என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் முதல் முறையாக வெளியாகி இருக்கிறது.

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்பை படங்கள் ஹெச்பிசி குறியீட்டு பெயர் கொண்டிருக்கின்றன. மேலும் இதில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    காரின் வெளிப்புறத்தில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல்கள், இரண்டு ஸ்லாட் கிரில், க்ரோம் இன்சர்ட்கள், பம்ப்பரில் புதிய ஹெட்லேம்ப்  மற்றும் பல்வேறு ஸ்லாட் ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 
    ரெனால்ட் கைகர்
    காரின் உள்புறம் ரெனால்ட் கைகர் மாடலில் ஃபுளோட்டிங் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், கிளைமேட் கண்ட்ரோல், பியானோ பிளாக் இன்சர்ட்கள், சென்டர் கன்சோல், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிளாக் மற்றும் கிரே தீம், டூயல் குளோவ் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

    ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் ஸ்டான்டர்டு அம்சமாகவும், ஏஎம்டி மற்றும் சிவிடி உள்ளிட்டவை ஆப்ஷனாக வழங்கப்படலாம்.
    மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் என்விடியா நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் தானியங்கி கார் தொழில்நுட்பம் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் என்விடியா நிறுவனங்கள் இடையே வியாபார ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரு நிறுவனங்களும் கூட்டணி அமைத்து வாகனங்களுக்குள் கம்ப்யூட்டிங் சிஸ்டம்கள், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. 

    2024 ஆம் ஆண்டு முதல் இந்த தானியங்கி கார் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் ஆட்டோமொபைல் துறையில் இதுவரை இல்லாத அளவு அதிக சவால்மிக்க மற்றும் மேம்பட்ட கம்ப்யூட்டிங் தளத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கின்றன. 
    பென்ஸ் - என்விடியா
    இரு நிறுவனங்கள் கூட்டணியில் தயாராகும் மென்பொருள் சார்ந்த தளம், என்விடியா டிரைவ் பிளாட்பார்மில் உருவாகிறது. இதன் முதற்கட்டமாக ஒரு முகவரியில் இருந்து மற்றொரு முகவரிக்கும் செல்லும் திறன் வழங்கப்படுகிறது. கூடுதலாக பல்வேறு பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை வழங்கும் அசங்கள் வழங்கப்படுகிறது. 

    மேலும் கார் பயன்பாடு முழுக்க மென்பொருள் செயலிகள் மற்றும் சந்தா சேவைகள் உள்ளிட்டவை ஓவர் தி ஏர் மென்பொருள் அப்டேட்களாக வழங்கப்பட இருக்கிறது. 
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய கார் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
     

    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது மூன்றாவது எஸ்யுவி மாடலினை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் பிளஸ் என அழைக்கப்படும் புதிய எஸ்யுவி அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    புதிய எஸ்யுவி மாடல் எம்ஜி ஹெக்டார் காரை விட அதிக அம்சங்கள் நிறைந்த எக்ஸ்டென்ட்டெட் வேரியண்ட் ஆகும். மேலும் இந்த கார் விற்பனையகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. புதிய ஹெக்டார் பிளஸ் கார் பல்வேறு நிறங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
     எம்ஜி ஹெக்டார் பிளஸ்
    எனினும், அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்ள கார் ஸ்டேரி ஸ்கை புளூ மற்றும் பெய்க் போன்ற நிறங்களை கொண்டிருக்கிறது. பிரத்யேக நிறம் தவிர இந்த காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதில் முந்தைய ஹெக்டார் மாடலை விட ஒட்டுமொத்த நீளம் 40எம்எம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.
    இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் எஃப்டிஆர் 1200 ரேலி மோட்டார்சைக்கிள் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் எஃப்டிஆர் 1200 ரேலி மோட்டார்சைக்கிள் மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விலை 13499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 10.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எஃப்டிஆர் 1200 ரேலி மோட்டார்சைக்கிள் பெயருக்கு ஏற்றார்போல் ஆஃப் ரோடு வேரியண்ட் ஆகும். புதிய மோட்டார்சைக்கிளில் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்கார்பியன் ரேலி எஸ்டிஆர் நாபி ரக டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.
    Indian FTR 1200 Rally, Motorcycle, இந்தியன் எஃப்டிஆர் 1200 ரேலி, மோட்டார்சைக்கிள்
    புதிய மோட்டார்சைக்கிள் டைட்டானியம் ஸ்மோக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபியூயல் டேன்க் பக்கவாட்டுகளில் பெரிய இந்தியன் ஹெட் டீக்கல் ஒட்டப்பட்டு உள்ளது. மேலும் இதிலி சிறிய ஃபிளை ஸ்கிரீன், டேன் பிரவுன் நிற சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மோட்டார்சைக்கிளுக்கு பழங்கால தோற்றத்தை வழங்குகிறது. 

    இவைதவிர இந்த மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எஃப்டிஆர் 1200 ரேலி மாடலில் 1205 சிசி லிக்விட் கூல்டு வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 125 பிஹெச்பி பவர், 117.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஃபென்டர் மாடல் வெளியீட்டு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் ஆஃப் ரோடர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 2019 பிரான்க்ப்ரூட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சந்தையில் அறிமுகமானது முதல் புதிய கார் விலை அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகின் பல்வேறு சந்தைகளில் இந்த கார் வெளியிடப்பட்டது. பின் கொரோனா வைரஸ் பாதிப்பு குறுக்கிட லேண்ட் ரோவர் நிறுவனம் தனது புதிய வாகனத்தை வெளியிடும் திட்டங்களை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
     லேண்ட் ரோவர் டிஃபென்டர்
    தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மூன்று கதவுகள் கொண்ட டிஃபென்டர் மாடலின் முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் அட்ரியன் மார்டெல் தெரிவித்தார்.  

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை என அனைத்து பணிகளையும் முழுமையாக இடையூறை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், தற்போதைய காலக்கட்டத்திலும் புதிய டிஃபென்டர் மாடலை வாங்க சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக மார்டெல் தெரிவித்து இருக்கிறார்.
    உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் பிரபல ஆட்டோ விழாவும் ரத்து செய்யப்படுகிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு உலகின் மிகமுக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இந்த வரிசையில் 2020 இஐசிஎம்ஏ விழா இணைந்துள்ளது. 

    முந்தைய திட்டங்களின் படி 2020 இஐசிஎம்ஏ விழா நவம்பர் 3 ஆம் தேதி துவங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த விழா இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற இருந்தது. எனினும், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு கோரத்தாண்டம் அதிகரித்துள்ளதால், இவ்விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    2020 இஐசிஎம்ஏ
    உலகின் மிகப்பெரும் இருசக்கர வாகன விழாவாக இஐசிஎம்ஏ இருக்கிறது. தற்சமயம் இவ்விழாவின் 2020 பதிப்பு ரத்து செய்யப்பட்டு, இவ்விழா அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது. 
    இந்தியாவில் இனி இவர்களுக்கும் ஓட்டுனர் உரிமம் கிடைக்கும் என மத்திய அரசு சார்ந்த தகவல் வெளியாகி உள்ளது.

    பார்வை குறைபாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் நிறக்குருடும் ஒன்று. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நிறங்கள் சரிவர தெரியாது. இதனால் இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற முடியாத நிலை இருந்தது.

    ஆனால் உலகில் பல நாடுகளில், நிறக்குருடு உள்ளவர்களுக்கும் ஒட்டுனர் உரிமம் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி இந்தியாவிலும் அது போல வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுபற்றி மருத்துவ நிபுணர்களிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டது.
    வாகனங்கள்
    நிறக்குருடு உள்ளவர்களால் நிறங்களை மட்டும் அடையாளம் காண முடியாதே தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் சரியாக செய்ய முடியும். எனவே, குறிப்பிட்ட அளவிலான நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உள்பட வாகன போக்குவரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கருத்து கேட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 15 ந் தேதி வரை ஆன்லைனில் ஏராளமானோர், நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

    பொதுமக்களின் பெரும்பாலான கருத்துக்களின் அடிப்படையில் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நிறக்குருடு உள்ளவர்களுக்கு சாதகமான ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. லேசான மற்றும் நடுத்தர அளவில் நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஒட்டுனர் உரிமம் வழங்குவதற்காக மோட்டார்வாகன விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் ப்ரோடக்ஷன் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியீட்டிற்கு முன் இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் புதிய டாடா கார் ஸ்பை வீடியோ தற்சமயம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் புதிய கார் சோதனை செய்யப்படுகிறது.
     டாடா ஹெச்பிஎக்ஸ்
    ஸ்பை வீடியோவில் வை வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கின்றன. புதிய டாடா கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ALFA பிளாட்ஃபார்மில், இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்படுகிறது. 

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எஸ்யுவி மாடலினை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. அப்போதே இந்த காரின் 90 சதவீத பணிகள் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டது. 

    புதிய காரில் தற்போதைய டாடா அல்ட்ராஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். 
    பென்ட்லி நிறுவனத்தின் புதிய பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    பென்ட்லி நிறுவனம் புத்தம் புதிய பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய டீசர் வீடியோவில் புதிய மாடல் விவரங்கள் தெரியவந்துள்ளது. 

    டீசர் வீடியோவில் புதிய காரில் ஓவல் வடிவ ஹெட்லேம்ப்கள், அனலாக் கடிகாரம், ஸ்பீடோமீட்டர், ஸ்டீரிங் வீல், ஸ்பீக்கர், அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய விவரங்களில் இதே அம்சங்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
     பென்ட்லி டீசர்
    புதிய பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலில் 3.0 லிட்டர் வி6 பிளக் இன் ஹைப்ரிட் யூனிட், 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 யூனிட், 6.0 லிட்டர் ட்வின் டர்போ டபிள்யூ12 யூனிட் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    முந்தைய ஸ்பை படங்களின் படி பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலில் ட்வீக் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், ஓவல் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் காரின் முன்புற பம்ப்பர் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    இத்துடன் முன்புற குரோம் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் ஸ்பை படங்களில் தெரியவில்லை. எனினும், பின்புறம் மேம்மபட்ட பம்ப்பர் மற்றும் புதுவித டெயில் லைட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
     

    2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலை வாங்க 26 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 

    நாடுதழுவிய ஊரடங்கு இன்னும் முழுமையாக திரும்பப் பெறப்படாத நிலையில், புதிய மாருதி கார் முன்பதிவில் இத்தனை மைல்கல் கடந்து இருக்கிறது. தற்போதைய முன்பதிவு எண்ணிக்கையை தொடர்ந்து புதிய மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என மாருதி சுசுகி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா
    2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2020 விட்டாரா பிரெஸ்ஸா விலை இந்தியாவில் ரூ. 7.34 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் மாருதியின் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    சுசுகி நிறுவனம் புத்தம் புதிய 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

    சுசுகி நிறுவனம் 2020 ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிளை ஜப்பானில் அறிமுகம் செய்தது. புதிய சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மாடல் புளூ மற்றும் சில்வர் நிற பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

    புதிய மோட்டார்சைக்கிளின் முன்புற ஃபேரிங்கில் சுசுகி மற்றும் எக்ஸ்டார் பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. புதிய நிறம் தவிர, ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிளில் 124சிசி சிங்கிள் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன்
    இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.  

    புதிய மோட்டார்சைக்கிளில் கீலெஸ் இக்னிஷன், ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிள் ட்ரிடன் புளூ மெட்டாலிக், டைட்டன் பிளாக் மற்றும் பிரிலியன்ட் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய சுசுகி மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீடு தற்போதைய சூழலில் கேள்விக்குறியாகவே உள்ளது. 
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காருக்கான முன்பதிவுகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் புதிய ஹோண்டா சிட்டி மாடல் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரமும், விற்பனையகம் செல்வோர் ரூ. 21 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும்.

    ஜூன் 23 ஆம் தேதி முதல் ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா சிட்டி கார்களை விற்பனையகங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை துவங்கியது. இந்தியாவில் தற்தமயம் சுமார் 300 ஹோண்டா விற்பனை மையங்கள் செயல்பாட்டில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 
    ஹோண்டா சிட்டி
    புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ×