search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பிஎம்டபிள்யூ ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல்
    X
    பிஎம்டபிள்யூ ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல்

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் அறிமுகம்

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புத்தம் புதிய ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.


    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புத்தம் புதிய ஆக்டிவ் குரூயிஸ் கண்டோரல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே கார்களில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இது பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய தொழில்நுட்பத்தினை பிஎம்டபிள்யூ மற்றும் போஷ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. புதிய தொழில்நுட்பம் டூரிங் மோட்டார்சைக்கிள் ஓட்டுவோருக்கு அதிக சவுகரியத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ரைடர் செட் செய்த வேகம் மற்றும் எதிரே செல்லும் வாகனத்திற்கு இடையில் உள்ள இடைவெளியை கணக்கிடும்.
    பிஎம்டபிள்யூ ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல்
    பின் இது மோட்டார்சைக்கிள் வேகத்தை முன் செல்லும் வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ப கட்டுப்படுத்த துவங்கும். மேலும் வளைவுகளின் போதும் மோட்டார்சைக்கிள் வேகத்தை இது தானாக குறைக்கும். ரைடர் விருப்பப்படி மூன்று வித அளவுகளில் இடைவெளியை தேர்வு செய்து கொள்ள முடியும். 

    ஒவ்வொரு செட்டிங்கின் விவரங்களும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் காண்பிக்கப்படுகிறது. இந்த சிஸ்டத்தில் கம்ஃபர்டபிள் மற்றும் டைனமிக் என இரண்டு வித கன்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×