என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஜிஎல்இ எஸ்யுவி மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இவை ஜிஎல்இ 450 4மேடிக் மற்றும் ஜிஎல்இ 400டி 4மேடிக் என அழைக்கப்படுகிறது. இதில் டாப் எண்ட் மாடலான ஜிஎல்இ 450 4மேடிக் பெட்ரோல் மாடல் விலை ரூ. 88.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 4டி 4மேடிக் டீசல் வேரியண்ட் டாப் எண்ட் ஜிஎல்இ 400டி ஹிப்-ஹாப் எடிஷனின் கீழ் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புதிய ஜிஎல்இ 400டி விலை ரூ. 89.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 22 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் கூடுதல் செயல்திறன் வழங்குகிறது. ஹைப்ரிட் பவர்டிரெயினுடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா முதல் முறையாக மாருதி சுசுகியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் முதல் முறையாக மாருதி சுசுகியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 3212 யூனிட்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் மிக மோசமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. கடந்த இரு மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆட்டோமொபைல் துறை பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. மார்ச் மாதத்தின் இரண்டாவது பாதியில் இருந்து நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

ஹூண்டாய் கிரெட்டாவை தொடர்ந்து மாருதி எர்டிகா 2353 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் மாருதி டிசையர் 2215 யூனிட்களும், மஹிந்திரா பொலிரோ 1715 யூனிட்களும், மாருதி இகோ 1617 யூனிட்கள் விற்பனையாகி டாப் 5 இடங்களை பிடித்துள்ளன.
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலையை மாற்றியுள்ளது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் ரூ. 1800 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுசுகி அக்சஸ் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் ஐந்து வேரியண்ட்களிலும், பர்க்மேன் ஸ்டிரீட் மாடல் ஒற்றை வேரியண்ட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டு தற்சமயம் என்ட்ரி லெவல் அக்சஸ் 125 மாடல்ரூ. 68,000 என்றும் டாப் எண்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரூ. 73,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடல் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் விலை ரூ. 1800 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 79,700 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த 2020 கியா செல்டோஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 2020 கியா செல்டோஸ் மாடல் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 கியா செல்டோஸ் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய 2020 கியா செல்டோஸ் மாடல் துவக்க விலை ரூ. 9.89 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.34 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2020 கியா செல்டோஸ் காரில் 115 பிஹெச்பி பவர், 144 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது.
இந்த யூனிட் 140 பிஹெச்பி பவர், 242 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அனைத்து என்ஜின்களும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் சிடி 110 டிரீம் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக சிடி110 டிரீம் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா சிடி 110 டிரீம் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 62,729, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 12 ஆயிரம் விலை அதிகம் ஆகும். ஹோண்டா நிறுவனம் சிடி 110 டிரீம் மாடலினை ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் வழங்குகிறது. இரு மாடல்களிலும் அதிக அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹோண்டா சிடி110 டிரீம் பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட 110சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் விவரங்களை ஹோண்டா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இது பிஎஸ்4 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என கூறப்படுகிறது.
இதுதவிர புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட எரிபொருளை குறைவாக பயன்படுத்தும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. புதிய ஹோண்டா சிடி 110 டிரீம் மோட்டார்சைக்கிளில் ஹோண்டாவின் புதிய இஎஸ்பி ஃபியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெக்கானிக்கல் மாற்றங்கள் தவிர 2020 ஹோண்டா சிடி 110 டிரீம் பிஎஸ்6 மாடலில் புதிய பாடி கிராஃபிக்ஸ், மேம்பட்ட தோற்றம், குரோம் எக்சாஸ்ட் ஷீல்டு, புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய நிறத்திலும் கிடைக்கிறது.
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம் எது என்பதையும், இந்த நேரத்தில் எரிபொருள் நிரப்புவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்.
நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம் அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரம் ஆகும். பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தேக்கி வைக்.கப்பட்டிருக்கும் கொள்கலன் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும்.
இது எளிதில் வெப்படையும் தன்மை கொண்டது. சூரியனின் வெப்பத்தால் பூமியும் வெப்பமடையும். அப்போது பூமிக்குள் இருக்கும் கொள்கலனும் சூடாகும். இதனால் அதனுள் இருக்கும் எரிபொருளும் சூடாகும். எரிபொருள் வெப்பமடையும்போது அதன் அடர்த்தி குறையும்.

எனவே வாகனத்தின் மைலேஜ் குறைய இதுவும் ஒரு காரணமாக அமையும். இதனால் பூமி குளிர்ந்த நிலையில் இருக்கும்போது நாம் எரிபொருளை நிரப்பினால் அது அடர்த்தி மிகுந்து காணப்படும். அடர்த்தியான எரிபொருளை என்ஜினுள் செலுத்தும்போது அது முழுமையாக எரியும். என்ஜினின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.
இதுதவிர பகலில் வாகனத்தின் பெட்ரோல் டேங்கினை திறக்கும் போது, அதன் உள்ளே ஏற்கனவே இருக்கும் எரிபொருளானது வெப்பத்தால் ஆவியாக இருக்கும். அந்த நேரத்தில் டேங்கினை திறந்தால் அந்த ஆவி எரிபொருள் வெளியேறவும் வாய்ப்பு உண்டு. அதனால் காலை அல்லது மாலை, இரவு நேரத்தில் எரிபொருள் நிரப்பலாம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அத்தியாவசியமாக இயக்கப்படும் 2 பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்தும் முறைக்கான சோதனை துவங்கியுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவும் தடுப்பு நடவடிக்கையின் அங்கமாக மாநகர் போக்குவரத்து கழக பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நடத்துனரின் பாதுகாப்பு கருதி, டிக்கெட்டுக்கான பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்தில் ஒட்டப்பட்டு இருக்கும் கியூஆர் கோடினை பயன்படுத்தி பேடிஎம் (Patym), கூகுள் பே (Google pay), போன் பே (Phone pe), அமேசான் பே (Amazon pay) போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்த முடியும். டிக்கெட் கட்டணம் மாநகர போக்குவரத்து கழகத்தின் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய 2 சீரிஸ் மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஸ்பை படங்களில் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புதிய காரின் பின்புறம் புகை வெளியீட்டை சோதனை செய்யும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் காரில் எல்இடி ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள், 5-ஸ்போக் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல்- 220ஐ 181 பிஹெச்பி பவர், 290 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 22டி 188 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என தெரிகிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது மேம்பட்ட ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான 2020 ஜிஎல்எஸ் காரை இந்திய சந்தையில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மார்டின் வென்க் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
புதிய ஆடம்பர எஸ்யுவி மாடலுக்கான டீசரை மெர்சிடிஸ் பென்ஸ் தனது வலைதளத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் அதிக இடவசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மாடல் முந்தைய மாடலை விட 77எம்எம் நீளமாகவும், 22 எம்எம் அகலமாகவும் இருக்கிறது. இத்துடன் புதிய காரின் வீல்பேஸ் பழைய மாடலை விட நீளமாக இருக்கிறது. இதனால் காரின் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு இருக்கைகளில் அமர்வோருக்கு அதிக இடவசதி கிடைக்கும் என தெரிகிறது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் 3.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் 285 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 3.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் 366 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இசட் எஸ் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு இந்திய சந்தையில் மீண்டும் துவங்கியுள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவுகளை மீண்டும் துவங்கியது. புதிய இசட் எஸ் எலெக்ட்ரிக் கார் புதிதாக ஆறு நகரங்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ரூ. 20.88 லட்சம், எக்ஸ் ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், பெங்களூரு மற்றும் ஐதராபாத் என ஐந்து நகரங்களில் மட்டும் இதன் விற்பனை நடைபெற்று வந்தது.

எக்சைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23.58 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கவாசகி நிறுவனத்தின் 2021 கவாசகி நின்ஜா 1000 எஸ்எக்ஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
கவாசகி நிறுவனம் 2021 நின்ஜா எஸ்எக்ஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் நான்காம் தலைமுறை நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடல் ஆகும். இந்தியாவில் புதிய 2021 கவாசகி நின்ஜா எஸ்எக்ஸ் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 10.79 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் முதல் பிரீமியம் ஸ்போர்ட் டூரர் மாடலாக கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் இருக்கிறது. 2021 மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி கூர்மையான வடிவமைப்பு, மேம்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம், இருபக்கங்களில் வழங்கப்பட்ட ட்வின் எக்சிட்களுக்கு மாற்றாக ஒற்றை எக்சாஸ்ட் சிஸ்டம் மோட்டார்சைக்கிளின் வலதுபுறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பக்கவாட்டில் மேம்பட்ட பேனல்களும் பின்புறத்தில் சிறிதளவு மாற்றங்களும் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த என்ஜின் 140 பிஹெச்பி பவர், 111 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எலெக்டிரானிக் திராட்டிள் வால்வுகள், எலெக்ட்ரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், குவிக் ஷிஃப்டர், இன்டெலிஜன்ட் ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், 3 ஸ்டெப் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய 2021 கவாசகி நின்ஜா 1000 எஸ்எக்ஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மெட்டாலிக் கிராஃபைட் கிரே / மெட்டாலிக் டையப்ளோ பிளாக் மற்றும் எமரால்டு கிலேஸ்டு கிரீன் / மெட்டாலிக் கார்பன் கிரே / மெட்டாலிக் கிராஃபைட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஸ்டிரீட் டிரிபில் சீரிஸ் மிட்-ரேன்ஜ் மாடல் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2020 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை.
இதுவரை டிரையம்ப் பேஸ் மாடலான எஸ் வேரியண்ட் மற்றும் டாப் எண்ட் ஆர்எஸ் வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் இந்த வழக்கத்தை மாற்றி டிரையம்ப் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது.

புதிய மோட்டார்சைக்கிளில் ஃபுல் கலர் டிஎஃப்டி ஸ்கிரீன், ஒருபகுதி அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் பெரிய அனலாக் ரெவ் கவுண்ட்டர் வழங்கப்படுகிறது. ஆர் மாடலில் பிரெம்போ எம்4.32 நான்கு பிஸ்டன் மோனோபிளாக் கேலிப்பர்கள், 310 எம்எம் முன்புற டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.






