என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்து இருக்கிறது.
ஹூரோ எலெக்ட்ரிக் நிறுவனம் Be a Bike Buddy எனும் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் ஏற்கனவே ஹீரோ எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துவோரின் அறிவுறுத்தலால் புதிய ஹீரோ எலெக்ட்ரிக் வாகனத்தை ஆன்லைனில் வாங்கும் போது வாடிக்கையாளருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும் ஹீரோ எலெர்ட்ரிக் வாகனத்தை வாங்க கோரும் வாடிக்கையாளருக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமேசான் வவுச்சர் வழங்கப்படுகிறது. ஒரு ஹீரோ எலெக்ட்ரிக் வாடிக்கையாளர் அதிபட்சமாக இரண்டு புதிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்ய முடியும்.

இத்துடன் ரிஃபெர் செய்யப்படுபவர்களில் ஒவ்வொரு 50 ஆவது வாடிக்கையாளருக்கும் கிளைடு எலெர்ட்ரிக் ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோன்று வாடிக்கையாளர்கள் ஆப்டிமா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் வென்றிட முடியும்.
ஹீரோ எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கும் புதிய சலுகை ஜூன் 25 ஆம் தேதி துவங்கி தூலை 15 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கார் டயர்களின் தேய்மானத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கார் உபயோகிக்கும் அனைவருமே காரில் பழுது ஏற்பட்டால் மட்டுமே பணிமனைக்கு காரை கொண்டு செல்வோம். ஆனால் காரில் பழுது ஏதும் ஏற்படாவிட்டாலும் குறிப்பிட்ட கிலோமீட்டர் ஓடிய நிலையில் காரை பணிமனைக்குக் கொண்டு சென்று காரின் சக்கரங்களை வீல் அலைன்மென்ட் செய்ய வேண்டும்.
காரை செலுத்தும் ஸ்டீரிங்குடன் நேரடியாக தொடர்புடையது சக்கரங்கள்தான். இவை ஒருசேர இருந்தால் மட்டுமே காரின் டயர் தேய்மானம் குறைந்து அதிக நாள் உழைக்கும். இந்த மூன்று பகுதிகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்குத்தான் வீல் அலைன்மென்ட் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட இடைவெளியில் வீல் அலைன்மென்ட் செய்தால் டயர் தேய்மானம் அதிகமாவதை தவிர்க்க முடியும். வாகனம் ஓட்டும்போது, வாகனம் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லாமல் நேராக செல்வதற்கு வழிவகுக்கும்.
காரின் ஸ்டீரிங் கண்ட்ரோலாக இருக்கும். இதனால் பயமின்றி காரை ஓட்டலாம். வீல் அலைன்மென்ட் செய்வதால் சிறு சிறு விபத்துகளை தவிர்க்க முடியும். ஸ்டீரிங், சஸ்பென்ஷன் ஆகியவை நீண்ட காலம் உழைக்க இது வழிவகுக்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் டார்க் எடியஷன் பிஎஸ்6 கார் இந்திய விநியோக விவரங்களை பார்ப்போம்.
டாடா ஹேரியர் டார்க் பிஎஸ்6 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விநியோகம் இந்தியாவில் துவங்கியுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் பிஎஸ்6 வெளியீட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் விற்பனையகங்களுக்கு வந்தடைந்த டார்க் எடிஷன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் இயங்கி வரும் விற்பனையகம் ஒன்று புதிய டார்க் எடிஷன் மாடலை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஹேரியர் டார்க் எடிஷன் மாடல் எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய டாடா ஹேரியர் மாடலில் பாதுகாப்பிற்கு ஆறு ஏர்-பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டாடா ஹேரியர் மாடல் மேனுவல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 17.7 லட்சத்தில் துவங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்தில் துவங்குகிறது. ஹேரியர் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலான வென்யூ இந்திய சந்தையில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது. இதில் 97400 யூனிட்கள் இந்தியாவிலும், 7400 யூனிட்கள் சர்வதேச சந்தையில் விற்பனையாகி இருக்கிறது.
புதிய வென்யூ மாடல் இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் எஸ்யுவி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் வென்யூ மாடல் ஹூண்டாயின் பாரம்பரிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்புறம் டார்க் க்ரோம் முன்புற கிரில், பக்கவாட்டில் சாலிட் மற்றும் ஃபுல் வால்யூம் வீல் ஆர்ச் மற்றும் உறுதியான கேரக்டர் லைன் கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் வென்யூ பின்புறம் பம்பர், ரிவர்ஸ் விளக்கு, பாக் விளக்கு ஆகியன வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. இதன் உள்பகுதியில் 8 அங்குல தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளங்களில் செயல்படக் கூடியது.
பாதுகாப்பு அம்சத்துக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன. ரிவர்ஸ் கேமரா, மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், காற்றோட்டமான இருக்கைகள், டயர் பிரஷர் மானிட்டர் ஆகியன இதில் முக்கியமான மாற்றங்களாகும். ஏபிஎஸ், இபிடி உள்ளிட்டவையும் உள்ளன.
இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ விலை ரூ.13.82 லட்சம் முதல் ரூ.18.92 லட்சம் வரை இருக்கும். இதில் டீசல் மாடல் விலை ரூ.15.13 லட்சத்தில் தொடங்கி ரூ.20.05 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய லிவோ பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பிஎஸ்6 லிவோ மோட்டார்சைக்கிளுக்கான டீசரை ஹோண்டா வெளியிட்டுள்ளது.
புதிய ஹோண்டா லிவோ பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் தனது வாகனங்களை ஒவ்வொன்றாக பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் ஹோண்டா கிரேசியா 125 ஸ்கூட்டரை அப்டேட் செய்தது.

இவற்றை தொடர்ந்து ஹோண்டா லிவோ பிஎஸ்6 இந்திய சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் அதிக அம்சங்கள் மற்றும் பல்வேறு புதிய அப்டேட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் டீசர் வீடியோ அமைந்துள்ளது.
அந்த வகையில் புதிய லிவோ பிஎஸ்6 மோட்டார்சைக்கிளில் 110சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் மேம்பட்ட சிடி110 டிரீம் மோட்டார்சைக்கிள் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109.51சிசி என்ஜின் 8.7 பிஹெச்பி பவர், 9.3 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் கார் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஹெக்டார் பிளஸ் ஆறு பேர் பயணிக்கக்கூடிய மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய ஹெக்டார் சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மூன்று வேரியண்ட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஹெக்டார் பிளஸ் ஸ்டைல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.

புதிய ஹெக்டார் பிளஸ் மாடல்களின் உற்பத்தி பணிகள் குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.
ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் ரைட் செய்வதற்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் துவங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ரைடு செய்ய விரும்புவோர் தங்களின் விவரங்களை வலைதளத்தில் பதிவிட வேண்டும். இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமானது.

முன்னதாக எக்ஸ்டிரீம் 160ஆர் காட்சிப்படுத்தப்பட்டு, இதன் பெரும்பாலான விவரங்கள் ஹீரோ மோட்டோகார்ப் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாடல் ஃபுல் எல்இடி லைட்டிங், ஃபுல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, பெரிய ஃபியூயல் டேன்க், டேன்க் எக்ஸ்டென்ஷன் மற்றும் பின்புறம் மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது.
புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மாடலில் 160சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் சுசுகி ஜிக்சர், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் யமஹா எஃப்இசட் வி3 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜீப் நிறுவனத்தின் 2021 காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய மாடல் விவரங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில் புதிய ஸ்பை படங்களின்படி 2021 ஜீப் காம்பஸ் மாடலில் 5 ஸ்போக் அலாய் வீல்கள், சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய காம்பஸ் மாடல் பற்றி ஜீப் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்நிறுவனம் இரண்டு அல்லது மூன்று புதிய வாகனங்களை இந்தியாவில் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

புதிய ஃபேஸ்லிப்ட் மாடலில் ஏழு ஸ்லாட் கிரில், எல்இடி ஃபாக் லேம்ப், புதிய அலாய் வீல்கள், புதிய நிறங்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட் தவிர வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. மேலும் இதில் சில அம்சங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பினால் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.
இதன் உள்புறம் 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிளஅ கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் அமேசான் அலெக்சா போன்ற சேவைகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
2021 ஜீப் காம்பஸ் மாடல் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இருவித டியூனிங்- 128 பிஹெச்பி, 270 என்எம் டார்க் மற்றும் 148 பிஹெச்பி, 270 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 கார்னிவல் எம்பிவி கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 கார்னிவல் எம்பிவி கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2021 கியா கார்னிவல் நான்காம் தலைமுறை மாடல் ஆகும். 2021 கார்னிவல் மாடலில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கியா கார்னிவல் முன்புறம் டைகர்-நோஸ் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப் யூனிட், புதிய எல்இடி டிஆர்எல்கள், ராப்-அரவுண்ட் எல்இடி இன்டிகேட்டர்கள், ஃபாக்ஸ் ஸ்கஃப் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் புதிய எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கார்னிவல் எம்பிவி மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் யூனிட் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புதிய கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் பிஎஸ்6 எலான்ட்ரா கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 எலான்ட்ரா செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎஸ்6 எலான்ட்ரா மாடல் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்ஒ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் துவக்க விலை ரூ. 18.7 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய எலான்ட்ரா பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட 1.5 லிட்டர் CRDi என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 114 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பேஸ் மாடலான எஸ்எக்ஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன், எஸ்எக்ஸ்ஒ மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
எலான்ட்ரா பிஎஸ்6 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், அழகிய டூயல் டோன் அலாய் வீல்கள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹூண்டாயின் அதிநவீன புளூ லின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஹோண்டா கிரேசியா 125 பிஎஸ்6 விலை ரூ. 73336, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டரில் பிஎஸ்6 ரக 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 10.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் வி டைப் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏசிஜி ஸ்டார்ட்டர் மோட்டார், ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், எல்இடி டெயில் லைட்கள், ஸ்ப்லிட் கிராப் ரெயில் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய கிரேசியா 125 ஸ்கூட்டர் மேட் சைபர் எல்லோ, பியல் சைரென் புளூ, மேட் ஆக்சிஸ் கிரே மற்றும் பியல் ஸ்பார்டன் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கார் துவக்க விலை ரூ. 5.13 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மிக குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அறிமுகம் செய்யும் மாருதி சுசுகி திட்டத்தின் கீழ் புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய காரில் மாருதி நிறுவனம் பொருத்திய எஸ் சிஎன்ஜி வேரியண்ட் அதிக பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது.

மாருதியின் எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 31.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த காரின் டேன்க் கொள்ளளவு 55 லிட்டர்கள் ஆகும்.
எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 காரை அறிமுகம் செய்வதன் மூலம் நாட்டில் பசுமை வாகனங்களை ஊக்குவகிக்கும் முயற்சிக்கு கை கொடுக்கிறோம். புதிய எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி மாடல் அதிக செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வழங்குகிறது என மாருதி சுசுகி நிறுவனத்தின் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.






