என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ பிஎஸ்6 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் செலரியோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. புதிய மாருதி சுசுகி செலரியோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் விலை ரூ. 5.61 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வெர்ஷன்களை விட ரூ. 81 ஆயிரம் வித்தியாசம் ஆகும்.
செலரியோ மிட்-ரேன்ஜ் மாடல்களான VXi மற்றும் VXi(o) மாடல்களில் சிஎன்ஜி வேரியண்ட் கிடைக்கிறது. இவற்றுடன் மாருதி சுசுகி செலரியோ டூர் வேரியண்ட்டிலும் சிஎன்ஜி ஆப்ஷன் கிடைக்கிறது. புதிய சிஎன்ஜி வசதி தவிர இந்த காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

மாருதி சுசுகி செலரியோ பெட்ரோல் வெர்ஷன்களில் உள்ளஅனைத்து அம்சங்கள் மற்றும் உபகரங்கள் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டிலும் வழங்கப்படுகிறது.
செலரியோ சிஎன்ஜி வெர்ஷனில் 1.0 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 58 பிஹெச்பி பவர், 79 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் 68 பிஹெச்பி மற்றும் 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஜாவா நிறுவனத்தின் ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா ஃபார்டி டூ பிஎஸ் 6 மோட்டார்சைக்கிள் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கிளாசிக் லெஜன்ட்ஸ் நிறுவனம் தனது ஜாவா கிளாசிக் மற்றும் ஃபார்டி டூ பிஎஸ்6 மாடல்களின் சிறப்பம்சங்களை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி பிஎஸ்6 ரக மாடலில் 293சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஜாவா கிளாசிக் மற்றும் ஃபார்டி டூ மாடல்களில் 26.1 பிஹெச்பி பவர், 27.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் பிஎஸ்4 மாடலில் 27 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் இரு மாடல்களின் விலையையும் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜாவா ஃபார்டு டூ பிஎஸ்6 சிங்கிள் சேனல் மாடல் விலை ரூ. 1,60,300 என்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1,69,242 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜாவா கிளாசிக் சிங்கிள் சேனல் விலை ரூ. 1,73,164 என்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1,82,106 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய சொனெட் மாடல் இந்தியாவில் பண்டிகை காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
ஹரியானாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோவில் புதிய சொனெட் மாடல் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. காரின் பக்கவாட்டில் ரேக்டு விண்டோ-லைன், டூயல் டோன் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் இடம்பெற்றுள்ளன.

கியா சொனெட் இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடலாக இருக்கும். முன்னதாக செல்டாஸ் மிட்-சைஸ் எஸ்யுவி மற்றும் கார்னிவல் பிரீமியம் எம்பிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது.
தற்சமயம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
புதிய சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்7 எம்50டி பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்7 எஸ்யுவி மாடலின் டாப் எண்ட் டீசல் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி மாடலின் துவக்க விலை ரூ. 1.63 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய காரின் முன்புறம் பிரம்மாண்ட பம்ப்பர், பெரிய ஏர்-இன்டேக் புதிய மெஷ் கிரில், ஃபாக் லேம்ப்கள், பக்கவாட்டுகளில் எம் பேட்ஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்போர்டி எக்சாஸ்ட், 21 இன்ச் எம் ஸ்டைல் லைட்-அலாய் வீல்கள் மற்றும் 22 இன்ச் அலாய் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை தற்போதைய மாடலில் இருந்ததை போன்றே இருக்கிறது.
காரின் உள்புறம் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எம்50டி மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 395 பிஹெச்பி பவர், 760 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை தார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. புதிய தார் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இது நடைபெறவில்லை.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு மாதங்களாக ஆட்டோ துறை முற்றிலும் முடங்கி இருந்தது. முந்தைய தகவல்களின் படி புதிய தலைமுறை தார் மாடல் நாட்டில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய தார் மாடல் வெளியீடு மேலும் தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2019-2020 நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது, அந்நிறுவன நிர்வாக இயக்குனர் பவன் கோயன்கா, அடுத்த தலைமுறை பாரம்பரிய ஆஃப்-ரோடர் மாடல் இந்திய சந்தையில் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய தார் மாடல் தற்போதைய மாடலை விட நீளமாகவும், உயரமாகவும் இருக்கிறது. 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஆஃப் ரோடு எஸ்யுவி நீண்ட செங்குத்தான கிரில், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
2020 மஹிந்திரா தார் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இத்துடன் கன் மெட்டல் ஷேட் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது. இதில் வழக்கமான வடிவமைப்பு அம்சங்கள், 7 ஸ்லாட் கிரில், வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்களை கொண்டிருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் போன்வில் டி100 மற்றும் டி120 பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் டி100 மற்றும் டி120 மாடல்களின் பிளாக் எடிஷன் வெர்ஷன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டிரையம்ப் போன்வில் டி100 பிளாக் எடிஷன் மற்றும் டி120 பிளாக் எடிஷன் மாடல்களின் விலை முறையே ரூ. 8.87 லட்சம் மற்றும் ரூ. 9.97 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு மாடல்களும் பிளாக்டு-அவுட் தோற்றம் பெற்று இருக்கிறது. இரு மோட்டார்சைக்கிள்களிலும் காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. புதிய பிளாக்டு-அவுட் தோற்றம் மோட்டார்சைக்கிளுக்கு அதிநவீன தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் போன்வில் மாடல்களின் எண்ணிக்கையை இந்திய சந்தையில் அதிகப்படுத்தி இருக்கிறது.

டிரையம்ப் போன்வில் டி100 மாடல் மேட் பிளாக் அல்லது கிளாஸ் பிளாக் நிறங்களிலும் டி120 மாடல் மேட் கிராஃபைட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர மோட்டார்சைக்கிள்களில் எந்த அம்சங்களும் மாற்றப்படவில்லை.
அந்த வகையில் டிரையம்ப் போன்வில் டி100 பிளாக் எடிஷன் 900சிசி பேரலெல் ட்வின் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 54 பிஹெச்பி பவர், 84 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் போன்வில் டி120 பிளாக் எடிஷன் மாடலில் 1200சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 79 பிஹெச்பி பவர், 105 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய பசாட் ஃபேஸ்லிப்ட் வெளியீடு இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பை படங்களின் படி புதிய கார் வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 2020 பசாட் மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. இவற்றில் புதிய காரில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்தது.

அதன்படி புதிய காரின் முன்புறம் பம்ப்பர், கிரில் மற்றும் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள், புதிய டெயில் லேம்ப் கிளஸ்டர், மேம்பட்ட பசாட் லோகோ, 17 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடல் கூர்மையான மற்றும் கம்பீர தோற்றம் கொண்டிருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் அறிமுகம் ஆனதும் ஃபோக்ஸ்வேகன் பசாட் மாடல் ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் டொயோட்டா கேம்ரி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பிஎஸ்4 பசாட் மாடல் விலை ரூ. 29.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த எம்ஜி ஜி10 காரினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஃபுல் சைஸ் எஸ்யுவி, எம்பிவி மற்றும் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தியது. இவற்றில் எம்ஜி ஜி10 மாடலும் அடங்கும். இதனை எம்ஜி நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதே மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன சந்தையில் எம்ஜி ஜி10 விலை இந்திய மதிப்பில் ரூ. 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இதன் விலை சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

எம்ஜி ஜி10 மாடல் கியா கார்னிவல் போன்றே பல்வேறு இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 223 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 375 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் கோனா எலெக்ட்ரிக் காரை கடந்த ஆண்டு ஜிலை மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 23.7 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஹூண்டாய் நிறுவனம் மற்றொரு பிரம்மாண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சியோன் சியோப் கிம் தெரிவித்தார்.

இதுதவிர குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவும் ஹூண்டாய் திட்டமிட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 முதல் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அபாச்சி ஆர்டிஆர் 180 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையை மீண்டும் மாற்றியுள்ளது.
டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 180 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல் விலை இந்த ஆண்டு துவக்கத்தில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இதன் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்சமயம் இதன் விலை ரூ. 1,03,950 என மாற்றப்பட்டுள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 2500 அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 180 பிஎஸ்6 மாடலில் எல்இடி டிஆர்எல்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரேசிங் கிராஃபிக்ஸ், பெரிய டேன்க் எக்ஸ்டென்ஷன்கள், எல்இடி டெயில் லேம்ப், ஒற்றை இருக்கை வடிவமைப்பு, என்ஜின் கவுல் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர பிரேக்கிங்கிற்கு முன்புறம் 270 எம்எம் பெட்டல் டிஸ்க் பிரேக், பின்புறம் 200 எம்எம் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
அபாச்சி ஆர்டிஆர் 180 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட 177.4சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 16 பிஹெச்பி பவர், 15.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் சிஎன்ஜி மாடல் கார் விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் சிஎன்ஜி கார் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை 1,06,443 எஸ் சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்துள்ளது.
நிறுவனம் சார்பில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் கொண்ட வாகனங்களை அதிகம் விற்பனையான நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுசுகி பெற்று இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிஎன்ஜி விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் 15.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், எர்டிகா மற்றும் ஈகோ போன்ற மாடல்களில் சிஎன்ஜி வேரியண்ட்களை வழங்கி வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய கார் ஸ்பை படங்கள் சென்னை அருகே சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்பை படங்களின் படி புதிய கார் பார்க்க ப்ரோடெக்ஷன் மாடல் போன்றே காட்சியளிக்கிறது. காரின் பின்புறம் தற்காலிக டெயில் லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தற்போதைய மாடலில் உள்ள 2.2 லிட்டர் யூனிட்டை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. இவைதவிர புதிய எக்ஸ்யுவி500 மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.






