என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    பிஎம்டபிள்யூ குழுமத்தின் புதிய லோகோ இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியாவில் தனது புதிய லோகோவினை அறிமுகம் செய்துள்ளது. புதிய லோகோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. இத்துடன் புதிய லோகோ நிறுவனத்தின் புதிய பிராண்டு வடிவமைப்பை பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. 

    வாடிக்கையாளர்களின் முக்கியத்துவத்தை பரைசாற்றும் வகையில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தொழில்நுட்பத்த துறைக்கு மாறுவதை குறிக்கும் வகையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    பிஎம்டபிள்யூ நிறுவனம் வாடிக்கையாளர்களுடனான உறவை என்றும் கொண்டாடி இருக்கிறது. மேலும் பல்வேறு புதுமை மிக்க வாகனங்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. 

    அந்த வரிசையில் தற்சமயம் புதிய லோகோ வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவான பார்வையை குறிக்கும் என பிஎம்டபிள்யூ இந்தியா குழுமத்தின் அர்லிண்டோ டெய்க்சிரா தெரிவித்தார்.
    ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.


    ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை எலைட் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் சர்வதேச சந்தையில் ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜெனீவா மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டது.

    இதன் காரணமாக ஹூண்டாய் நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஹேட்ச்பேக் மாடலை ஆன்லைன் விழாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய ஹூண்டாய் காரின் இந்திய வெளியீட்டின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்சமயம் புதிய கார் இந்திய வெளியீட்டிற்கு முன் அதன் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    ஹூண்டாய் எலைட் ஐ20
    ஸ்பை படங்களில் முழுமையாக மறைக்கப்பட்டுள்ள எலைட் ஐ20 ஹாலோஜன் ஹெட்லேம்ப் கொண்டிருக்கும் என தெரிகிறது. எனினும், இவை தற்காலிகமானவை ஆகும். விற்பனைக்கு வரும் மாடலில் எல்இடி யூனிட்கள் வழங்கப்படலாம். ஐரோப்பிய சந்தையில் இந்த கார் இசட் வடிவ எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் புதிய ஹெட்லேம்ப்கள், இருபுறங்களில் புதிய பம்ப்பர்கள், போல்டு கிரீஸ்கள் காரை சுற்றி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய டூயல் டோன் எல்இடி வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 எலைட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 83 பிஹெச்பி வழங்குகிறது. இத்துடன் 100 பிஹெச்பி பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் யூனிட், 120 பிஹெச்பி பவர் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது.

    மூன்று என்ஜின்களுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் எடிஷன் கோல்டன் தண்டர் மாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் எடிஷன் கோல்டன் தண்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல்கள் ஜெர்மனியில் உள்ள டிங்கோல்ஃபிங் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கோல்டன் தண்டர் மாடலின் வெளிப்புறம் ஃபுரோசன் பிளாக் மெட்டாலிக் அல்லது சஃபையர் பிளாக் மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
    பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் எடிஷன் கோல்டன் தண்டர்
    பிஎம்டபிள்யூ நிறுவனம் எடிஷன் கோல்டு தண்டர் பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் அனைத்து வேரியண்ட் மற்றும் மாடல்களில் கிடைக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ 840ஐ, பிஎம்டபிள்யூ 840டி எக்ஸ்டிரைவ் உள்ளிட்டவைகளில் ஸ்பெஷல் எடிஷன் ஃபினிஷ் செய்து கொள்ள முடியும். 

    இந்த ஸ்பெஷல் எடிஷன் வாகனங்களில் எம் ஸ்போர்ட்ஸ் பேக்கேஜ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. 
    ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காரின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா கார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தனது 5 ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் காரின் உற்பத்தியை துவங்கி இருக்கிறது. புதிய கார் உத்திர பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் உருவாக்கப்படுகிறது. 

    அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி புதிய கார் உற்பத்தி பணிகளை ஹோண்டா துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. புத்தம் புதிய ஹோண்டா சிட்டி மாடல் ஜூலை மாத வாக்கில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.
    ஹோண்டா சிட்டி
    புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவினை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தியது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் ஜூலை மாத வாக்கில் மீண்டும் துவங்கும் என கூறப்படுகிறது. இதனை பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான உதிரிபாகம் சீனாவின் வுகானில் இருந்து வருவதாக தெரிவித்தார்.
    பஜாஜ் செட்டாக்
    இதன் காரணமாக ஸ்கூட்டரின் விநியோக பணிகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும், இந்த பாகங்கள் தற்சமயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் ஸ்கூட்டரின் உற்பத்தி விரைவில் துவங்கும் என அவர் தெரிவித்தார். மீண்டும் உற்பத்தி துவங்கினால், ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு முன் செட்டாக் ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில், இதன்பின் எடுக்கப்படும் முன்பதிவுகளுக்கான விநியோகம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகே துவங்கும் என தெரிகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா காருக்கு மூன்றாம் தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    புத்தம் புதிய ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு புதிய தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது 10 இன்ச் டிஸ்ப்ளே ஆகும். இந்த சிஸ்டம் காரின் செட்டிங்களை தொடுதிரை, ஜெஸ்ட்யூர் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை கொண்டு இயக்க முடியும்.

    புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொலம்பஸ், ஸ்விங் மற்றும் பொலிரோ என மூன்று வகைகளில் கிடைக்கிறது. மூன்று சிஸ்டம்களும் 10 இன்ச் டிஸ்ப்ளே ஸ்கிரீன் கொண்டிருக்கின்றன. இதில் உள்ள ஐகான்ளை ஸ்மார்ட்போனில் மாற்றுவதை போன்றே மிக எளிமையாக மாற்ற முடியும்.
    ஸ்கோடா ஆக்டேவியா
    காரினுள் வால்யூம் மாற்றுவதற்கான கண்ட்ரோல் பட்டன்கள் ஸ்டீரிங் வீல் மற்றும் புதிய டச் ஸ்லைடர் உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒற்றை விரல் கொண்டு வால்யூம் மாற்ற முடியும். இரு விரல்களை கொண்டு நேவிகேஷன் மேப் அளவினை மாற்றிக் கொள்ளலாம்.

    புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள் வயர்லெஸ் ஸ்மார்ட்லின்க் தொழில்நுட்பம் கொண்டு ஆப்பிள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கொள்கிறது. ஒருமுறை இணைக்கப்பட்டு விட்டால், அடுத்தமுறை காரினுள் சென்றதும் ஸ்மார்ட்போன் தானாக காருடன் இணைந்து கொள்ளும்.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிள் விலையை அதிரடியாக மாற்றி உள்ளது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் 2020 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிளின் விலையை ரூ. 8 ஆயிரம் உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் விலை தற்சமயம் ரூ. 10.89 லட்சத்தில் துவங்குகிறது. முனனதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிள் ரூ. 10.77 லட்சத்தில் துவங்குகிறது. 

    2020 ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மோட்டார்சைக்கிள் மிட்நைட் புளூ, ரிவர் ராக் கிரே, ரிவர் ராக் கிரே/விவிட் பிளாக் மற்றும் பில்லியட் ரெட்/விவிட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
    ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம்
    1200 கஸ்டம் மோட்டார்சைக்கிளில் 1202சிசி, வி ட்வின் ஏர் கூல்டு எவல்யூஷன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 97 பிஹெச்பி பவரை 4250 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்துகிறது. 

    ஹார்லி டேவிட்சன் 2020 கஸ்டம் மோட்டார்சைக்கிள் தவிர ஸ்டிரீட் 750, ஸ்டிரீட் ராட் போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையையும் சமீபத்தில் உயர்த்தியது.
    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால கடன் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதற்கென ஹோண்டா கார்ஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்துள்ளது. 

    வாடிக்கையாளர்களின் தகுதிக்கு ஏற்ப தனித்துவம் வாய்ந்த சலுகையை தேர்வு செய்யப்பட்ட ஹோண்டா கார் மாடல்களுக்கு இந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய நீண்ட கால கடன் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் எட்டு ஆண்டுகளுக்கு கடன் செலுத்த முடியும்.
    ஹோண்டா அமேஸ்
    இத்துடன் ஒரு பகுதி கட்டணத்தை மாத தவணையில் மாற்றங்களை செய்து கொண்டு செலுத்த முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் மாதாந்திர நிதி தேவைக்கு ஏற்ப பணம் செலுத்த வழி வகுக்கும்.

    தற்சமயம் இந்த சலுகை ஹோண்டா அமேஸ் மாடலுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 10 ஆயிரம் முன்பணம் செலுத்தி புதிய காம்பேக்ட் செடான் மாடலை வாங்கிட முடியும். இதற்கான வட்டி 8.35 சதவீதம் ஆகும். இத்துடன் 100 சதவீத ஆன்-ரோடு ஃபண்டிங் மற்றும் ஒரு லட்சத்திற்கு ரூ. 1432 மாத தவணை செலுத்த முடியும்.
    ஆடி நிறுவனத்தின் புதிய கார் முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    ஆடி நிறுவனம் தனது புத்தம் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் வெளியீட்டை ஆடி ஏற்கனவே அறிவித்துவிட்டது. 

    அந்த வகையில் வெளியீட்டுக்கு முன் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான முன்பதிவினை ஆடி நிறுவனம் துவங்கி இருக்கிறது. புதிய கார் முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக்
    இந்தியாவில் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் விநியோகம் ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கும் என ஆடி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய காரை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.  

    ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும்.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா கார்னிவல் கார் டெலிவரி செய்யப்படும் போது ஏற்பட்ட பரிதாப நிலை பற்றிய விவரங்களை பார்ப்போம்.


    புத்தம் புதிய கியா கார்னிவல் கார் சுவரில் மோதும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வாடிக்கையாளர் ஒருவர் தனது புதிய கார்னிவல் காரை விற்பனை மையத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது எடுக்கப்பட்டதாகும்.

    கார் சுவரில் மோதும் முன், விற்பனை மைய ஊழியர் புதிய கார் விவரங்களை வாடிக்கையாளருக்கு விவரிக்கிறார். பின் வாடிக்கையாளர் கார் அக்சிலரேட்டரை அழுத்தியதும் அது சுவரில் மோதியது. கார் சுவரை நோக்கி நகரும் போது வாடிக்கையாளர் காரின் வேகத்தை அதிகரித்து இருக்கலாம் என தெரிகிறது.
    கியா கார்னிவல்
    புத்தம் புதிய கார் சுவரில் மோதிய போதும், அது காரில் உள்ள ஏர்பேக்குகள் செயல்படும் அளவு தீவிரமான பாதிப்பு ஏற்படவில்லை என்றே தெரிகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் அருகில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

    மோதலில் காரின் முன்புற பொனெட், பம்ப்பர் மற்றும் பக்கவாட்டுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் காரில் உள்ள கூலண்ட் அல்லது தண்ணீர் கசிந்திருக்கிறது. சேதமடைந்த காரின் உள்புற பாகங்களும் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
    எம்வி அகுஸ்டா நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    எம்வி அகுஸ்டா நிறுவனம் புதிய குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய குரூயிசர் மோட்டார்சைக்கிள் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் விவரங்களை எம்வி அகுஸ்டா நிறுவனம் சமூக வலைதளத்தில் தெரியப்படுத்தி இருக்கிறது. 
    எம்வி அகுஸ்டா
    எம்வி அகுஸ்டா குரூயிசர் மாடல் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது எம்வி அகுஸ்டா பிராண்டின் பாரம்பரிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை 5.5 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்கிரீன் ப்ளூடூத் வசதி கொண்டது ஆகும். மேலும் இந்த மோட்டார்சைக்கிள் எம்வி ரைடு கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்ஜி ஹெக்டார் பிளஸ் காரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.



    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது மூன்றாவது வாகனத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்நிறுவனத்தின் மூன்றாவது மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஆறு பேர் மற்றும் ஏழு பேர் என இருவித இருக்கை அமைப்புகளுடன் உருவாகி இருக்கிறது. 

    இந்தியாவுக்கான எம்ஜி ஹெக்டார் பிளஸ் உற்பத்தி ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் இந்தியாவில் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவிலேயே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    புதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
    ×