என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் எஃப்900 ட்வின் மற்றும் எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விரைவில் அறிமுகமாக இருப்பதாக டீசர் மூலம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ எஃப்900 ட்வின் மோட்டார்சைக்கிள் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இதே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2019 EICMA விழாவில் பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. 

    பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர்

    பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மாடலில் வழங்கப்பட்டுள்ள இன்லைன்-4 என்ஜின் 165 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ட்வீக் செய்யப்பட்ட கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில் ஆன்டி-ஹாப்பிங் கிளட்ச், என்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் புதிய பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளில் டைனமிக் இஎஸ்ஏ, ரைடிங் மோட்ஸ் ப்ரோ, ஏபிஎஸ் ப்ரோ, டிடிசி, ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் ப்ரோ மற்றும் ரெயின், ரோட், டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ என நான்கு டிரைவிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6.5 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்கள் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான கியா மோட்டார்ஸ் யுவிஒ கனெக்ட்டெட் தொழில்நுட்பத்தை தனது செல்டோஸ் மற்றும் கார்னிவல் மாடல்களில் வழங்கி வருகிறது.

    யுவிஒ கனெக்ட்டெட் தொழில்நுட்பம் சந்தையில் பல்வேறு பிரிவுகளில் 50 முதல்முறை அம்சங்களை கொண்டுள்ளது. இதில் புது அம்சமாக யுவிஒ வாய்ஸ் அசிஸ்ட் வேக்-அப் கமாண்ட் அம்சம் இருக்கிறது. இதை செயல்படுத்த ஹெலோ கியா என கூறினால் போதும்.

     கியா கார்னிவல்

    முதல் இரண்டு மாடல்களான செல்டோஸ் மற்றும் கார்னிவல் மாடல்களை தொடர்ந்து கியா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கும் கியா சொனெட் மாடலிலும் யுவிஒ கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் புதிய சொனெட் மாடல் அறிமுகமாகும் போதே இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஐஎம்டி) என்பது பயனர் கியர்களை மாற்ற மேனுவல் கிளட்ச் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை போக்குகிறது. 

    புதுவித டிரான்ஸ்மிஷன் தவிர கியா சொனெட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. 

    பியாஜியோ நிறுவனத்தின் 2020 வெஸ்பா ஃபேஸ்லிப்ட் மாடல்களுக்கான முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    பியாஜியோ இந்தியா நிறுவனம் 2020 வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் வெஸ்பா எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிப்ட் மாடல்களின் முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. 2020 வெஸ்பா ஃபேஸ்லிப்ட் மாடல்கள் விற்பனையகங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.

    இரு ஸ்கூட்டர் மாடல்களும் இந்தியாவில் இம்மாத முதல் பாதியில் அறிமுகம் செய்யப்படும் என பியாஜியோ இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டெய்கோ கிராஃபி தெரிவித்தார். விரைவில் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனையகங்களில் 2020 வெஸ்பா ஃபேஸ்லிப்ட் மாடல்கள் கிடைக்கும் என தெரிகிறது.

    வெஸ்பா ஸ்கூட்டர்

    2020 வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிப்ட் மாடல்கள் 125சிசி மற்றும் 150சிசி பிஎஸ்6 ரக என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய வெஸ்பா மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பியாஜியோ இந்தியா தெரிவித்து இருக்கிறது.

    வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் மாடல்களில் மோனோக்யூ ஸ்டீல் பாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்டி-லாக் பிரேக்கிஙஅ சிஸ்டம் அல்லது கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ட்வின் பாட் கேலிப்பர் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

    இரு ஸ்கூட்டர்களிலும் 5 ஸ்போக் பெட்டல் டிசைன் வீல் மற்றும் அகலமான டையர்கள், எல்இடி ஹெட்லைட், டே-டைம் ரன்னிங், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், பூட் லைட் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    சுசுகி நிறுவனத்தின் ஜிக்சர் 250, ஜிக்சர் எஸ்எஃப் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
     

    சுசுகி நிறுவனம் மே மாத வாக்கில் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எஃப் 250 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஜிக்சர் 250 விலை முறையே ரூ. 1.63 லட்சம் மற்றும் ஜிக்சர் எஸ்எஃப் 250 மாடல் விலை ரூ. 1.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. 

    இத்துடன் சுசுகி ஜிக்சர் எஸ்எஃப் 250 மோட்டோஜிபி எடிஷன் ரூ. 174900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் மூன்று ஜிக்சர் மாடல்களின் விலையும் ரூ. 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    ஜிக்சர் எஸ்எஃப் 250

    விலை உயர்வின் படி ஜிக்சர் 250 பிஎஸ்6 மாடல் புதிய விலை ரூ. 165441 என்றும் ஜிக்சர் எஸ்எஃப் 250 பிஎஸ்6 மாடல் புதிய விலை ரூ. 176140 என்றும் ஜிக்சர் எஸ்எஃப் 250 மோட்டோஜிபி எடிஷன் புதிய விலை ரூ. 176941 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் கார் விற்பனையகம் வந்து இருப்பதை வெளிப்படுத்தும் வீடியோ லீக் ஆகி உள்ளது.
     

    ஹூண்டாய் நிறுவனம் விரைவில் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், புதிய கார் ஜூலை 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

    வெளியீட்டிற்கு முன் புதிய கார் விற்பனையகம் வந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. காரை சுற்றி எடுக்கப்பட்டு இருக்கும் வீடியோவில் காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அப்டேட்களை தெளிவாக காட்டுகிறது.

    ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்

    புதிய மேம்பட்ட மாடல் டீசல் வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும், சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய கார் வெளிப்புறம் கேஸ்கேடிங் கிரில், புதுவடிவமைப்பு கொண்ட ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகின்றன.

    காரின் உள்புறம் புது டேஷ்போர்டு வடிவமைப்பு, ஃபிரீ-ஸ்டேன்டிங் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் புளுலின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் கார் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் மீண்டும் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்பை படங்களில் காரின் வெளிப்புற வடிவமைப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி காரின் வெளிப்புறம் கிளாம்ஷெல் பொனெட், பெரிய வீல் ஆர்ச்கள், குறைந்த உயரம் கொண்டிருக்கிறது. முந்தைய ஸ்பை படங்களில் புதிய கைகர் மாடலில் இரண்டடுக்கு ஹெட்லேம்ப் செட்டப் மற்றும் மூன்று ப்ரோஜக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்தது.  

     ரெனால்ட் கைகர் ஸ்பை படம்

    காரின் உள்புறம் ரெனால்ட் டிரைபர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் சில உயர்ரக பொருட்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாடல் ஏஎம்டி மற்றும் சிவிடி போன்ற அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆடி நிறுவனத்தின் 2021 கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஆடி நிறுவனம் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் கியூ4 இ டிரான் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. தற்சமயம் கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    புதிய கியூ4 உற்பத்தி விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எனினும், இதன் உற்பத்தி அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஸ்போர்ட்பேக் மாடல் வழக்கமான கியூ4 இ டிரான் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் ஸ்வூப்பிங் கூப் ரூஃப்லைன் வழங்கப்படுகிறது. இது காரின் பின்புறம் நீண்டு பெரிய ஸ்பாயிலருடன் இணைகிறது. மற்றப்படி டெயில் லைட்கள் வழக்கமான கியூ4 மாடலில் உள்ளதை போன்றே இருக்கிறது. 

    2021 ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட்

    புதிய காரின் பின்புற பம்ப்பர் மற்றும் டிஃப்யூசர் பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் வீல் ஆர்ச் மற்றும் 22 இன்ச் வீல்கள் இந்த காரின் முக்கிய அம்சமாக இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. காரின் ஒட்டுமொத்த வடிவம் பார்க்க முந்தைய கியூ4 கான்செப்ட் போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், கியூ4 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இவை எல்இடி தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. புதிய ஆடி காரில் பின்புறம் மற்றும் முன்புறம் என இரு மோட்டார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவை முறையே 204 பிஹெச்பி பவர், 310 என்எம் டார்க் செயல்திறன், 102 பிஹெச்பி, 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் இதன் பேட்டரிகளை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் தான் ஆகும் என கூறப்படுகிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் பிளஸ் மாடல் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடல் இந்தியாவில் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. எம்ஜி ஹெக்டார் பிளஸ் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    இதன் டர்போ பெட்ரோல் வெர்ஷன் டிசிடி யூனிட் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் வெர்ஷன்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.  

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடலின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.
    ஹோண்டா நிறுவனத்தின் எக்ஸ் பிளேடு பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனம் இந்திாவில் பிஎஸ்6 ரக எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 105325 (சிங்கிள் டிஸ்க்) என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது. 

    புதிய ஹோண்டா எக்ஸ் பிளேடு பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் சிங்கிள் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களிலும் பியல் ஸ்பாட்டன் ரெட், பியல் இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    ஹோண்டா எக்ஸ் பிளேடு பிஎஸ்6

    அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், கம்பீரமாக டேன்க் டிசைன், டூயல் அவுட்லெட் மஃப்ளர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் லின்க் டைப் கியர் ஷிஃப்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் கிராப் ரெயில், அழகிய வீல் ஸ்டிரைப்கள், அன்டர் கவுல், முன்புறம் ஃபோர்க் கவர் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 ரக 160சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மற்றும் ஹோண்டா இகோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் செயல்திறன் பற்றிய விவரங்களை ஹோண்டா இதுவரை வழங்கவில்லை.
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இரண்டு பிஎஸ்6 கார் மாடல்கள் இந்தியாவில் விநியோகம் செய்யப்படுகின்றன.


    லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிப்ட் மற்றும் புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல்களை விநியோகம் செய்ய துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    இரு மாடல்களிலும் பெட்ரோல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இவை எஸ் மற்றும் ஆர் டைனமிக் எஸ்இ என இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட டர்போ பெட்ரோல் யூனிட் ஆகும்.

     லேண்ட் ரோவர்

    இந்த என்ஜின் 250 பிஹெச்பி பவர், 365 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் வரும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் அதிக மைலேஜ் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    பிஎஸ்6 பெட்ரோல் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ் மாடல் விலை ரூ. 59.98 லட்சம் என்றும் ஆர் டைனமிக் எஸ்இ விலை ரூ. 63.32 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்6 பெட்ரோல் ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 58 லட்சம் என்றும் டாப் எண்ட் விலை ரூ. 61.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் இரண்டு கார் மாடல்களின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் கேம்ரி ஹைப்ரிட் மற்றும் வெல்ஃபயர் மாடல் கார்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. முன்னதாக சில கார் மற்றும் எஸ்யுவி மாடல்களின் விலையை டொயோட்டா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய விலை உயர்வின்படி கேம்ரி ஹைப்ரிட் விலை ரூ. 1.14 லட்சம் விலை உயர்த்தப்பட்டு இதன் விலை ரூ. 39.02 லட்சம் என மாற்றப்பட்டு இருக்கிறது. இதேபோன்று ஆடம்பர எம்பிவி மாடலான வெல்ஃபயர் விலை ரூ. 4 லட்சம் வரை உயர்த்தப்பட்டு ரூ. 83.50 லட்சம் என மாற்றப்பட்டுள்ளது. 

     டொயோட்டா கேம்ரி

    முன்னதாக டொயோட்டா யாரிஸ் கார் 14 இல் இருந்து 11 வேரியண்ட்களாக குறைக்கப்பட்டது. இதனால் யாரிஸ் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்ட மாடல் விற்பனைக்கு கிடைக்கவில்லை. இந்த கார் விலை ரூ. 1.68 லட்சம் வரை உயர்த்தப்பட்டது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் அதிகம் எதிர்பார்க்கப்படும் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் முன்கூட்டியே அறிமுகமாக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    வெளியீட்டுக்கு முன் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    ஹூண்டாய் டக்சன்

    புதிய மேம்பட்ட மாடல் டீசல் வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும், சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய கார் வெளிப்புறம் கேஸ்கேடிங் கிரில், புதுவடிவமைப்பு கொண்ட ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகின்றன.

    காரின் உள்புறம் புது டேஷ்போர்டு வடிவமைப்பு, ஃபிரீ-ஸ்டேன்டிங் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் புளுலின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலில் பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 149 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ×