என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஸ்கோடா கமிக்
    X
    ஸ்கோடா கமிக்

    இணையத்தில் லீக் ஆன ஸ்கோடா கார் ஸ்பை படங்கள்

    ஸ்கோடா நிறுவனத்தின் கமிக் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கமிக் எஸ்யுவி மாடலை இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. புதிய கமிக் எஸ்யுவி இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய கமிக் எஸ்யுவி மாடல் இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

    இந்நிலையில், புதிய ஸ்கோடா கமிக் எஸ்யுவி ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஸ்பை படங்களில் புதிய எஸ்யுவி பின்புறம் தெளிவாக காட்சியளிக்கிறது. அதன்படி எல் வடிவ எல்இடி டெயில் லைட்கள், பூட் லிட் மீது ஸ்கோடா எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

    ஸ்கோடா கமிக் ஸ்பைடு

    சர்வதேச சந்தையில் ஸ்கோடா  கமிக் மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இருவித டியூனிங்கிலும், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.6 டீசல் யூனிட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ யூனிட் 94 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இதன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறனும், 1.6 லிட்டர் டீசல் யூனிட் 113 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஸ்டான்டர்டு மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×