என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டுகாட்டி நிறுவனத்தின் சூப்பர்லெகரா வி4 மோட்டார்சைக்கிளின் உற்பத்தி பணிகளை துவங்கி உள்ளது.



    டுகாட்டி நிறுவனம் தனது சூப்பர்லெகரா வி4 மோட்டார்சைக்கிளின் உற்பத்தி பணிகளை துவங்கியது. புதிய வி4 மாடலின் முதல் யூனிட் இத்தாலியில் உள்ள போர்கோ பேனிகேல் ஆலையில் இருந்து வெளியாகி உள்ளது.

    உலகில் மொத்தமாக இந்த மோட்டார்சைக்கிள் 500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் முதல் வாகனம் தான் தற்சமயம் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியாகி இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்களின் சேசிஸ் நம்பருடன் ஒற்று போகும் புரோகிரெசிவ் எண் ஸ்டீரிங் ஹெட் மற்றும் இக்னிஷன் கீயில் தெரியும்.   

    டுகாட்டி சூப்பர்லெகரா வி4

    புதிய சூப்பர்லெகரா வி4 மோட்டார்சைக்கிளில் டெஸ்மோசெடிசி ஸ்டிரேடிள் வி4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 224 பிஹெச்பி பவர், 115 என்எம் டார்க் செயல்திரன் வழங்குகிறது. இத்துடன் அக்ராபோவிக் ஃபுல் சிஸ்டம் எக்சாஸ்ட் இதன் திறனை 234 பிஹெச்பி செயல்திறனை வழங்குகிறது. 

    இதன் ரேசிங் கிட்- கார்பன் ஃபைபர் ஓபன் கிளட்ச் ஓவர், ஸ்விங் ஆம் கவர், ஹெட்லேம்ப் ரீபிளேஸ்மென்ட் கிட், டெயில் கிடி கிட், சைடு ஸ்டான்டு ரிமூவல் கிட், பிலெட் அலுமினியம் மிரர் ரீபிளேஸ்மென்ட் கேப், ரேசிங் ஃபியூயல் கேப், பிரேக் லீவர் ப்ரோடெக்டர்கள், மோட்டார்சைக்கிள் கவர் மற்றும் பேட்டரி சார்ஜர் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் டீசல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.



    மஹிந்திரா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் தார் மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் இருப்பது புதிய தார் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் ஆகும். 

    முழுமையாக மறைக்கப்பட்டு இருந்தாலும் புதிய தார் உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. மேலும் புதிய தார் இந்திய சந்தையில் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை தார் மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    எனினும் ஆட்டோமேடிக் வேரியண்ட் ஸ்பை படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். புதிய தார் ஆட்டோமேடிக் வேரியண்ட் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என தெரிகிறது.

    மஹிந்திரா தார் ஸ்பை படம்

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய தார் மாடல் தற்போதைய மாடலை விட நீளமாகவும், உயரமாகவும் இருக்கிறது. 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஆஃப் ரோடு எஸ்யுவி நீண்ட செங்குத்தான கிரில், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    2020 மஹிந்திரா தார் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இத்துடன் கன் மெட்டல் ஷேட் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது. இதில் வழக்கமான வடிவமைப்பு அம்சங்கள், 7 ஸ்லாட் கிரில், வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்களை கொண்டிருக்கிறது.
    டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 13.7 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய டிரையம்ப் டைகர் 900 ரேலி வேரியண்ட் விலை ரூ. 14.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    டிரையம்ப் டைகர் 900

    புதிய டைகர் 900 மாடலில் IMU சார்ந்த ஏபிஎஸ் சிஸ்டம், பை டைரெக்ஷனல் குவிக் ஷிஃப்டர், ரெயின், ரைடர், ரோட், ஸ்போர்ட், ஆஃப் ரோட் மற்றும் ஆஃப் ரோட் ப்ரோ என ஆறுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி மாட்யூல் கொண்டிருக்கிறது. 

    புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 888சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி இ63 எஸ் 2021 ஆண்டிற்கான அப்டேட் பெற்றுள்ளது. எனினும் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. தற்சமயம் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடல் இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய 2021 மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் முன்புறம் புதிய ஏஎம்ஜி மாடலில் பான்-அமெரிக்கா கிரில் புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் பெரிய ஏர் கர்டெயின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் லிப் ஸ்பாயிலர் மற்றும் குவாட் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ்

    2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63 எஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 595 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    சக்திவாய்ந்த என்ஜினுடன் 9 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய பென்ஸ் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தினை 3.3 நொடிகளில் எட்டிவிடும். 
    ஒகினாவா நிறுவனம் இந்தியாவில் பணிகளை துவங்கிய மிகக்குறுகிய காலக்கட்டத்தில் ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.



    எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வரும் ஒகினாவா நிறுவனம் இந்தியாவில் மீண்டும் பணிகளை துவங்கிய காலக்கட்டத்தில் ஆயிரம் இ ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    நாடு தழுவிய ஊரடங்கில் பணிகளை துவங்க அரசு சில தளர்வுகளை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஒகினாவா பணிகளை துவங்கியது. 60 முதல் 70 சதவீத டச்பாயிண்ட்கள் இயங்கியதே இத்தனை யூனிட்கள் விற்பனைக்கு காரணம் என ஒகினாவா தெரிவித்து இருக்கிறது.

    ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    தற்சமயம் ஒகினாவா நிறுவனம் நாடு முழுக்க 350 விற்பனை மையங்களை கொண்டிருக்கிறது. ஒகினாவா நிறுவனம் நாடுதழுவிய ஊரடங்கு அறிவித்த போது நிறுத்திய பணிகளை மே 11 ஆம் தேதி துவங்கியது. பணிகளை துவங்கிய போது 25 சதவீத பணியாளர்கள் மற்றும் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியது.

    வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனங்கள் விநியோகம் செய்யும் முன் அவை முழுமையாக சுத்தம் செய்த பின்பே வழங்கப்படுகிறது. மேலும் விற்பனையாளரும் வாகனங்களை சுத்தம் செய்த பின்னரே வழங்குகின்றன. இதுதவிர அனைத்து விற்பனையகங்களிலும் தெர்மல் ஸ்கிரீனிங் வழிமுறை பின்பற்றப்படுகிறது.
    இந்தியாவை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி இருக்கின்றனர்.



    உலகில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனங்ககள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், மைசூரை சேர்ந்த வித்யவர்தகா பொறியியல் கல்லூரி மாணவர்கள் டாடா நானோவை தழுவிய குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருக்கின்றனர். புகிய எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி விலை புத்தம் புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் விலையை விட குறைவு ஆகும்.

    நானோ எலெக்ட்ரிக் கார்

    புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்க ரூ. 41500 விலையில் டாடா நானோ காரை வாங்கி, அதில் எலெக்ட்ரிக் மோட்டார் யூனிட், பேட்டரிகள், கண்ட்ரோலர், அக்சஸரீக்கள் மற்றும் லேபர் கட்டணம் சேர்த்து ரூ. 96658 மட்டுமே செலவானதாக மாணவர்கள் தெரிவித்துள்ளர்.

    அந்த வகையில் எலெக்ட்ரிக் கார் முழுமையாக உருவாக்க மொத்தத்தில் ரூ. 138158 மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விலையை விட ரூ. 16 ஆயிரம் வரை குறைவு ஆகும்.

    மாணவர்கள் உருவாக்கி இருக்கும் டாடா நானோ எலெக்ட்ரிக் காரில் ஒருவர் பயணிக்கும் போது ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். அதாதவது ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 1.15 மட்டுமே செலவாகும். இந்த காரில் நான்கு பேர் பயணிக்கும் போது, ஒரமுறை சார்ஜ் செய்தால் 35 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இதற்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 1.32 மட்டும் தான்.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 ஸ்ப்லிட் ஸ்டிரீட் வேரியண்ட் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
     


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது என்ட்ரி லெவல் பல்சர் 125 மோட்டார்சைக்கிளின் ஸ்ப்லிட் சீட் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 79,091, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பஜாஜ் பல்சர் 125 ஸ்ப்லிட் சீட்

    புதிய மோட்டார்சைக்கிள் முன்புறம் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கிறது. இது ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட ரூ. 3597 மற்றும் சிங்கிள் சீட் டிரம் பிரேக் வேரியண்ட்டை விட ரூ. 8096 அதிகம் ஆகும். புதிய வேரியண்ட் நியோன் கிரீன், மேட் சில்வர் மற்றும் பிளாக் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 

    பஜாஜ் பல்சட் 125 ஸ்ப்லிட் சீட் வேரியண்ட்டிலும் 125சிசி பிஎஸ்6 டிடிஎஸ்-ஐ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 11.6 பிஹெச்பி பவர், 10.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    ஹோண்டா நிறுவனத்தின் 2020 ஹோண்டா சிட்டி மாடல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.



    ஹோண்டா நிறுவனம் 2020 ஹோண்டா சிட்டி மாடலின் முழு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. புதிய செடான் மாடல் இம்மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் ஜப்பான் நாட்டு பாரம்பரியத்தை பரைசாற்றும் கட்டானா ரக வாள் வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய சிட்டி மாடல் அதிநவீன ஏரோடைனமிக் வடிவம் கொண்டிருக்கிறது. இதில் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல் இன்டகிரேட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் எல்இடி டர்ன் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி

    காரின் பின்புறம் இசட் வடிவம் கொண்ட ராப்-அரவுண்ட் எல்இடி டெயில்-லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனையகம் வந்திருப்பதாக தெரிவித்துள்ளது.



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பிஎஸ்6 மாடல்கள் நாடு முழுக்க விற்பனையகங்களுக்கு வந்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதனை ஜாவா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. பிஎஸ்6 ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ மாடல்கள் விற்பனையகம் வரத்துவங்கியுள்ளது.

    இந்தியாவில் பிஎஸ்6 ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ மோட்டார்சைக்கிள்கள் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு மாடல்களும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அல்லது டூயல் சேனல் ஏபிஎஸ் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    பிஎஸ்6 ஜாவா மோட்டார்சைக்கிள்

    பிஎஸ்6 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஜாவா ஃபார்டி டூ மாடல்களின் விலை முறையே ரூ. 1.60 லட்சம் மற்றும் ரூ. 1.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல்களின் விலை ரூ. 1.82 லட்சம் என்றும் ஜாவா ஃபார்டி டூ மாடலின் விலை ரூ. 1.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இரு ஜாவா மோட்டார்சைக்கிள்களிலும் 293சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.2 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹலோல் உற்பத்தி ஆலையில், புதிய ஹெக்டார் பிளஸ் மாடலின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.



    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடலின் உற்பத்தி பணிகள் துவங்கிவிட்டதாக அறிவித்து இருக்கிறது. புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் உற்பத்தி குஜராத் மாநிலத்தின் ஹலோல் உற்பத்தி ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

    இந்தியாவில் புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி அடுத்த மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. 

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
    ஜீப் இந்தியா நிறுவனம் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் வெளியீட்டை தொடர்ந்து புதிய ஜீப் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    ஜீப் நிறுவனம் 2021 காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் வெளியிட்டது. புதிய 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் சில அப்டேட்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. புதிய காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஜீப், Low D 3-row எனும் குறியீட்டு பெயர் கொண்ட எஸ்யுவி மாடல் ஜீப் கிராண்ட் காம்பஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் இந்தியாவில் ஜீப் ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதும் வெளியாகும் என கூறப்படுகிறது.

    ஜீப் கிராண்ட் காம்பஸ்

    ஜீப் கிராண்ட் காம்பஸ் சாதாரண காம்பஸ் மாடலை விட நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை தழுவி இருக்கும் என கூறப்படுகிறது. புதிய காரில் மேம்பட்ட கிரில் வடிவமைப்பு, மேம்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய ஜீப் கிராண்ட் காம்பஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சமீபத்தில் ஜீப் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக காம்பஸ் மாடல்களை ரூ. 16.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்தது. இத்துடன் ஸ்போர்ட் வேரியண்ட் விற்பனையை நிறுத்தியது. தற்சமயம் ஸ்போர்ட் பிளஸ் இந்த எஸ்யுவி மாடலின் புதிய பேஸ் வேரியண்ட் ஆகியுள்ளது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 ஹூண்டாய் கிரெட்டா மாடல் இந்திய முன்பதிவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா கார் முன்பதிவில் 30 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்தியாவில் அறிமுகமான மூன்றே மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

    தற்போதைய கொரோனா ஊரடங்கிலும் 2020 கிரெட்டா மாடல் 30 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. மற்ற ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களை போன்று ஹூண்டாய் நிறுவனமும் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது. எனினும், வாடிக்கையாளர்கள் புதிய எஸ்யுவியை வாங்க ஆர்வம் செலுத்தியது தெரிகிறது.

    ஹூண்டாய் கிரெட்டா

    தற்சமயம் முன்பதிவான மாடல்களில் 55 சதவீதம் டீசல் என்ஜின் கொண்டவை என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை வைத்து வாடிக்கையாளர்கள் டீசல் என்ஜின் வாகனங்களை வாங்க அதிக விருப்பம் செலுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

    புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    ×