என் மலர்

  நீங்கள் தேடியது "WagonR Electric"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் சோதனை துவங்கியுள்ளது. இந்த காரின் வெளியீடு மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #maruti  மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை 2020-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

  அந்த வகையில் மாருதி நிறுவனம் தனது ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் வாகனங்களின் சோதனையை துவங்கி இருக்கிறது. ப்ரோடோடைப் இ.வி. மாடல்கள் மாருதி நிறுவனத்தின் குர்கிராம் உற்பத்தி ஆலையில் இருந்து சோதனை கோடியசைத்து துவங்கப்பட்டது.

  முதற்கட்டமாக ஜப்பானில் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் உருவாக்கிய 50 ப்ரோடோடைப் வாகனங்களை மாருதி சுசுகி சோதனை செய்கிறது. ப்ரோடோடைப் மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தின் குர்கிராம் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவை அந்நிறுவனத்தின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.  ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் வாகனங்கள் 2018 சுசுகி வேகன்ஆர் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் 2019-ம் ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் மாடல் முன்னதாக புது டெல்லியில் நடைபெற்ற MOVE கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

  மாருதி சுசுகி நிறுவனம் ப்ரோடோடைப் எலெக்ட்ரிக் வாகனங்களை வெவ்வேறு வேரியன்ட்களில் வித்தியாசமான வெப்பநிலைகளில் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. சோதனையில் சேகரிக்கப்படும் தகவல்களை கொண்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

  மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் வேரியன்ட் 72-வோல்ட் சிஸ்டம் மற்றும் 10-25 கிலோவாட் பேட்டரி மூலம் இயங்குகிறது. ப்ரோடோடைப் மாடலும் மாருதி நிறுவனத்தின் HEARTECT பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது.
  ×