search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2021 ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட்
    X
    2021 ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட்

    2021 ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் அறிமுகம்

    ஆடி நிறுவனத்தின் 2021 கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஆடி நிறுவனம் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் கியூ4 இ டிரான் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. தற்சமயம் கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    புதிய கியூ4 உற்பத்தி விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எனினும், இதன் உற்பத்தி அடுத்த ஆண்டு வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஸ்போர்ட்பேக் மாடல் வழக்கமான கியூ4 இ டிரான் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் ஸ்வூப்பிங் கூப் ரூஃப்லைன் வழங்கப்படுகிறது. இது காரின் பின்புறம் நீண்டு பெரிய ஸ்பாயிலருடன் இணைகிறது. மற்றப்படி டெயில் லைட்கள் வழக்கமான கியூ4 மாடலில் உள்ளதை போன்றே இருக்கிறது. 

    2021 ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட்

    புதிய காரின் பின்புற பம்ப்பர் மற்றும் டிஃப்யூசர் பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் வீல் ஆர்ச் மற்றும் 22 இன்ச் வீல்கள் இந்த காரின் முக்கிய அம்சமாக இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. காரின் ஒட்டுமொத்த வடிவம் பார்க்க முந்தைய கியூ4 கான்செப்ட் போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், கியூ4 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இவை எல்இடி தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. புதிய ஆடி காரில் பின்புறம் மற்றும் முன்புறம் என இரு மோட்டார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவை முறையே 204 பிஹெச்பி பவர், 310 என்எம் டார்க் செயல்திறன், 102 பிஹெச்பி, 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    ஆடி கியூ4 ஸ்போர்ட்பேக் இ டிரான் கான்செப்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் இதன் பேட்டரிகளை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் தான் ஆகும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×