என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 சிஎல்எஸ் மாடல் காரினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 சிஎல்எஸ் மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 சிஎல்எஸ் மாடல்- மோஜேவ் சில்வர் மற்றும் சர்ரஸ் சில்வர் என இரண்டு புதிய நிறங்கள் மற்றும் புதிய பிளாக் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. இதன் விங் மிரர்களும் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    காரினுள் MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் COMAND சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரேக் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    2021 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ்

    2021 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் மாடலில் 3.0 லிட்டர் இன்லைன், 6 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் இகியூ பூஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 358 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதுதவிர இதே என்ஜின் 425 பிஹெச்பி மற்றும் 581 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் டியூனிங்கிலும் கிடைக்கிறது.

    புதிய சிஎல்எஸ் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும். இதன் 4 மேடிக் 4WD வேரியண்ட் இதே வேகத்தை 4.8 நொடிகளிலும், சாதாரன சிஎல்எஸ் மாடல் 5.1 நொடிகளில் எட்டும் திறன் கொண்டிருக்கின்றன.  
    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் விசேஷ சலுகையை அறிவித்து இருக்கிறது.



    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் மாடல் கார்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ரெனால்ட் நிறுவனத்தின் மூன்று மாடல்களுக்கும் ரூ. 60 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    என்ட்ரி லெவல் க்விட் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 4 ஆயிரத்திற்கு கார்ப்பரேட் சலுகை மற்றும் ரூ. 4 ஆயிரம் கூடுதல் சலுகை உள்ளிட்டவை அடங்கும். கூடுதல் சலுகை ஊரக பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் சலுகை

    ரெனால்ட் டிரைபர் எம்பிவி மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரத்திற்கு லாயல்டி பலன்களும், ரூ. 7 ஆயிரத்திற்கு கார்ப்பரேட் சலுகை மற்றும் ரூ. 10 ஆயிரம் சலுகை ஊரக பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரத்திற்கு எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 20 ஆயிரத்திற்கு லாயல்டி பலன்கள், ரூ. 20 ஆயிரத்திற்கு கார்ப்பரேட் சலுகை மற்றும் ரூ. 10 ஆயிரத்திற்கு ஊரக பலன்கள் வழங்கப்படுகிறது.
    டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஜூப்பிட்டர் பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையையும் இந்தியாவில் அதிரடியாக மாற்றியுள்ளது.



    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஜூப்பிட்டர் பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை இந்தியாவில் சத்தமில்லாமல் உயர்த்தி உள்ளது. விலை உயர்வு ஜூப்பிட்டர் பிஎஸ்6 அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வுக்கு பின் டிவிஎஸ் ஜூப்பிட்டர் பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 62,062 ஆகும். இது முந்தைய விலையை விட ரூ. 651 அதிகம் ஆகும்.

    இந்தியாவில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் பிஎஸ்6 மாடல்- ஸ்டான்டர்டு, இசட்எக்ஸ் மற்றும் கிளாசிக் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஸ்டான்டர்டு மற்றும் இசட்எக்ஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 613 உயர்த்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஜூப்பிட்டர் பிஎஸ்6 இசட்எக்ஸ் மாடல் புதிய விலை ரூ. 64,062 ஆகும்.

    டிவிஎஸ் ஜூப்பிட்டர்

    டாப் எண்ட் மாடலான டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் விலை ரூ. 651 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 68,562 முதல் துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    டிவிஎஸ் ஜூப்பிட்டர் பிஎஸ்6 மாடலில் 110சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.4 பிஹெச்பி பவர், 8.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய என்ஜின் முந்தைய மாடலை விட அதிக செயல்திறன், மைலேஜ் வழங்குகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் எஸ்யுவி மாடல் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



    ஸ்கோடா நிறுவனம் கரோக் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா கரோக் மாடலின் துவக்க விலை ரூ. 24.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சிபியு (கம்ப்லீட்லி பில்ட் யூனிட்) முறையில் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக 1000 யூனிட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் ஸ்கோடா இந்தியா இயக்குனர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கரோக் மாடலை உள்நாட்டில் அசெம்பில் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    ஸ்கோடா கரோக்

    ஸ்கோடா கரோக் மாடலை இந்தியாவில் அசெம்பில் செய்வதற்கான ஆயத்த பணிகள் மட்டுமே துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் காருக்கு கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்ப இதுபற்றிய முடிவு இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய கரோக் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் புதிய கரோக் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய கரோக் மாடலில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.
    ஜீப் நிறுவனத்தின் 2021 காம்பஸ் ஃபேஸ்லிப்ட் எஸ்யுவி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஜீப் நிறுவனம் 2021 காம்பஸ் ஃபேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை சுற்றி அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், முன்புறம் புதிய ஹனிகொம்ப் மெஷ், ஏழு ஸ்லாட் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹெட்லேம்ப்களில் மாற்றம் செய்யப்பட்டு இன்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2021 ஜீப் காம்பஸ்

    மேலும் மேம்பட்ட முன்புறம் பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங், புதிய அலாய் வீல்கள், டெயில் லைட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. காரின் உள்புறம் முந்தைய மாடலை விட அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 8.4 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 128 பிஹெச்பி மற்றும் 270 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எம்பிவி மாடல் கார்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா முதலிடம் பிடித்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் கார் இந்திய சந்தையில் மே மாதத்தில் அதிகம் விற்பனையான மாடலாக இருக்கிறது. மே மாதத்தில் மட்டும் மாருதி நிறுவனம் சுமார் 2353 எர்டிகா யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.

    கடந்த ஆண்டு இதே மாதத்தில் மாருதி நிறுவனம் 8864 எர்டிகா யூனிட்களை விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு மே மாத விற்பனையில் 73 சதவீதம் சரிவை மாருதி சுசுகி நிறுவனம் சந்தித்து இருக்கிறது. நாட்டில் ஒட்டுமொத்த எம்பிவி விற்பனை 71 சதவீதம் சரிவடைந்துள்ளது.

    மாருதி சுசுகி எர்டிகா

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா காருடன் ஒப்பிடும் போது, 2020 மே மாதத்தில் மஹிந்திரா பொலிரோ 1715 யூனிட்களும், ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் 931 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன.

    தற்சமயம் மாருதி எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
    டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் தனது ஸ்போர்ட் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தி உள்ளது.



    டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் ஸ்போர்ட் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வின் படி டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மாடலின் துவக்க விலை ரூ. 52,500 ஆக மாறியிருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 51,750 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தின் போது கிக் ஸ்டார்ட் வெர்ஷன் விலை பிஎஸ்4 மாடலை விட ரூ. 3633 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பிஎஸ்6 செல்ஃப் ஸ்டார்ட் மாடலின் விலை பிஎஸ்4 மாடலை விட ரூ. 8017 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    டிவிஎஸ் ஸ்போர்ட்

    டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளில் 109.7சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.17 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பிஎஸ்6 மாடல் முந்தைய மாடலை விட 15 சதவீதம் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

    டிவிஎஸ் ஸ்போர்ட் தவிர டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் ரேடியான், என்டார்க் 125, அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல்களின் விலையையும் உயர்த்தியது.
    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்வதாக அறிவித்துள்ளது.



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்ய புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு பின் ஏற்படும் தட்டுப்பாடை போக்க உதவும் என தெரிகிறது.

    புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி புதிய வாகனங்களை வாங்குவது மட்டுமின்றி டெஸ்ட் ரைட் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வழி செய்கிறது. இத்துடன் ஏற்கனவே சுசுகி வாகனங்களை பயன்படுத்துவோருக்கு சர்வீஸ் சேவையும் வழங்கப்படுகிறது.

    சுசுகி சலுகை

    சுசுகி நிறுவனத்தின் புதிய திட்டத்தில் பயன்பெற வாடிக்கையாளர்கள் சுசுகியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பயன்படுத்தலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் இயக்கும் வசதிகள் வலைதளத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர இலவச தொடர்பு எண் கொண்டு வாடிக்கையாளர்கள் புதிய சுசுகி இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இத்துடன் அழைப்பின் போது அருகாமையில் உள்ள விற்பனையகத்திற்கு தொடர்பு கொண்டு பேசும் வசதியும் வழங்கப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனம் 2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடல் காரினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



    டொயோட்டா நிறுவனம் 2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடலினை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சுனர் ஃபேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவம் கொண்ட எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்கள், முன்புறம் பெரிய கிரில், மேம்பட்ட முன்புற பம்ப்பர், எல்இடி ஃபாக் லேம்ப்கள், பெரிய ஏர் இன்டேக், ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    2021 டொயோட்டா ஃபார்ச்சூனர்

    காரின் உள்புறம் தற்போதைய மாடலில் உள்ள கேபின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே என்ஜின் தற்போதைய மாடலில் 177 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. எனினும், 2021 மாடலில் இந்த என்ஜின் 204 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகை மற்றும் விசேஷ சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட ஹூண்டாய் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, கிராண்ட் ஐ10, கிராண்ட் ஐ10 நியோஸ், எலைட் ஐ20 மற்றும் எலான்ட்ரா போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறுகிய காலகட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் ஒவ்வொரு கார் மாடல் வேரியண்ட், விற்பனையகம் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

    ஹூண்டாய் ஜூன் மாத சலுகை

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகைகள் அடங்கும். ஹூண்டாய் சான்ட்ரோ மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், எலைட் ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 மாடல்களுக்கு முறையே ரூ. 35 ஆயிரம் மற்றும் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஹூண்டாய் எலான்ட்ரா மாடலுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, இவற்றில் தள்ளுபடி, கார்ப்பரேட் சலுகை மற்றும் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை பொருந்தும்.
    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்க ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.



    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க புதிய ஆன்லைன் சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கென அந்நிறுவனம் 'Keep Your Air As Clean As This' (உங்களின் காற்றையும் இதே போன்று சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்) எனும் திட்டத்தை துவங்கி உள்ளது.

    புதிய திட்டம் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளால் நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த ஊக்குவிக்கிறது. அதன்படி ஒவ்வொரு 50-வது வாடிக்கையாளருக்கும், அவரவர் முன்பதிவு செய்தவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

    இத்துடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஒருவர் மாறி ஒருவருக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர ஹீரோ எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர் ஒவ்வொருத்தருக்கும் அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கேற்க முடியும். இதில் தேர்வு செய்யப்படுவோரில் பத்து பேருக்கு கிளைடு பரிசாக வழங்கப்படுகிறது.

    ஹீரோ எலெக்ட்ரிக் சலுகை

    ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஜூன் 1 ஆம் தேதியே துவங்கிவிட்டது. முன்பதிவு ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சலுகை ஃபிளாஷ் லீட்-ஆசிட் வேரியண்ட்டான கிளைடு மற்றும் வெலோசிட்டி எலெக்ட்ரிக் மாடல்கள் தவிர அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்.

    அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் முன்பதிவு கட்டணம் ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வவுச்சர்களை வழங்குகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஹேட்ச்பேக் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.



    ஹோண்டா சிட்டி மாடல் காரை தழுவி உருவாகி இருக்கும் ஹேட்ச்பேக் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. புதிய காரின் ப்ரோடோடைப் மாடல் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இதே காரின் காப்புரிமை படங்கள் மட்டும் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    புதிய கார் சிட்டி பிராண்டிங்கில் வெளியாகுமா அல்லது முற்றிலும் புதிய பெயர் கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனினும், இது தற்சமயம் தாய்லாந்தில் சோதனை செய்யப்படும் ஏழாம் தலைமுறை சிட்டி செடான் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. ஏழாம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் ஸ்பை படம்

    முன்னதாக ஹோண்டா நிறுவனம் ஆறாம் தலைமுறை சிட்டி மாடலை தழுவிய ஹேட்ச்பேக் காரினை ஜியெனா எனும் பெயரில் சீன சந்தையில் மட்டும் விற்பனை செய்து வருகிறது. தற்போதைய மாடல் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஹேட்ச்பேக் காரில் ஹோண்டாவின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் சில நாடுகளுக்கும், சில நாடுகளில் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
    ×