என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மஸ்டாங் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதிய ஃபோர்டு மஸ்டாங் மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விற்பனையில் வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் அல்லது ஜிடி மாடலாக ஃபோர்டு மஸ்டாங் இருக்கிறது. தலைசிறந்த செயல்திறன், சவுகரியமான கேபின் என பல்வேறு காரணங்களால் இந்த கார் விற்பனையில் கணிசமான வரவேற்பு பெற்று இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கிய நிலையில், இதுவரை இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் 450 மஸ்டாங் மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி ஃபோர்டு மஸ்டாங் மாடல் சர்வதேச சந்தையிலும் அதிக பிரபலமாகி இருக்கிறது. ஐரோப்பிய சந்தையில் மஸ்டாங் மாடல் போர்ஷ் மாடல்களை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
இந்தியா வர இருக்கும் புதிய ஃபோர்டு மஸ்டாங் மாடலில் 2.3 லிட்டர் இகோபூஸ்ட் 4 சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 310 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இதுதவிர 526 ஹெச்பி திறன் வழங்கும் ஷெல்பி ஜிடி350 வி8 என்ஜின் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹெக்டார் பிளஸ் ரூ. 13.49 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் டாப் எண்ட் ஹெக்டார் பிளஸ் ஷார்ப் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் ரூ. 18.54 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள விலை அறிமுக சலுகையின் பேரில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை ஆகஸ்ட் 13 ஆம் தேதி அதிகரிக்கப்படுகிறது.

புதிய ஹெக்டார் பிளஸ் ஆறு பேர் பயணக்கக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது. விரைவில் இதே மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் மஹிந்திரா எக்ஸ்யுவி500, டொயோட்டா இன்னோவா க்ரிஸா மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
டுகாட்டி நிறுவனத்தின் புதிய பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டுகாட்டி நிறுவனத்தின் பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் துவங்கி உள்ளது. புதிய பனிகேல் வி2 மாடலின் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், விரைவில் இது அறிமுகமாகும் என தெரிகிறது.

டுகாட்டி பனிகேல் வி2 மாடலின் முன்புற ஃபேரிங், பக்கவாட்டு ஸ்விங் ஆம் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வடிவமைப்பு அம்சங்களும் டுகாட்டி பனிகேல் வி4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஏர் டேம், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மோட்டார்சைக்கிளில் 955சிசி சூப்பர்குவாட்ரோ எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடல்கள் பிரிவில் இந்த கார் தான் முன்னணியில் உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் ஜூன் 2020 மாதத்தில் மட்டும் 6972 வேகன் ஆர் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது ஜூன் மாதத்தில் சந்தையின் ஹேட்ச்பேக் மாடல்கள் விற்பனையில் வேகன் ஆர் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது.
சந்தையில் நிலவும் சாதகமற்ற சூழ்நிலையில் காம்பேக்ட் ஹேட்ச்பேக் பிரிவு விற்பனை வேகமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் 25962 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதில் மாருதி சுசுகி வேகன் ஆர் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து மாருதி சுசுகி செலரியோ மற்றும் டாடா டியாகோ மாடல்கள் முறை இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. இரு மாடல்களும் முறையே 4145 மற்றும் 4069 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இதே மாதம் கடந்த ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் 10228 வேகன் ஆர் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. வேகன் ஆர் மாடல் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.0 லிட்டர் 67 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன், சின்ஜி வேரியண்ட் 58 பிஹெச்பி, 78 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதில் சிஎன்ஜி ஆப்ஷன் 1.0 லிட்டர் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் தனது ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டுள்ளது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் ஜூனை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பிரீமியம் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
புதிய டீசரில் ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும் என தெரியவந்துள்ளது. உயர்ரக சக்திவாய்ந்த ஏ7 வெர்ஷனில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவை 591 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய ஆடிஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், மேம்பட்ட கம்பீர தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர், 21 இன்ச் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்கள், டிஃப்யூசர் மற்றும் இரண்டு எக்சாஸ்ட்டிப்கள் பொருத்தப்பட்ட பின்புற பம்ப்பர் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் அறிமுகமானதும் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியா வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
எலான் மஸ்க் டெஸ்லா மாடல் 3 காரினை மார்ச் 31, 2016 இல் அறிமுகம் செய்தார். ஜூலை 2017 வாக்கில் மாடல் 3 காரை வாங்க சுமார் ஐந்து லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் இதில் சுமார் 2.32 லட்சம் பேர் கார் அறிமுகமான முதல் இரண்டு நாட்களில் முன்பதிவு செய்தனர்.
அன்று முதல் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 இந்திய வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதன் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி டெஸ்லா மாடல் 3 இந்திய வெளியீடு நடைபெறலாம் என்றவாக்கில் தகவல் வெளியாகி உள்ளது.

ட்விட்டரில் டெஸ்லாவுக்கு ட்வீட் செய்து மாடல் 3 எப்போது இந்தியா வரும் என அரவிந்த் குப்தா கேள்வி எழுப்பினார். இவர் மாடல் 3 காரை நான்கு ஆண்டுகளுக்கு முன் முன்பதிவு செய்திருந்தார். இவரது கேள்விக்கு பதில் அளித்த டெஸ்லா தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், மன்னிக்கவும், அனேகமாக விரைவில் அது நடைபெறலாம் என தெரிவித்தார்.
அந்த வகையில் டெஸ்லா மாடல் 3 இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். தற்சமயம் டெஸ்லா நிறுவனம் மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் மாடல் வை என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வீடியோ இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் ரூ. 1000 உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 95891, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் விலை உயர்த்தப்பட்டு இருப்பது இரண்டாவது முறை ஆகும். ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 93677 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின் மே மாதத்தில் இதன் விலை உயர்த்தப்பட்டதால் ரூ. 94893 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

தற்சமயம் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டாலும், இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலாக இது இருக்கிறது. இந்தியாவில் பஜாஜ் அவெஞ்சர் மோட்டார்சைக்கிள் சுசுகி இன்ட்ரூடர் மாடலுக்கு போட்டியாக இருக்கிறது.
பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பிஎஸ்6 மாடலில் 160சிசி, ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8 பிஹெச்பி பவர், 13.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
அவெஞ்சர் தவிர பல்சர் 150, பல்சர் 200என்எஸ், பல்சர் 180 எஃப், சிடி100, சிடி110 மற்றும் பிளாட்டினா 100 போன்ற மாடல்களின் விலையையும் பஜாஜ் ஆட்டோ சமீபத்தில் உயர்த்தியது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஐஎக்ஸ்3 எலெக்ட்ரிக் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புதிய ஐஎக்ஸ்3 எலெக்ட்ரிக் மாடல் ஜூலை 14 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் உற்பத்தி சீனாவில் கடந்த மாதம் துவங்கியது. சீனாவில் இந்த கார் ஐநெக்ஸ்ட் எனும் பிராண்டில் அறிமுகமாக இருக்கிறது.
புதிய ஐஎக்ஸ்3 பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், புதிய ஐஎக்ஸ்3 பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இடிரைவ் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் என தெரிகிறது. புதிய தலைமுறை மாடலில் எலெக்ட்ரிக் என்ஜின், பவர் எலெக்டிரானிக்ஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவை காரின் மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 440 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பவர்டிரெயின் புதிய ஐ4 எலெக்ட்ரிக் மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 கார் டடோங்கில் உள்ள பிஎம்டபிள்யூ பிரிலியன்ஸ் ஆட்டோமோட்டிவ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய கார் ப்ரோடோடைப் மாடல்களுக்கான சோதனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 150 பிஎஸ்6 மாடல்களின் விலையை இந்திய சந்தையில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் வேரியண்ட்கள் தற்சமயம் ரூ. 999 விலை அதிகமாகி இருக்கிறது. பல்சர் நியோன், சிங்கிள் டிஸ்க் மற்றும் ட்வின் டிஸ்க் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

விலை உயர்வின் படி பஜாஜ் பல்சர் நியோன் மாடல் ரூ. 999 விலை உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 91,386 என்றும் சிங்கள் டிஸ்க் மாடல் ரூ. 998 உயர்த்தப்பட்டு ரூ. 95,430 என்றும் ட்வின் டிஸ்க் மாடல் விலை ரூ. 999 உயர்த்தப்பட்டு ரூ. 99,565 என மாறி இருக்கிறது. இந்தியாவில் பல்சர் மாடல்களின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் பல்சர் 150 மாடலில் 150சிசி, சிங்கிள் சிலிண்டர், SOHC, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 13.8 பிஹெச்பி பவர், 13.25 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்குகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா க்ரிஸ்டா மாடலின் சிஎன்ஜி வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில் சிங்கிள் யூனிட் கொண்டிருக்கிறது.
ஸ்பை படங்களில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி மாடல் பெட்ரோல் சார்ந்த என்ஜின் வழங்கப்படுகிறது. பின்புற விண்ட்ஷீல்டில் சிஎன்ஜி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் பயோ-ஃபியூயல் மாடல் ஃபிலீட் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

இவை தவிர இந்த காரின் தோற்றத்தில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 164 பிஹெச்பி மற்றும் 245 என்எம் டார்க் செயல்திறன், 148 பிஹெச்பி மற்றும் 343 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஜீப் இந்தியா நிறுவனத்தின் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படுகிறது.
ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் புதிய பம்ப்பர் மற்றும் எல்இடி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய எல்இடி சிக்னேச்சர் டெயில் லைட்கள் மற்றும் மேம்பட்ட பின்புற பம்ப்பர் வழங்கப்படுகிறது.

காரின் உள்புறத்தை பொருத்தவரை யுகனெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய காம்பஸ் ஃபேஸ்லிப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் பிஎஸ்6 விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்படும் என தெரிகிறது. முந்தைய தகவல்களில் புதிய ஜீப் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுக்கு மாற்றாக 1.3 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் டிபிஎக்ஸ் மாடல் உற்பத்தி அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது.
ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் உற்பத்தி துவங்கியது. புதிய டிபிஎக்ஸ் முதல் மாடல் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியே எடுத்து வரப்பட்டது. செயின்ட் ஆத்தன் உற்பத்தி ஆலையில் முதலீடு செய்துள்ளதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்த நிலையில், புதிய கார் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜின் 542 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.3 நொடிகளில் எட்டிவிடும்.
ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் அதிகபட்சமாக மணிக்கு 291 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதுவரை இந்த கார் வாங்க சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர்.






