என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    கியோ மோட்டார்ஸ் நிறுவனம் 2021 கியா செல்டோஸ் கிராவிட்டி மாடல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கியா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 கியா செஸ்டோஸ் மாடலை கொரிய சந்தையில் அப்டேட் செய்து இருக்கிறது. புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டிருப்பதோடு, இதன் புதிய டாப் எண்ட் மாடல் கிராவிட்டி என அழைக்கப்படுகிறது.
    கியா செல்டோஸ்  கிராவிட்டி,
    செல்டோஸ் கிராவிட்டி மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் முன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர 18 இன்ச் அளவில் டூயல் டோன் மெஷின்டு அலாய் வீல்களும் விங் மிரர், டோர் கார்னிங் மற்றும் பின்புறம் ஸ்கிட் பிளேட்களில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய கிராவிட்டி மாடலில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 177 பிஹெச்பி மற்றும் 136 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இவற்றுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
    எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் புருடேல் 1000 ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.


    எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் புதிய புருடேல் 1000ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விலை உயர்ந்த புருடேல் 1000 சீரி ஓரோ லிமிட்டெட் எடிஷன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய புருடேல் 1000ஆர்ஆர் மோட்டார்சைக்கிளில் பல்வேறு ஃபேன்சி பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள், அலுமினியம் ஃபாஸ்டெனர்கள் மற்றும் எடை குறைந்த பாகங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 
    எம்வி அகுஸ்டா புருடேல் 1000 ஆர்ஆர்
    எம்வி அகுஸ்டா புருடேல் 1000ஆர்ஆர் மோட்டார்சைக்கிளில் ஃபுல் கலர் டிஎஃப்டி ஸ்கிரீன்ஷ ரைடு-பை-வையர் திராட்டிள் வழங்கப்பட்டுள்ளது. புருடேல் 1000ஆர்ஆர் மாடலில் 208 பிஹெச்பி செயல்திறன் வழங்கும் நான்கு சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

    இதே என்ஜின் புருடேல் 1000 சீரி ஓரோ லிமிட்டெட் எடிஷன் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டாருடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், குவிக்ஷாஃப்டர் மற்றும் ப்லிப்பர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் பிகாஸ் பிராண்டு இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    ஆர்ஆர் குளோபல் நிறுவனத்தின் பிகாஸ் பிராண்டு இந்தியாவில் இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களை ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 1.4 லட்சம் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.  

    பி8 மற்றும் ஏ2 என அழைக்கப்படும் இரண்டு ஸ்கூட்டர்கள் முறையே மூன்று மற்றும் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பி8 மாடலில் 1900 வாட், ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட மோட்டார் மற்றும் 1.45 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பி8 மாடலில் லீட் ஆசிட் பேட்டரி அல்லது கழற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை பயன்படுத்த முடியும்.
    பிகாஸ் பி8
    பி8 மாடல் லீட்-ஆசிட் மாடல், லித்தியம் அயன் மாடல் மற்றும் எல்1 தொழில்நுட்பம் கொண்ட மாடல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களும் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் டாப் மாடலில் நேவிகேஷன் அசிஸ்ட், ரைட் மெட்ரிக்ஸ், ஜியோ ஃபென்சிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பிகாஸ் ஏ2 மாடலில் 250 வாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் லீட் ஆசிட் பேட்டரி அல்லது கழற்றக்கூடிய 1.29 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.  பிகாஸ் பி8 மற்றும் ஏ2 ஸ்கூட்டர்கள் மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கின்றன. இவை புளூ, வைட் மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    ரெனால்ட் நிறுவன வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


    இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட ரெனால்ட் நிறுவன விற்பனையாளர்கள் வாகனங்களை வாங்குவோருக்கு அதிரடி தள்ளுபடி வழங்கி வருகின்றன. அதன்படி ரெனால் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை, கார்ப்பரேட் சலுகை மற்றும் மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
     ரெனால்ட் டிரைபர்
    ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்இ மற்றும் ஆர்எக்ஸ்இசட் மாடல்களுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள எக்சேன்ஜ் சலுகை, ரூ. 20 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆர்எக்ஸ்எஸ் மாடலுக்கு கூடுதலாக ரூ. 25 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. க்விட் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மூன்று மாடல்களுக்கும் மாத தவணை முதல் மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என கூறப்படுகிறது. 
    ஹோண்டா நிறுவனத்தின் டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் கார் மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய ஹோண்டா கார் துவக்க விலை ரூ. 8.50 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் நான்கு வேரியண்ட்களில், ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் மார்ச் மாத வாக்கில் துவங்கப்பட்டது. இந்தியாவில் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
    ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட்
    ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 88 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 98 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதன் பெட்ரோல் என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இதன் டீசல் என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. 

    புதிய ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடல் பிரீமியம் ஆம்பர் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக், மாடன் ஸ்டீல் மெட்டாலிக், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் பிளாட்டினம் வைட் பியல் நிறங்களில் கிடைக்கிறது. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.


    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் 40 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை கடந்துள்ளது. புதிய எஸ்யுவி மாடல் அறிமுகமாகி சில மாதங்களிலேயே இந்த மைல்கல் எட்டியுள்ளது. 

    இந்தியாவில் ஊரடங்கு துவங்கும் முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா வெளியீட்டிற்கு முன்பே 14 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை பெற்று இருந்தது. முன்பதிவு விவரங்களின் படி 67 சதவீத வாடிக்கையாளர்கள் டீசல் வேரியண்ட்டையும், 33 சதவீதம் பேர் பெட்ரோல் வேரியண்ட்டை தேர்வு செய்து இருக்கின்றனர். 
    ஹூண்டாய் கிரெட்டா
    புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா 100 இஎஸ் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா 100 சிசி மாடல் விரைவில் டிஸ்க் பிரேக் வசதி பெற இருக்கிறது. புதிய டிஸ்க் பிரக் வசதி கொண்ட பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ் விலை ரூ. 59373, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது. பிளாட்டின் 100 டிரம் பிரேக் எடிஷன் விலை ரூ. 55546, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய மோட்டார்சைக்கிளில் முன்புற டிஸ்க் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் தோற்றம் மற்றும் இதர அம்சங்ள் டிரம் பிரேக் வேரியண்ட்டில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. 
    பிளாட்டினா 100
    பிஎஸ்6 ரக பிளாட்டினா 100 மோட்டார்சைக்கிளில் 102சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 7.77 பிஹெச்பி பவர், 8.34 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என பஜாஜ் தெரிவித்து இருக்கிறது.

    பஜாஜ் பிளாட்டினா 100 மோட்டார்சைக்கிளில் ஹாலோஜன் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், டின்ட் செய்யப்பட்ட வைசர், நீண்ட சஸ்பென்ஷன், மென்மையான இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் கார் இந்திய சந்தை முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
     

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் மாடல் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எஸ்யுவி மாடல் விலை காரணமாக அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. 

    இந்தியாவில் அதிக முன்பதிவுகளை பெற்று வரும் நிலையில், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எம்ஜி ஹெக்டார் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. உற்பத்தி பாதிப்பு காரணமாக கார்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    எம்ஜி ஹெக்டார்
    அறிமுகமானது முதல் ஹெக்டார் காரை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்து இருக்கிறது. இதில் 20 ஆயிரம் யூனிட்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விநியோகம் செய்து இருக்கிறது. 

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்யுவி மாடல் விலை ரூ. 12.74 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.44 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் டிசிடி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய கார் ஸ்பை படங்கள் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகி இருந்தது.  இதைத் தொடர்ந்து புதிய ஸ்பை படங்கள் தற்சமயம் வெளியாகி உள்ளது. 

    டாடா நெக்சான் டிசிடி இம்முறை பூனே பகுதியில் சோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஸ்பை படங்களின் படி புதிய டாடா  கார் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் அலாய் வீல்கள் தற்போதைய ஃபேஸ்லிப்ட்  மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
     டாடா நெக்சான் டிசிடி ஸ்பை படம்
    தற்போதைய நெக்சான் மாடல்கள் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 118 பிஹெச்பி பவர், 179என்எம் டார்க் மற்றும் 108 பிஹெச்பி பவர், 260 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ. 6.95 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய டிசிடி மாடல் விலை இதைவிட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றே தெரிகிறது.
    பென்ட்லி நிறுவனத்தின் 2020 பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    பென்ட்லி நிறுவனம் 2020 பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடல் காரினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த கார் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருந்தன.

    அந்த வரிசையில் இந்த கார் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கார் முன்புறம் ஓவல் வடிவ ஹெட்லேம்ப்கள், மேட்ரிக்ஸ் கிரில், கிரிஸ்டல் கிளாஸ்வேர், பக்கவாட்டில் 22 இன்ச் புதுவித அலாய் வீல்கள், பின்புறம் புதிய டெயில்கேட், பம்ப்பரில் நம்பர் பிளேட் ஹோல்டர், புதிய டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    2020 பென்ட்லி பென்ட்யகா ஃபேஸ்லிப்ட்
    காரின் உள்புறம் ஃபுலி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 10.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 542 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 நொடிகளில் எட்டிவிடும்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜூன் மாத வாகனங்கள் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் 51274 வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி 1,11,014 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் மாத விற்பனை 53.8 சதவீதம் சரிவு ஆகும்.

    காம்பேக்ட் கார் பிரிவு வாகனங்களான வேகன்ஆர், ஸ்விஃப்ட், செலரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் போன்ற மாடல்கள் விற்பனைக்கு முக்கிய பங்கு வகித்து இருக்கின்றன. இந்த மாடல்கள் மட்டும் 26696 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மினி வாகனங்களான ஆல்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ உள்ளிட்டவை 10458 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
    மாருதி சுசுகி
    மாருதி சியாஸ் மாடல் 553 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. யுடிலிட்டி பிரிவு வாகனங்களான எஸ் கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா போன்றவை 9764 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மாருதி ஈகோ வேன் மாடல் 3803 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    மாருதி சுசுகி நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 57428 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இதில் 4289 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் விலை ரூ. 99,950 என்றும் டூயல் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 1.03 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மாடல் மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன.
    ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர்
    ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிளில் எல்இடி லைட்னிங், ஃபுல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, மஸ்குலார் ஃபியூயல் டேன்க், எட்ஜி டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் மெல்லிய பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோ ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பிரேக்கிங்கிற்கு பெட்டல் டைப் டிஸ்க் பிரேக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிளில் 160சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    புதிய ஹீரோ மோட்டார்சைக்கிள் மாடல் சுசுகி ஜிக்சர், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் யமஹா எஃப்இசட் வி3 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மாடல் வைட், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    ×