search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NHAI"

    • குறைந்த காலக்கட்டத்தில் அதிக கி.மீ. சாலை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அசத்தல்.
    • புது சாதனை குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி பெருமிதம்.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிதாக உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையின் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறது. அமராவதி மற்றும் அகோலா இடையிலான 75 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை ஐந்தே நாட்களில் கட்டி முடித்ததை அடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை பெற்றது.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் பெற்றுருக்கும் தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத் துறை மந்திரி நிதின் கட்கரி தனது ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் கின்னஸ் சாதனை சான்றிதழ் ஆகியவற்றின் புகைப்படங்களையும் அவர் இணைத்து இருந்தார்.


    கின்னஸ் சாதனை படைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். அமராவதி மற்றும் அகோலா இடையே NH 53 தொடர்ச்சியான சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 105 மணி நேரங்கள், 33 நிமிடங்களில் அமைத்து சாதனை படைத்தது.

    அமராவதி மற்றும் அகோலா இடையிலான நெடுஞ்சாலையின் கட்டுமான பணி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் துவங்கி நேற்று முடிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை கொல்கத்தா, ராய்ப்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த சாலையை அமைக்க 800 ஊழியர்கள், 700 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

    ×