ் கொண்டு பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பூமெக்ஸ் பாடி கிட், TRD ஸ்டைல் ஹூட், APR அலுமினியம் ரியர் விங், 19 இன்ச் டேச் மோட்டார்ஸ்போர்ட் ரேசிங் ஹார்ட் எம்5 வீல்கள் உள்ளன.
டொயோட்டா சுப்ரா மாடலில் 2JZ-GTE டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கான ஏலம் ஜூன் 17 துவங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய போன்வில் பாபர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 டிரையம்ப் போன்வில் பாபர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது போன்வில் மாடல் விலை ரூ. 11.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய பாபர் மோட்டார்சைக்கிள் பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

2021 பாபர் மோட்டார்சைக்கிள் உயர் ரக தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இதில் 77 ஜென்யூன் டிரையம்ப் அக்சஸரீக்கள் உள்ளன. அக்சஸரீ பட்டியலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட்டிங் மற்றும் பூட்பெக் பொசிஷன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன.
புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிளில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1200சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 78 பிஎஸ் பவர், 106 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதில் உள்ள 12 லிட்டர் பியூவல் டேன்க் 33 சதவீதம் கூடுதல் ரேன்ஜ் வழங்குகிறது.
மெர்ச்டிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 GLA மாடல் இந்தியாவில் நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் GLA மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 42.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த பிரீமியம் எஸ்யுவி மாடல் இந்தியாவில் - GLA 200, GLA 220d, GLA 220d 4மேடிக் மற்றும் AMG லைன் GLA 35 என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
2021 GLA மாடல் முற்றிலும் புதிய வெளிப்புற டிசைன் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலை விட நீளமாகவும், அகலமாகவும் இருக்கிறது. இதன் உயரமும் சற்றே அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புதிய GLA மாடல் ஹை-பெர்பார்மன்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புது அடாப்டிவ் எல்இடி டெயில் லேம்ப்கள் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLA 200 மாடலில் 1332சிசி டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 161 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
GLA 220d மற்றும் 220d 4மேடிக் மாடல்களில் 1920சிசி டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் புதிய பென்ஸ் GLA டாப் எண்ட் மாடல் விலை ரூ. 57.3 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.






