search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக்
    X
    ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக்

    ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் புதிய டீசர் வெளியீடு

    ஆடி நிறுவனத்தின் ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    ஆடி இந்தியா நிறுவனம் தனது ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டுள்ளது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் ஜூனை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பிரீமியம் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. 

    புதிய டீசரில் ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும் என தெரியவந்துள்ளது. உயர்ரக சக்திவாய்ந்த ஏ7 வெர்ஷனில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக்

    இவை 591 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 

    புதிய ஆடிஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், மேம்பட்ட கம்பீர தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர், 21 இன்ச் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்கள், டிஃப்யூசர் மற்றும் இரண்டு எக்சாஸ்ட்டிப்கள் பொருத்தப்பட்ட பின்புற பம்ப்பர் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் அறிமுகமானதும் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    Next Story
    ×