என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
பெனலி நிறுவனம் சீன சந்தையில் 2020 பெனலி 302ஆர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
பெனலி நிறுவனம் சீனாவில் 2020 பெனலி 302ஆர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை சீனாவில் 32800 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 3,52,495 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணம் 2 ஆயிரம் யுவான் ஆகும். வாடிக்கையாளர்கள் மீதித் தொகையை விற்பனையகங்களில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 பெனலி மோட்டார்சைக்கிள் அதிகளவு மாற்றங்கள் இன்றி, புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய பெனலி 302ஆர் மோட்டார்சைக்கிள் சீன சந்தையில் தற்சமயம் - வைட், ரெட், புளூ மற்றும் கிரீன் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

புதிய மோட்டார்சைக்கிளில் 300சிசி பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 34.86 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய 302ஆர் மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சமாக 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய பெனலி மாடலின் முன்புறம் பெட்டல்-டைப் டிஸ்க், பின்புறம் பெட்டல் டைப் ரோட்டார், ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆம்பியர் வெஹிகில்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஆம்பியர் வெஹிகில்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், மேக்னஸ் ப்ரோ எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
புதிய ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 73990, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டர் அதிக அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ ஸ்கூட்டர் வரும் மாதங்களில் மற்ற நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்பியர் மேக்னஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60 வாட், 30ஏஹெச் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 1.2 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய மேக்னஸ் ப்ரோ 60 வாட் சார்ஜருடன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 5 முதல் 6 மணி நேரம் ஆகும் என ஆம்பியர் வெஹிகில்ஸ் தெரிவித்து இருக்கிறது.
போர்ஷ் நிறுவனம் இந்திய சந்தையில் பனமெரா ஸ்பெஷல் எடிஷன் மாடலினை அறிமுகம் செய்துள்ளது.
ஜெர்மன் நாட்டு ஸ்போர்ட் கார் உற்பத்தியாளரான போர்ஷ் இந்திய சந்தையில் பனமெரா ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய பனமெரா 4 10 Years எடிஷன் விலை இந்தியாவில் ரூ. 1.60 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது போர்ஷ் நிறுவனம் இந்திய சந்தையில் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் பனமெரா 4 ஆல்-வீல்-டிரைவ் வெர்ஷனை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 21 இன்ச் அலாய் வீல்கள், பனமெரா 10 பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

போர்ஷ் பனமெரா 4 10 Years எடிஷன் மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், போர்ஷ் டைனமிக் லைட் சிஸ்டம் பிளஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர்-வியூ கேமரா, பானரோமிக் சன்ரூஃப், போஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய காரில் 2.8 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 226 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
இவைதவிர புதிய போர்ஷ் மாடலில் பல்வேறு அதிநவீன அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நாடு முழுக்க பிஎஸ்4 ரக வாகனங்களின் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிஎஸ்4 ரக வாகன விற்பனை மற்றும் பதிவு தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் 27-ந்தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்த உச்சநீதிமன்றம், பிஎஸ்4 ரக வாகனங்களை கொரோனா ஊரடங்கு விலக்கியபின் (மே 3) 10 நாட்களுக்கு விற்பனை செய்ய அனுமதி அளித்தது.
மேலும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு பதிவு செய்ய முடியாமல் இருக்கும் வாகனங்களையும் பதிவு செய்து கொள்ள அனுமதி அளித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள், மார்ச் மாதம் தாங்கள் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டு உள்ளதாக கண்டனம் தெரிவித்தனர். நாடு முழுவதும் எத்தனை வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் ஒரு வாகனமும் பதிவு செய்ய முடியாது.
நாடு முழுவதும் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை மற்றும் பதிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வாகனங்களால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுவதுடன், மக்களின் ஆரோக்கியத்தில் மேலும் சுமையை ஏற்றுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் காரின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய கார் ஆகும். இது சிறிய ஐந்து பேர் அமரக்கூடிய மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் விலை ரூ. 33.12 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. மார்ச் மாதம் அறிமுகமான போதும், இதன் விநியோகம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமானது. தற்சமயம், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் விநியோகம் துவங்கும் என தெரிகிறது.

புதிய கார் விற்பனையகங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனை தனியார் செய்தி நிறுவனம் புகைப்படங்களுடன் தெரியப்படுத்தி இருக்கிறது. இதனால் புதிய கார் விநியோகம் சில நாட்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.
டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் மீண்டும் துவங்கி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை மீண்டும் துவங்கியுள்ளது. தற்சமயம் முன்பதிவு பஜாஜ் ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் விற்பனை இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கியது. முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் விற்பனை செய்யப்பட்டது.

எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மற்ற நிறுவனங்களை போன்று பஜாஜ் நிறுவனமும் தனது பணிகளை முழுமையாக நிறுத்தியது. பின் நாடு தழுவிய ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் பஜாஜ் தனது பணிகளை படிப்படியாக துவங்கியது.
இதன் காரணமாக பஜாஜ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. செட்டாக் ஸ்கூட்டரின் விநியோகம் ஊரடங்கு அறிவிக்கும் முன் துவங்கியது. எனினும், ஊரடங்கு காரணமாக விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டது.
ஸ்கோடா நிறுவனத்தின் கமிக் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கமிக் எஸ்யுவி மாடலை இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. புதிய கமிக் எஸ்யுவி இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய கமிக் எஸ்யுவி மாடல் இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
இந்நிலையில், புதிய ஸ்கோடா கமிக் எஸ்யுவி ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஸ்பை படங்களில் புதிய எஸ்யுவி பின்புறம் தெளிவாக காட்சியளிக்கிறது. அதன்படி எல் வடிவ எல்இடி டெயில் லைட்கள், பூட் லிட் மீது ஸ்கோடா எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் ஸ்கோடா கமிக் மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இருவித டியூனிங்கிலும், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.6 டீசல் யூனிட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ யூனிட் 94 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறனும், 1.6 லிட்டர் டீசல் யூனிட் 113 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஸ்டான்டர்டு மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ பிளக்ஸ் எடிஷன் மாடல் தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் நிறுவனம் வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் பிளக்ஸ் எடிஷனை தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வென்யூ பிளக்ஸ் எடிஷன் டூயல் டோன் கிரே/கிரீன் நிறத்தில் கிடைக்கிறது.
காரின் வெளிப்புறம் ஹாட் ஸ்டாம்ப் கிரில் மற்றும் டைமண்ட் வடிவ குரோம் பேட்டன் கொண்டுள்ளது. இதன் முன்புற பம்ப்பர், ரூஃப், ORVM, பின்புறம் பம்ப்பர் மற்றும் பக்கவாட்டில் ஆசிட் கிரீன் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் சி பில்லரில் வி வடிவ பேட்ஜ் கிரீன் அக்சென்ட்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிளக்ஸ் எடிஷனில் 1.6 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 123 பிஎஸ் பவர், 154 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் ஐவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வென்யூ மாடல் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் CRDI டீசல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
தென் கொரியாவில் ஹூண்டாய் வென்யூ பிளக்ஸ் எடிஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 13.44 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடல்களை விட ரூ. 1.93 லட்சம் வரை அதிகம் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார் மாடல்களுக்கு விடை கொடுத்திருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் ஜெடிபி மற்றும் டியாகோ ஜெடிபி மாடல்களை இந்திய சந்தையில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறது.
இரு மாடல்களும் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெயம் ஆட்டோமோடிவ் நிறுவனங்களிடையேயான கூட்டணியை தொடர்ந்து வெளியிடப்பட்டது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் 2017 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2018 ஆம் ஆண்டு டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி மாடல்கள் வெளியிடப்பட்டன.

இந்திய சந்தையில் தற்போதைய சூழல் சரியில்லாததும், இரு மாடல்களின் விற்பனை தொடர்ந்து சரிந்ததை தொடர்ந்து இவை விலக்கிக் கொள்ளப்படுகின்றன. முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்குவதாக அறிவித்தது.
டாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி மாடல்களில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருந்தன. இவை 114 பிஹெச்பி பவர் வழங்கின. சக்திவாய்ந்த என்ஜின் தவிர இரு மாடல்களும் சிறப்பான டிசைன் செய்யப்பட்டு மெக்கானிக்கல் அப்டேட்களும் செய்யப்பட்டன.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் டைகர் 900 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளைஸ ஜூன் 19 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி இருக்கிறது.
புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு நிகழ்வு டிஜிட்டல் முறையில் நடைபெற இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. டிரையம்ப் டைகர் 900 முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் - ஸ்டான்டர்டு மற்றும் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் புதிய என்ஜின் மற்றும் எலெக்டிரானிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அதன்படி புதிய டைகர் 900 மாடலில் IMU சார்ந்த ஏபிஎஸ் சிஸ்டம், பை டைரெக்ஷனல் குவிக் ஷிஃப்டர், ரெயின், ரைடர், ரோட், ஸ்போர்ட், ஆஃப் ரோட் மற்றும் ஆஃப் ரோட் ப்ரோ என ஆறுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி மாட்யூல் கொண்டிருக்கிறது.
புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 888சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது கார் மாடல்களை ரீகால் செய்ய இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக கோளாறு உறுதி செய்யப்பட்ட மாடல்களை திரும்ப அழைக்க ஹோண்டா கார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி சுமார் பல்வேறு மாடல்களை சேர்ந்த சுமார் 65 ஆயிரம் யூனிட்களில் கோளாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை திரும்ப அழைத்து கோளாறை சரி செய்யும் பணிகளில் ஹோண்டா கார்ஸ் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.

2018 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு இருப்பதாக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார்களில் எரிபொருள் கலனில் இருந்து என்ஜினுக்கு எரிபொருளை பம்ப் செய்யும் இம்பெல்லர் பாகத்தில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கார் ஸ்டார்ட் ஆவதில் பிரச்சினை ஏற்படுலாம்.
ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின்படி காம்பேக்ட் செடான் மாடலான அமேஸ் 32498 யூனிட்களும், 16434 சிட்டி யூனிட்களும், 7500 ஜாஸ் யூனிட்களும், 7057 WR-V யூனிட்களும், 1622 BR-V யூனிட்களும், 360 ப்ரியோ யூனிட்களும், 180 CR-V யூனிட்களும் இந்தியாவில் திரும்ப பெறப்படுகின்றன.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் வெளியீடு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்கள் 2021-22 நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யுவி500 எஸ்யுவி மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக இரு மாடல்களையும் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் வெளியீட்டை மஹிந்திரா நிறுவனம் ஒத்திவைத்து இருக்கிறது. இதனை மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் பவன் கோயன்கா நிதிநிலை அறிக்கை வெளியீட்டின் போது தெரிவித்தார்.






