என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புத்தம் புதிய ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புத்தம் புதிய ஆக்டிவ் குரூயிஸ் கண்டோரல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே கார்களில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இது பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
புதிய தொழில்நுட்பத்தினை பிஎம்டபிள்யூ மற்றும் போஷ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. புதிய தொழில்நுட்பம் டூரிங் மோட்டார்சைக்கிள் ஓட்டுவோருக்கு அதிக சவுகரியத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ரைடர் செட் செய்த வேகம் மற்றும் எதிரே செல்லும் வாகனத்திற்கு இடையில் உள்ள இடைவெளியை கணக்கிடும்.

பின் இது மோட்டார்சைக்கிள் வேகத்தை முன் செல்லும் வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ப கட்டுப்படுத்த துவங்கும். மேலும் வளைவுகளின் போதும் மோட்டார்சைக்கிள் வேகத்தை இது தானாக குறைக்கும். ரைடர் விருப்பப்படி மூன்று வித அளவுகளில் இடைவெளியை தேர்வு செய்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு செட்டிங்கின் விவரங்களும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் காண்பிக்கப்படுகிறது. இந்த சிஸ்டத்தில் கம்ஃபர்டபிள் மற்றும் டைனமிக் என இரண்டு வித கன்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்த வாகனங்கள் எண்ணிக்கை விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஜூன் 2020 மாதத்தில் மட்டும் 3866 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் நடைபெற்ற விற்பனையுடன் ஒப்பிடும் போது 63 சதவீதம் குறைவு ஆகும்.
இந்த ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 1639 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாகனங்கள் விற்பனை சரிவடைந்தது. பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படதால், விற்பனை மீண்டும் அதிகரிக்க துவங்கியது.
சந்தையில் தட்டுப்பாடு மீண்டும் அதிகரிக்க துவங்கியது மற்றும் விற்பனை ஒப்பந்ததாரர்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிந்ததாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு மூத்த துணை தலைவர் நவீன் சோனி தெரிவித்தார்.
மஹிந்திரா நிறுவனம் இதே நிதியாண்டில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்த நிதியாண்டு முடிவதற்குள் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
தற்போதைய தகவல்களின்படி மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் ஆட்டம் எலெக்ட்ரிக் மற்றும் ட்ரியோ சோர் போன்ற வாகனங்களை வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

வர்த்தக வாகனங்கள் மட்டுமின்றி இகேயுவி100 மாடலையும் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது, இந்த மாடல் விலை குறைந்த எலெக்ட்ரிக் மாடல் என்ற பெருமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் 14 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் பெரும்பாலான மாடல்கள் ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா மாடல்கள் ஆகும்.
ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாடு காலக்கட்டத்திலும் மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. ட்ரியோ மாடலுக்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியதால், மஹிந்திரா நிறுவனம் ட்ரியோ சோர் மாடல் மீதும் அதிக கவனம் செலுத்த துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 சிட்டி மாடல் கார் விற்பனையகம் வந்தடைந்து இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடலின் விலை தவிர பெரும்பாலான விவரங்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில், புதிய ஹோண்டா சிட்டி மாடல் விற்பனையகம் வந்தடைந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா சிட்டி பெட்ரோல் வேரியண்ட் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியண்ட் புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய லிவோ பிஎஶ்6 மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செயய்ப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக ஹோண்டா லிவோ மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் துவக்க மாடல் விலை ரூ. 69422, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹோண்டா லிவோ மோட்டார்சைக்கிள் ஹோண்டா நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 ரக 110சிசி மாடல் ஆகும். புதிய ஹோண்டா பிஎஸ்6 லிவோ மோட்டோர்சைக்கிள் முந்தைய மாடலை விட பல்வேறு அப்டேட்கள் மற்றும் புதிய அம்சங்களை பெற்று இருக்கிறது.

இதில் பிஎஸ்6 ரக 110சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஹோண்டா நிறுவனத்தின் இஎஸ்பி தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது அதிக மைலேஜ் மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய கிராஃபிக்ஸ், டேன்க் ஷிரவுட்கள், புதிய வடிவமைப்பு கொண்ட ஃபியூயல் டேன்க், முன்புற வைசர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய ஹோண்டா லிவோ பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏசிஜி ஸ்டார்ட்டர் மோட்டார், புதிய டிசி ஹெட்லேம்ப்கள், பாசிங் ஸ்விட்ச், ஸ்டார்ட்/ஸ்டாப் என்ஜின் ஸ்விட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
நிசான் நிறுவனத்தின் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நிசான் நிறுவனம் இந்தியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட சந்தைகளுக்கான எதிர்கால திட்டங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம், இபவர் மேம்பட்ட ஹைப்ரிட் வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்டவை இந்த சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இந்தியாவில் நிசான் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நிசான் நிறுவனம் நோட் இபவர் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வந்தது. அது எலெக்ட்ரிக் தொழில்நுட்பம் கொண்ட நிசான் நிறுவனத்தின் முதல் வாகனம் ஆகும்.

நோட் இபவர் மாடல் இங்கு அறிமுகம் செய்யப்படாத நிலையில், தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற சந்தைகளில் கிக்ஸ் இபவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய நிசான் முயற்சி செய்து வருகிறது.
எனினும், நிசான் எலெக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
2021 ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த சர்வதேச மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமான ஜெனிவா மோட்டார் விழா அடுத்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் கலந்து கொள்ள விரும்பவில்லை என தெரிவித்ததால், ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த 2020 ஜெனிவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டிற்கான விழா ஏற்பாடு பற்றிய முதற்கட்ட பணிகளின் போது பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காததால், விழா ரத்து செய்வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருந்த சர்வதேச ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக இப்போதே அறிவிக்கப்பட்டு விட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 2021 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2021 எம்3 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய கார் நர்பர்கிங் களத்தில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட சிறிய டீசர் வீடியோ வெளியாகி உள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ எம்3 இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது ரியர்-வீல் டிரைவ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. எனினும், இந்த காரில் எக்ஸ்டிரைவ் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

2021 பிஎம்டபிள்யூ எம்3 மாடலில் எஸ்58 ட்வின் டர்போ 3.0 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 500 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதே மோட்டார் எக்ஸ்3 எம் மற்றும் எக்ஸ்4 எம் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் 4 சீரிஸ் கிரான் கூப் மாடலில் உள்ளதை போன்றே இந்த கார் கன்வென்ஷனல் கிரில் கொண்டிருக்கிறது.
இத்துடன் பெரிய ஏர் இன்டேக்குகள், கார்பன் ஃபைபர் ப்ரூஃப், ஏரோடைனமிக் விங் மிரர்கள், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், குவாட் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
ஆடி நிறுவனத்தின் புதிய கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆடி நிறுவனத்தின் கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆடம்பர எஸ்யுவி மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காரில் ஆக்டாகோனல் கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்போர்டி பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உயர் ரக மாடல்களில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் ட்வீக் செய்யப்பட்ட எல்இடி டெயில்லைட்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் உள்புறம் புதிய 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அமேசான் அலெக்சா விர்ச்சுவல் அசிஸ்டண்ட் உடன் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் கொண்டிருக்கிரது. இது 245 பிஹெச்பி பவர், 370 என்எம் டார்க் செயல்திறன், 7 ஸ்பீடு எஸ் டிரானிக் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் விலை ரூ. 55 லட்சம், எக்ஸ் ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய டபிள்யூஆர்வி பிஎஸ்6 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2020 ஹோண்டா டபிள்யூஆர்வி இந்தியாவில் ஜூலை 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஹோண்டா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. புதிய ஹோண்டா காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய 2020 ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். ஏற்கனவே இந்த கார் விற்பனையகங்களுக்கும் வந்தடைந்து விட்டது.

ஹோண்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட எஸ்யுவி மாடல் முன்கூட்டியே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இந்த கார் உற்பத்தி பணிகள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
2020 ஹோண்டா டபிள்யூஆர்வி மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என இருவித என்ஜின்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இரு என்ஜின்களும் முறையே 88 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய 2020 டைகர் 900 மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனையகம் வந்தடைந்து இருக்கிறது.
2020 டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையகங்களுக்கு வந்தடைந்துள்ளது. மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் புதிய மோட்டார்சைக்கிள் டெஸ்ட் ரைட் விரைவில் துவங்க இருக்கிறது.
டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் - டைகர் 900 ஜிடி, டைகர் 900 ரேலி மற்றும் டைகர் 900 ரேலி ப்ரோ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் என்ட்ரி லெவல் டைகர் 900 ஜிடி விலை ரூ. 13.70 லட்சம் என்றும், டைகர் 900 ரேலி மற்றும் டைகர் 900 ரேலி ப்ரோ மாடல்களின் விலை முறையே ரூ. 14.35 லட்சம் மற்றும் ரூ. 15.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 டிரையம்ப் டைகர் 900 சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களில் புதிய என்ஜின் மற்றும் எலெக்டிரானிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அதன்படி புதிய டைகர் 900 மாடலில் IMU சார்ந்த ஏபிஎஸ் சிஸ்டம், பை டைரெக்ஷனல் குவிக் ஷிஃப்டர், ரெயின், ரைடர், ரோட், ஸ்போர்ட், ஆஃப் ரோட் மற்றும் ஆஃப் ரோட் ப்ரோ என ஆறுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி மாட்யூல் கொண்டிருக்கிறது.
புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 888சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் விநியோகம் துவங்கி உள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் விநியோகம் துவங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 15.35 லட்சம் மற்றும் ரூ. 16.10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
மார்ச் மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான 2020 ஆப்ரிக்கா ட்வின் மாடல்கள் தற்சமயம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. முதல் மோட்டார்சைக்கிள் குர்கிராமில் உள்ள வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்பட்டது.

ஸ்டான்டர்டு அம்சங்களை பொருத்தவரை இரு வேரியண்ட்களிலும் 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஹோண்டா செலக்டபில் டிராக்ஷன் கண்ட்ரோல், 6 ஆக்சிஸ் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், மூன்று நிலைகளில் வீலி கண்ட்ரோல் சிஸ்டம், கார்னெரிங் லைட்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. 2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடலில் நான்கு நிலைகளில் என்ஜின் செயல்திறன் மற்றும் மூன்று நிலைகளில் எலெக்டிரானிக் என்ஜின் பிரேக்கிங் வழங்கப்பட்டுள்ளன.
2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் 1084 சிசி பேரலெல் ட்வின் என்ஜின் 101 பி.ஹெச்.பி. @7500 ஆர்பிஎம், 105 என்எம் டார்க் @6250 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.






