என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் அதிநவீன அம்சத்துடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் எஸ்யுவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகமான நிலையில் புதிய கார் விரைவில் வெளியாக இருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்பட இருப்பதாக கியா மோட்டார்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் மனோகர் பட் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

    கியா சொனெட் ஸ்பை படம்

    இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஐஎம்டி) என்பது பயனர் கியர்களை மாற்ற மேனுவல் கிளட்ச் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை போக்குகிறது. புதுவித டிரான்ஸ்மிஷன் தவிர கியா சொனெட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. 

    கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் காரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆடி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் இந்திய சந்தையில் ஜூலை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த கார் முன்பதிவுகள் கடந்த மாதம் துவங்கப்பட்டது. 

    புதிய கார் முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக்

    புதிய ஆடிஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், மேம்பட்ட கம்பீர தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர், 21 இன்ச் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்கள், டிஃப்யூசர் மற்றும் இரண்டு எக்சாஸ்ட்டிப்கள் பொருத்தப்பட்ட பின்புற பம்ப்பர் கொண்டிருக்கிறது.

    ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும்.

    இந்திய சந்தையில் அறிமுகமானதும் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    கவாசகி நிறுவனத்தின் 2020 நின்ஜா 650 மோட்டார்சைக்கிள் இந்திய விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    கவாசகி நிறுவனத்தின் 2020 நின்ஜா 650 மோட்டார்சைக்கிள் விநியோகம் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்6 ரக நின்ஜா 650 மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 6.24 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2020 கவாசகி நின்ஜா 650 மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் மற்றும் எலெக்டிரானிக் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பை விட கூர்மையான தோற்றம் கொண்டிருக்கும் புதிய மாடலில் முன்புற ஃபேரிங் கம்பீர தோற்றத்தை வழங்குகிறது. இதன் கிராஃபிக்ஸ் சிறிதளவு மாற்றப்பட்டுள்ளது.

    கவாசகி நின்ஜா 650

    இத்துடன் 4.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருக்கை முந்தைய மாடலில் இருப்பதைவிட அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை ஓட்டும் போது சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது.

    2020 கவாசகி நின்ஜா 650 பிஎஸ்6 மாடலில் 649சிசி பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 68 பிஹெச்பி பவர், 65.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
    டுகாட்டி நிறுவனத்தின் 2021 டுகாட்டி மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    டுகாட்டி நிறுவனத்தின் 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் ஜெர்மனியில் சோதனை செய்யப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    ஸ்பை படங்களின்படி புதிய மோட்டார்சைக்கிள் சிறிதளவு காஸ்மெடிக் அப்டேட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் வலது புறத்தில் ட்வின் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதில் அலுமினியம் ஃபிரேம் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    2021 டுகாட்டி மான்ஸ்டர் ஸ்பை பட

    தற்போதைய மோட்டார்சைக்கிள் மாடலில் டிரெலிஸ் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்று ஓவல் வடிவ ஹெட்லேம்ப், ஸ்டபி டெயில் பகுதி உள்ளிட்டவற்றில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது.

    புதிய மோட்டார்சைக்கிளில் மான்ஸ்டர் 821 அல்லது மான்ஸ்டர் 1200 மாடல்களுக்கான அப்கிரேடு வெர்ஷனாக இல்லாமல், மான்ஸ்டர் 797 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் மான்ஸ்டர் மாடல் மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    புத்தம் புதிய இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய தார் மாடல் வரும் மாதங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    ஸ்பை படங்களின் படி புதிய தார் மாடலில் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மஹிந்திரா தார் ப்ரோடோடைப் மாடல் இறுதிக்கட்ட சோதனை செய்யப்படுவதாக தெரிகிறது. அம்சங்களின் அடிப்படையில் புதிய மஹிந்திரா தார் மாடல் அதிக வாடிக்கையாளர்களை கவரும் என கூறப்படுகிறது.

    இரண்டாம் தலைமுறை தார் மாடல் புதிய ஃபிரேம் சேசிஸ் கொண்டிருக்கிறது. இதில் சிறப்பான டிரைவிங் டைனமிக் மற்றும் மேம்பட்ட ஆஃப்-ரோட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய தார் மாடல் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என தெரிகிறது.

    மஹிந்திரா தார் ஸ்பை படம்

    புதிய தார் மாடலில் 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டேலியன் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 190 பிஹெச்பி பவர், 380 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் வேரியண்ட்டில் புதிய 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட யூனிட் வழங்கப்படுகிறது. 

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
    லம்போர்கினி நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இத்தாலி நாட்டை சேர்ந்த ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான லம்போர்கினி நிறுவனம் முற்றிலும் புதிய மாடல் காரினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    வெளியீட்டை அடுத்து புதிய கார் டீசரை லம்போர்கினி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. கிராஃபிக் படமாக வெளியாகி இருக்கும் புதிய கார் டீசரில், கார் வெளியீட்டு நிகழ்வு லம்போர்கினி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நேரலை செய்யப்படுகிறது.

    லம்போர்கினி சியன்

    புதிய லம்போர்கினி கார் அறிமுக நிகழ்வு ஜூலை 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த கார் வெளியாகும் என்ற தகவல் வெளியாகவில்லை. டீசர்களின்படி புதிய கார் முற்றிலும் புதிய மாடலாகவோ அல்லது கான்செப்ட் ரகமாகவோ இருக்கும் என தெரிகிறது.

    மேலும் இது லம்போர்கினி சியன் எஃப்கேபி 37 மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர இந்த கார் சியன் எஃப்கேபி 37 ரோட்ஸ்டர் மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
    இந்திய சந்தையில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் மாடல் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மே மாதத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் முற்றிலும் முடங்கியிருந்த ஆட்டோமொபைல் துறை மே மாதத்தில் மீண்டும் பணிகளை படிப்படியாக துவங்கின.

    அந்த வகையில் மே மாதத்தில் ஆட்டோமொபைல் விற்பனையும் துவங்கப்பட்டது. மே மாதத்தில் முதல் முறை விற்பனை துவங்கிய ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் அதே மாதத்தில் மட்டும் 3121 யூனிட்களை விற்பனை ஆனது. இது மே மாதத்தில் மற்ற நிறுவனங்களின் எஸ்யுவி விற்பனையை விட அதிகம் ஆகும்.

    கியா செல்டோஸ்

    கிரெட்டா மாடலுக்கு போட்டியாளரான கியா செல்டோஸ் மே மாதத்தில் 1611 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்நிலையில், ஜூன் மாத விற்பனையிலும் ஹூண்டாய் கிரெட்டா 7202 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதனால் ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருக்கிறது.

    இதே காலக்கட்டத்தில் கியா செல்டோஸ் 7114 யூனிட்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிக விற்பனை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதும், கியா செல்டோஸ் விற்பனை 342 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய மோட்டார்சைக்கிள் விவரங்கள் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய மோட்டார்சைக்கிளில் 199சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 வெர்ஷனில் இந்த என்ஜின் 17.8 பிஹெச்பி பவர், 17.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பிஎஸ்6 என்ஜின் ஆயில்-கூலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. 

     ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி பிஎஸ்6

    முந்தைய தகவல்களின் படி எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலில் ரீரூட் செய்யப்பட்ட எக்சாஸ்ட், பெரிய பேஷ் பிளேட் கொண்டிருக்கிறது. இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

    இந்தியாவில் ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட பிஎஸ்4 என்ஜின் கொண்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விலை ரூ. 1.06 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 5 ஆயிரம் வரை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 
    ஹோண்டா நிறுவனத்தின் 2020 சிட்டி மாடல் காரின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய சிட்டி செடான் மாடல் கார் இந்திய சந்தையில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

    புதிய ஹோண்டா சிட்டி மாடல் முன்பதிவு கட்டணம் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என்றும் விற்பனையகம் செல்வோர் ரூ. 21 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    ஹோண்டா சிட்டி
    புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

    காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டிரையம்ப் நிறுவனத்தின் 2020 டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் மாடலின் விநியோகம் இந்தியாவில் துவங்கியது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2020 டைகர் 900 மோட்டார்சைக்கிள் மாடலின் விநியோகத்தை துவங்கி இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஜூன் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 

    டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் - டைகர் 900 ஜிடி, டைகர் 900 ரேலி மற்றும் டைகர் 900 ரேலி ப்ரோ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. 
    டிரையம்ப் டைகர் 900
    இதன் என்ட்ரி லெவல் டைகர் 900 ஜிடி விலை ரூ. 13.70 லட்சம் என்றும், டைகர் 900 ரேலி மற்றும் டைகர் 900 ரேலி ப்ரோ மாடல்களின் விலை முறையே ரூ. 14.35 லட்சம் மற்றும் ரூ. 15.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 888சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் 2.7 லட்சம் வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜூன் மாதத்தில் 278097 யூனிட் வாகனங்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஜாஜ் நிறுவனம் 404624 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உள்நாட்டில் மொத்தம் 151189 யூனிட்களை (இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் சேர்த்து) விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 229225 யூனிட்களை விற்பனை செய்திபுக்கிறது. வெளிநாட்டு ஏற்றுமதியிலும் பஜாஜ் நிறுவனம் சரிவை சந்தித்து இருக்கிறது. 
     பஜாஜ் டாமினர் 250
    2020 ஜூன் மாதத்தில் 126908 யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 175399 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது. 

    ஒட்டுமொத்தமாக 255122 யூனிட் இருசக்கர வாகனங்களை ஜூன் 2020 மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 351291 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  
    ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய சிவிக் பிஎஸ்6 கார் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் ஹோண்டா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான சிவிக் காரை பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்து வருகிறது. 

    முந்தைய தகவல்களின்படி ஹோண்டா சிவிக் டீசல் வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் புதிய சிவிக் பிஎஸ் டீசல் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய டீசல் மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது.
    ஹோண்டா சிவிக்
    புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலில் மேம்பட்ட 1.6 லிட்டர் ஐ-டிடிஇசி நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்4 வெர்ஷனில் இந்த என்ஜின் 118 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருந்தது.

    பிஎஸ்6 வெர்ஷனிலும் இந்த என்ஜின் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. எனினும், டீசல் வெர்ஷனில் மற்ற வேரியண்ட்களை விட அதிக மைலேஜ் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
    ×