என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்தியாவில் புதிய என்ஜின் ஆப்ஷனை பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    மஹிந்திரா மராசோ மாடலில் விரைவில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிஎஸ்6 என்ஜின் சங்யோங் கொராண்டோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா மராசோ

    புதிய பிஎஸ்6 பவர்டிரெயினை மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய 1.5 லிட்டர் ஜி5 டர்போ பெட்ரோல் என்ஜின் இந்தியாவில் மராசோ மாடலில் தான் முதலில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 162 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் எதிர்காலத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.
    பென்ட்லி நிறுவனத்தின் பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.



    பென்ட்லி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய பென்ட்யகா விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஸ்பை படங்களின் படி பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலில் ட்வீக் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், ஓவல் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் காரின் முன்புற பம்ப்பர் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் முன்புற குரோம் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பென்ட்லி பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் ஸ்பை படம்

    காரின் பின்புறம் ஸ்பை படங்களில் தெரியவில்லை. எனினும், பின்புறம் மேம்மபட்ட பம்ப்பர் மற்றும் புதுவித டெயில் லைட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் உள்புறம் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலில் 3.0 லிட்டர் வி6 பிளக்-இன் ஹைப்ரிட் யூனிட், 4.0 லிட்டர், ட்வின் ட்ர்போ வி8 யூனிட், 6.0 லிட்டர் ட்வின் டர்போ டபிள்யூ12 யூனிட் போன்ற என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வி8 டீசல் யூனிட் நீக்கப்பட்டது.
    மெக்லாரென் நிறுவனம் தனது 720எஸ் மாடலின் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.



    மெக்லாரென் நிறுவனம் லீ மேன்சில் 24 மணி நேர போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், 720எஸ் கூப் மாடலை தழுவி 720எஸ் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் உலகில் மொத்தம் 50 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    புதிய லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் லீ மேன்சில் மெக்லாரெனின் 25 ஆண்டுகளை சிறப்பிக்கும் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. புதிய காரின் VIN அனைத்தும் 298 எனும் எண்ணில் துவங்கும். புதிய ஸ்பெஷல் எடிஷனின் வெளிப்புறம் மெக்லாரென் ஆரஞ்சு மற்றும் சார்த் கிரே நிறங்களை கொண்டிருக்கின்றன.  

    இத்துடன் பக்கவாட்டில் மெக்லாரென் 25 ஆண்டுகள் லீ மேன்ஸ் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் ரூஃப் ஸ்கூப், கார்பன் ஃபைபர் லோவர் செய்யப்பட்ட முன்புற ஃபென்டர்கள், ஐந்து ஸ்போக் கொண்ட எல்எம் வீல்கள், கோல்டு நிற பிரேக் கேலிப்பர்கள் மற்றும் காண்டிராஸ்ட் கிளாஸ் பிளாக் பாடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    மெக்லாரென் 720எஸ் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன்

    மெக்லாரென் 720எஸ் லீ மேன்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 720 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
     
    மெக்லாரென் 720எஸ் லீ மேஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் மெக்லாரென் எஃப்1 ஜிடிஆர் #59 மாடல் என்டியூரன்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றதன் 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்த காரினை ஜெஜெ லெட்டோ, யானிக் டல்மாஸ் மற்றும் மசோன்ரி செக்யா ஆகியோர் ஓட்டினர். மற்ற மூன்று மெக்லாரென் எஃப்1 ஜிடிஆர் மாடல்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்தன.
    ஹூண்டாய் நிறுவனம் தனது வாகனங்களுக்கு ஆன்லைன் ஃபைனான்ஸ் சலுகையை பயன்படுத்த புதிய கூட்டணி அமைத்துள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஆன்லைனில் கார் ஃபைனான்ஸ் வழங்க ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணி மூலம் வாடிக்கையாளர்கள் புதிய வாகனங்களுக்கு நிதி சலுகையை பெற்று கொள்ள முடியும்.

    புதிய திட்டம் வாடிக்கையாளர்கள் நிதி சலுகையை பெற ஹெச்டிஎஃப்சி வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது. முன்னதாக நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக ஹூண்டாய் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய க்ளிக் டூ பை எனும் தளத்தை துவங்கியது.

    இதன் தொடர்ச்சியாக கார் விற்பனையை ஊக்குவிக்கும் நிதி திட்டங்களையும் ஆன்லைனிலேயே வழங்க ஹூண்டாய் புதிய கூட்டணியை அமைத்து இருக்கிறது. 

    ஹூண்டாய்

    ஹூண்டாய் க்ளிக் டூ பை சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களின் கேள்வி மற்றும் இதர சந்தேகங்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பதில்களை வீட்டில் இருந்தபடி அறிந்து கொள்ள முடியும்.

    மேலும் இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவன வாகனங்களை ஆன்லைனிலேயே வாங்கிக் கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி பகுதியில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது.

    புதிய ஆன்லைன் சேவை மூலம் எதிர்கால வாகனங்கள் விற்பனையை டிஜிட்டல் முறையில் மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. ஆல்லைன் விற்பனை தளம் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக விற்பனை மையங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் மாடலின் விலையை அதிரடியாக மாற்றி உள்ளது.



    ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் திடீரென உயர்த்தப்பட்டது. ஹார்லியின் ஸ்போர்ட்ஸ்டெர் மாடலான ஐயன் 883 பிஎஸ்6 விலை முன்பை விட ரூ. 12 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பிஎஸ்6 விலை ரூ. 9.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ரூ. 9.26 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஹார்லி டேவிட்சன் ஐயன் 883

    ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பிஎஸ்6 மாடலில் 883சிசி, வி ட்வின், ஏர் கூல்டு என்ஜின் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 70 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் முன்புறம் 39 எம்எம் ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுதவிர மோட்டார்சைக்கிளின் 19-16 இன்ச் வீல்களில் டிஸ்க் பிரேக் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டிரையம்ப் ஸ்பீடு ட்வின், டிரையம்ப் போன்வில் டி100 மற்றும் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்து இருக்கிறது.
    கவாசகி நிறுவனத்தின் புதிய 2020 நின்ஜா 1000எஸ்எக்ஸ் மோட்டார்சைக்கிள் விற்பனையகங்களை வந்தடைந்துள்ளது.



    2020 கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இவை விற்பனையகம் வந்தடைந்துள்ளன. புதிய நின்ஜா 1000எஸ்எக்ஸ் விலை இந்தியாவில் ரூ. 10.79 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும்.

    புதிய நின்ஜா 1000எஸ்எக்ஸ் மோட்டார்சைக்கிளில் 1043சிசி லிக்விட் கூல்டு, இன்லைன் நான்கு சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 140 பிஹெச்பி பவர், 111 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ்

    புதிய மோட்டார்சைக்கிளில் கூர்மையான வடிவமைப்பு, மேம்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம், இருபக்கங்களில் வழங்கப்பட்ட ட்வின் எக்சிட்களுக்கு மாற்றாக ஒற்றை எக்சாஸ்ட் சிஸ்டம் மோட்டார்சைக்கிளின் வலதுபுறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பக்கவாட்டில் மேம்பட்ட பேனல்களும் பின்புறத்தில் சிறிதளவு மாற்றங்களும் செய்யப்பட்டு இருக்கின்றன.

    புதிய மாடலில் 4.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரைடோலஜி செயலி மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, மோட்டார்சைக்கிள் முழுக்க எல்இடி லைட்டிங் கொண்டிருக்கிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் களமிறங்கியது. இந்நிறுவனத்தின் முதல் மாடலாக கியா செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் விற்பனையில் அமோக வரவேற்பு பெற்றது. அறிமுகமான மிக குறைந்த காலக்கட்டத்தில் கியா செல்டோஸ் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படும் மாடல்களில் ஒன்றாக இடம்பிடித்தது.
     
    கியா கேஎக்ஸ்3

    இந்நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புகிய செல்டோஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    முதற்கட்டமாக செல்டோஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி சீன சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. சீனாவை தொடர்ந்து இந்த கார் மற்ற சந்தைகளிலும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவில் கியா எலெக்ட்ரிக் கார் கியா கேஎக்ஸ்3 இவி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த காரில் 45.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 11 பிஹெச்பி பவர், 285 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றன. இந்நிலையில், புதிய எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

    ஸ்பை படங்களின் படி புதிய ஐடி.4 மாடல் தோற்றத்தில் ஐடி.3 ஹேட்ச்பேக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனம் 4592எம்எம் நீளமாகவும், 1852எம்எம் அகலம் மற்றும் 1629எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2765எம்எம் அளவில் இருக்கிறது.

    புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மாடலின் பின்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் ரியர்-வீல் மோட்டார் 200 பிஹெச்பி பவர், 310 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. ரியர்-வீல் மோட்டாரை தொடர்ந்து விரைவில் முன்புற மோட்டார் கொண்ட ஆல்-வீல் டிரைவ் வெர்ஷனை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 ஸ்பை படம்

    டூயல் மோட்டார் செட்டப் கொண்டிருக்கும் போது, இந்த கார் 302 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஐடி.4 பல்வேறு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் 83kWh யூனிட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது 30 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்திடும் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி பற்றிய புதிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை கியா கார்னிவல் எம்பிவி கார் மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை கார்னிவல் எம்பிவி மாடலின் முதல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய கார்னிவல் எம்பிவி மாடல் பல்வேறு புதிய அப்டேட்களுடன், அதிநவீன அம்சங்கள் மற்றும் மாற்றங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய கார்னிவல் மாடலின் சர்வதேச வெளியீடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விற்பனை சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து துவங்கும் என கூறப்படுகிறது. புதிய கார் வடிவமைப்பு கூர்மையாகவும், அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    கியா கார்னிவல்

    காரின் முன்புறம் மேம்பட்ட டைகர்-நோஸ் கிரில், இருபுறங்களிலும் எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்சமயம் விற்பனை செய்யப்படும் கியா கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர் வி.ஜி.டி. பி.எஸ்.6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 440 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஸ்போர்ட்மேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான இகியூசி வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யுவியான இகியூசி மாடலை விரைவில் இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்டின் ஸ்கிவென்க் புதிய இகியூசி இந்தியாவில் இரண்டு வாரங்களில் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.

    முன்னதாக மெர்சிடிஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான ஜிஎல்எஸ் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.  புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி

    புதிய இகியூசி இந்தியாவில் வெளியாகும் முதல் ஆடம்பர எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். புதிய இகியூசி மாடலின் வடிவமைப்பு ஜிஎல்சி எஸ்யுவியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரின் கிரில் பகுதியில் இலுமினேட் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பேட்ஜிங், புதிய ஹெட்லைட்களில் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் மெல்லிய டெயில் லேம்ப்கள் பூட் லிட் மீது பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய காரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாற்றங்களை செய்து கொள்ள கூடுதல் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் ஏஎம்ஜி மாடல்களில் உள்ளது போன்றே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியட் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஸ்பெயின் நாட்டு நிறுவனமான சியட் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி மாடலை அறிமுகம் செய்துள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்குவதாக சியட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவித்தது. 

    இதைத் தொடர்ந்து பார்சிலோனா ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ வொர்ல்டு காங்கிரஸ் விழாவில் இஸ்கூட்டர் மாடலின் கான்செப்ட்டை அறிமுகம் செய்தது. புதிய இஸ்கூட்டர் 125 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

    சியட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி பற்றி இதுவரை எவ்வித தொழில்நுட்ப விவரங்களும் வழங்கப்படவில்லை. எனினும், இது மிக எளிதில் கழற்றக்கூடிய யூனிட் ஆகும். பேட்டரி வைக்கும் இடம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இருக்கையின் கீழ் அதிக இடவசதி கிடைக்கிறது. இதில் ஹெல்மெட் ஒன்றை வைத்துக் கொள்ள முடியும்.

    இ-ஸ்கூட்டர் 125 மாடலில் உள்ள மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வேகத்திலும், மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
    கர்நாடக மாநிலத்தில் இயங்கி வந்த டொயோட்டா நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை மீண்டும் மூடப்பட்டது.



    கர்நாடக மாநிலத்தின் பிடாடி பகுதியில் இயங்கி வரும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை மீண்டும் மூடப்பட்டது. இந்த ஆலையில் பணியாற்றி வந்த இரு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் ஜூன் 7 மற்றும் ஜூன் 16 ஆகிய தேதிகளில் கடைசியாக பணியாற்றினர். முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து டொயோட்டா மட்டுமின்றி மற்ற நிறுவன ஆலைகளும் மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பின் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து சில நிறுவனங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் மீண்டும் இயங்க துவங்கின. எனினும், பணிகளை துவங்கிய நிறுவனங்களில் சமூக இடைவெளி மற்றும் இதர பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியது.

    முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் டொயோட்டா நிறுவன ஊழியர்களுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
    ×