என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் மாடல் அதிக வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி உள்ளது. இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடல் விலை ரூ. 7.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்கோடா ரேபிட் ரைட் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருப்பதால் முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளதாக ஸ்கோடா நிறுவனம் அறிவித்து உள்ளது. புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    ஸ்கோடா ரேபிட் ரைடர்

    ஸ்கோடா ரேபிட் ரைடர் பிஎஸ்6 வெர்ஷன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர், டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடலில் 2 டின் மியூசிக் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, டெலிஸ்கோபிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ல்டீரிங், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
    கவாசகி நிறுவனத்தின் இசட்எக்ஸ்-25ஆர் மோட்டார்சைக்கிள் இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    கவாசகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நின்ஜா இசட்எக்ஸ்-25ஆர் மோட்டார்சைக்கிள் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் ஸ்பெஷல் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை இந்திய மதிப்பில் முறையே ரூ. 5,02,163 மற்றும் ரூ. 5,90,565 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கவாசகி நின்ஜா இசட்எக்ஸ்-25ஆர் ஸ்டான்டர்டு வேரியண்ட் மெட்டாலிக் ஸ்பார்க் நிறத்திலும், ஸ்பெஷல் எடிஷன் மாடல் லைம்கிரீன்/எபோனி, மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக்/பியல் ஃபிளாட் ஸ்டார்டஸ்ட் வைட் மற்றும் கேண்டி பிளாஸ்மா புளூ/ மெட்டாலிக் ஸ்பார்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

     கவாசகி நின்ஜா இசட்எக்ஸ்-25ஆர்

    டிரெலிஸ் ஃபிரேம், ஃபுல் ஃபேரிங் வடிவமைப்பு, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ட்வின் பாட் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் மற்றும் ஸ்ப்லிட் சீட் சேடிள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய நின்ஜா மோட்டார்சைக்கிளில் 249சிசி, இன்லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 49.3 பிஹெச்பி பவர், 22.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்க்பட்டுள்ளது.
    மசராட்டி நிறுவனத்தின் எம்சி20 வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதுபற்றி தொடர்ந்து பார்ப்போம்.
     

    மசராட்டி நிறுவனம் தனது எம்ச20 மாடலை செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எம்சி20 மாடலில் நெட்டுனோ என்ஜின் வழங்கப்படுகிறது. இது 3.0 லிட்டர், ட்வின் டர்போ வி6 யூனிட் ஆகும். இந்த என்ஜின் 630 ஹெச்பி பவர் மற்றும் 730 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    புதிய பவர் யூனிட் கொண்டு வெளியாகும் முதல் மாடலாக எம்சி20 இருக்கிறது. இதே என்ஜின் எதிர்கால மாடல்களிலும் வழங்கப்படும் என மசராட்டி தெரிவித்து இருக்கிறது.

    நெட்டுனோ என்ஜின்

    இந்த கார் என்ஜினை கடந்த ஆண்டு நவம்பர் முதல் மசராட்டி சோதனை செய்து வருகிறது. இந்த யூனிட் ஆல்ஃபா ரோமியோ 4சி சார்ந்து உருவாகி இருக்கிறது. இந்த என்ஜின் முழுக்கமுழுக்க மசராட்டி நிறுவனத்தான் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    சர்வதேச சந்தையில் மசராட்டி எம்சி20 அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. புதிய எம்சி20 மூலம் மசராட்டி நிறுவனம் மீண்டும் சர்வதேச ரேசிங்கில் களம் இறங்க இருக்கிறது.
    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாம் தலைமுறை குர்கா எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்த புதிய குர்கா மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி உள்ளது.  தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையில் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும், புதிய மாடல் 2020 தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    ஃபோர்ஸ் ஆஃப் ரோடு எஸ்.யு.வி. மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2020 குர்கா மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஃபோர்ஸ் குர்கா

    இதில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் குர்காவின் பாரம்பரிய ரக்கட் வடிவமைப்பை பரைசாற்றும் விதத்தில் அமைந்து இருக்கிறது. இத்துடன் இதில் புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் 245/70 டையர்கள் வழங்கப்படுகின்றன. இதன் வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.

    காரின் உள்புறம் மேம்பட்ட அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், MID டிஸ்ப்ளே, இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்பட்டு, ஏ.சி. வென்ட்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கின்றன.
    கார்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் மாடல்களாக மாறினால் உலகில் ஏற்படும் சுவாரஸ்ய மாற்றங்கள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


    உலகில் போக்குவரத்து வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை பயன்படுத்தும் வழக்கம் பலஆண்டுகளாக நீடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் தொடர்ந்து அதிக காலக்கட்டத்திற்கு பயன்படுத்த முடியாது. இதனால் பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் திறன் கொண்ட வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.

    சமீப காலக்கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு மற்றும் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துக் கொண்டு வருகிறது. எனினும், பெட்ரோல், டீசல் வாகனங்களே ஆட்டோமொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

    இவி சார்ஜிங்

    இந்நிலையில், கார்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் மாடல்களாக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி பல்வேறு நிறுவனங்கள் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 

    அவ்வாறு ஆய்வுகளின் அடிப்படையில் வெளியாகி இருக்கும் தகவல்களில், உலகில் எலெக்ட்ரிக் கார்கள் மட்டும் பயன்படுத்தும் போது ஆட்டோமொபைல் சந்தையில் 99 சதவீத கார்கள் முற்றிலும் மாறிவிடும். உலகில் மின்சாரத்திற்கான தேவை 21 சதவீதம் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் உலகில் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு 7 சதவீதம் வரை குறையும் என தெரியவந்துள்ளது.
    லம்போர்கினி நிறுவனத்தின் சியன் ரோட்ஸ்டர் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    லம்போர்கினி சியன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் உலகம் முழுக்க சுமார் 19 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ஒவ்வொரு யூனிட்டும் ஆட் பெர்சோனம் துறை கஸ்டமைஸ் செய்ய இருக்கிறது.

    புதிய லம்போர்கினி சியன் ரோட்ஸ்டர் மாடலில் 6.5 லிட்டர் வி12 என்ஜின் மற்றும் 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை 808 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இதனால் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

     லம்போர்கினி சியன் ரோட்ஸ்டர்

    லம்போர்கினி சியன் ரோட்ஸ்டர் மாடல் வெளிப்புறம் புளு யுரேனஸ் நிறத்திலும், உள்புறம் வைட் மற்றும் புளு குலௌகோ நிறம் கொண்டிருக்கிறது. மேலும் ஏர் வென்ட்கள் 3டி முறையில் அச்சிடப்படுகிறது. 
    ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்தியாவில் ரூ. 20.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் என்ஜின் ஆப்ஷன் சிவிக் விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    ஹோண்டா சிவிக்

    புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல்  யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. தோற்றம் மற்றும் உள்புறத்தில் புதிய மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 

    இந்திய சந்தையில் ஹோண்டா சிவிக் மாடல் ஹூண்டாய் எலான்ட்ரா, டாடா ஹேரியர், எம்ஜி ஹெக்டார், ஜீப் காம்பஸ் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கோ ஆக்டேவியா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    பெனலி நிறுவனத்தின் புதிய இம்பீரியல் 400 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    பெனலி நிறுவனத்தின் பிஎஸ்6 இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செயய்ப்பட்டு இருக்கிறது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.

    புதிய மோட்டார்சைக்கிள் முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் முன்பதிவு கட்டணம் ரூ. 6 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு மூன்று ஆண்டுகள் வரம்பற்ற கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்பட்டு உள்ளது.

    பெனலி இம்பீரியல் 400 பிஎஸ்6

    இம்பீரியரல் 400 பிஎஸ்6 மாடலில் 374சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 29 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஸ்ப்லிட் சீட், 19-18 இன்ச் ஸ்போக் வீல் காம்பினேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    டாடா நிறுவன கார் மாடல்களுக்கு கவர்ச்சிகர சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான், டியாகோ மற்றும் அல்ட்ரோஸ் மாடல்களை வாங்குவோருக்கு சிறப்பு நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. 

    ஜீரோ டவுன்பேமண்ட் துவங்கி, ஆறு மாத தவணை விடுமுறை மற்றும் ஆன்-ரோட் விலையில் 100 சதவீத நிதி சலுகை மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் நாடு முழுக்க அனைத்து டாடா மோட்டார்ஸ் விற்பனையகங்களில் வழங்கப்படுகிறது. 

    இதுதவிர மாத தவணைகளுக்கு மிக குறைந்த வட்டி வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் டாடா நிறுவனம் தனது டியாகோ, அல்ட்ரோஸ், நெக்சான் மற்றும் ஹேரியர் மாடல்களின் பிஎஸ்6 வெர்ஷனை அறிமுகம் செய்தது.  
    ஹோண்டா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை துவங்கி உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது வலைதளத்தில் ஆன்லைன் புக்கிங் சேவையை துவங்கி உள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  

    கொரோனா வைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக ஆன்லைனிலேயே ஹோண்டா இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.

    ஹோண்டா டியோ

    வாடிக்கையாளர்கள் விரும்பும் வாகனத்தை தேர்வு செய்து பின், நிறம், வேரியண்ட் மற்றும் டெலிவரி எடுத்துக் கொள்ள விரும்பும் விற்பனையகம் உள்ளிட்டவற்றை பதிவிட்டால் புதிய ஹோண்டா வாகனத்தை பெற்று கொள்ள முடியும். 

    ஹோண்டா அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ஆன்லைன் முன்பதிவு செய்த பின் வாடிக்கையாளர்கள் முடிவை மாற்றிக் கொண்டு முன்பதிவை திரும்ப பெற நினைத்தால், முன்பதிவு தொகை திரும்ப வழங்கப்படுவதாக ஹோண்டா தெரிவித்து இருக்கிறது. 
    டுகாட்டி நிறுவனத்தின் புதிய பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான டுகாட்டி, தனது பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.

    புதிய டுகாட்டி பனிகேல் வி2 மாடல் முன்பதிவு கட்டணம்  ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. டுகாட்டி பனிகேல் வி2 மாடல் 959 பனிகேல் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது. இந்தியாவில் டுகாட்டி 959 பனிகேல் விலை ரூ. 15.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    டுகாட்டி பனிகேல் வி2

    டுகாட்டி பனிகேல் வி2 மாடலின் முன்புற ஃபேரிங் , பக்கவாட்டு ஸ்விங் ஆம் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வடிவமைப்பு அம்சங்களும் டுகாட்டி பனிகேல் வி4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஏர் டேம், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த மோட்டார்சைக்கிளில் 955சிசி சூப்பர்குவாட்ரோ எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
     

    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    புதிய ஸ்பை படங்களில் வேகன்ஆர் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. வேகன்ஆர் எலெக்ட்ரிக் மாடல் எக்ஸ்எல்5 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் வர்த்தக பயன்பாட்டிற்கான மாடலும் வெளியாகும் என தெரிகிறது.

     வேகன்ஆர் எலெக்ட்ரிக் ஸ்பை படம்

    ஸ்பை படங்களின்படி புதிய கார் 15 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை இந்த கார் முற்றிலும் புதிய முன்புறம் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லேம் டிசைன், புதிய கிரில், டேடைம் ரன்னிங் லைட்கள், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள் பம்ப்பரின் மேல் பொருத்தப்படுகிறது. 

    காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்பிளே கனெக்டிவிட்டி, புதிய ஸ்டீரிங் வீல் டிசைன், கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் டூயல் டோன் இன்டீரியர் வழங்கப்படுகிறது.
    ×