search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூண்டாய் டக்சன்
    X
    ஹூண்டாய் டக்சன்

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் வெளியீட்டு விவரம்

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் அதிகம் எதிர்பார்க்கப்படும் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் முன்கூட்டியே அறிமுகமாக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    வெளியீட்டுக்கு முன் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    ஹூண்டாய் டக்சன்

    புதிய மேம்பட்ட மாடல் டீசல் வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும், சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய கார் வெளிப்புறம் கேஸ்கேடிங் கிரில், புதுவடிவமைப்பு கொண்ட ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகின்றன.

    காரின் உள்புறம் புது டேஷ்போர்டு வடிவமைப்பு, ஃபிரீ-ஸ்டேன்டிங் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் புளுலின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலில் பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 149 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×