search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா சிட்டி
    X
    ஹோண்டா சிட்டி

    புத்தம் பதிய ஹோண்டா சிட்டி உற்பத்தி துவங்கியது

    ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காரின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா கார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தனது 5 ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் காரின் உற்பத்தியை துவங்கி இருக்கிறது. புதிய கார் உத்திர பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் உருவாக்கப்படுகிறது. 

    அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி புதிய கார் உற்பத்தி பணிகளை ஹோண்டா துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. புத்தம் புதிய ஹோண்டா சிட்டி மாடல் ஜூலை மாத வாக்கில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.
    ஹோண்டா சிட்டி
    புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×