என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மாருதி சுசுகி நிறுவனம் 1.34 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ மற்றும் வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. இரு மாடல்களிலும் என்ஜினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பில் கோளாறு இருப்பது பற்றி ஆய்வு செய்ய திரும்ப அழைக்கப்படுகிறது.

நவம்பர் 15, 2018 முதல் அக்டோபர் 15, 2019 வரையிலான காலக்கட்டத்தில் உறப்த்தி செய்யப்பட்ட வேகன் ஆர் 1.0 லிட்டர் மாடல் மற்றும் ஜனவரி 8, 2019 முதல் நவம்பர் 4, 2019 வரை உற்பத்தி செய்யப்பட்ட பலேனோ பெட்ரோல் மாடல்கள் திரும்ப பெறப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மாருதி சுசுகி நிறுவனம் 134885 யூனிட்களை திருபம் பெறுகிறது.
வேகன் ஆர் மாடல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது மாடலிலும் இந்த கோளாறு உள்ளதா என்பதை மாருதி சுசுகி அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று அறிந்து கொள்ள முடியும். பலேனோ மாடல் பயன்படுத்துவோர் நெக்சா வலைதளம் சென்று மாடலில் கோளாறு உள்ளதா என அறிந்து கொள்ளலாம்.
நிசான் நிறுவனத்தின் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் நிறுவனத்தின் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யுவி ப்ரோடக்ஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எஸ்யுவி மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய நிசான் ஆரியா மாடல் ஒற்றை மோட்டார் ரியர்-வீல் டிரைவ் மற்றும் ட்வின் மோட்டார் 4-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் முறையே 63 கிலோவாட் மற்றும் 87 கிலோவாட் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இதன் 63 கிலோவாட் பேட்டரி கொண்ட ஒற்றை மோட்டார் மாடல் 218 பிஹெச்பி பவர் மற்றும் 360 கிலோமீட்டர் வரை செல்லும்.

87 கிலோவாட் பேட்டரி கொண்ட மாடல் 242 பிஹெச்பி பவர் மற்றும் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரண்டு மாடல்களும் 300 என்எம் டார்க் வழங்குகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.5 நொடிகளில் எட்டிவிடும். நிசான் ஆரியா மாடல் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய நிசான் ஆரியா மாடல் சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் டெஸ்லா மாடல் வை மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஐடி4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ஹோண்டா சிட்டி மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய 2020 ஹோண்டா சிட்டி மாடல் விலை ரூ. 10.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி ஐந்து வித நிறங்களில், இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 119 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 98 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய 2020 ஹோண்டா சிட்டி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.64 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி கார் ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், டொயோட்டா யாரிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் பிஎஸ்6 ரக எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1,11,790 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடல் விலை ரூ. 1.06 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 மாடலில் 199சிசி, சிங்கிள் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 17.8 பிஹெச்பி பவர், 16.45 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. முந்தைய பிஎஸ்4 என்ஜின் 18.1 பிஹெச்பி, 17.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது.

மெக்கானிக்கல் அம்சங்களில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், ப்ளூடூத் சார்ந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டால் செட் முன்புற ஃபென்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வைட், மேட் கிரீன், மேட் கிரே, ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பேந்தர் பிளாக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் விலை ரூ. 7.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட் கேன்டி வைட், கார்பன் ஸ்டீல், பிரிலியண்ட் சில்வர் மற்றும் டாஃபி பிரவுன் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. ஸ்கோடா ரேபிட் பிளஸ் வேரியண்ட்டில் பிளாக்டு-அவுட் கிரில் மற்றும் பி-பில்லர்கள், லிப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் காரின் உள்புறம் 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஸ்மார்ட்லின்க் கனெக்டிவிட்டி, டூயல் எபோனி-சேண்ட் இன்டீரியர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.
புதிய ரேபிட் ரைடர் பிளஸ் வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 18.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவா நிறுவனத்தின் புதிய பெராக் மோட்டார்சைக்கிள் மாடலின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய சந்தையில் புதிய ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் விநியோகம் ஜூலை 20 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதனை ஜாவா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு உள்ளது.
ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணிகளை முடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன. தற்சமயம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஜாவா தனது பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் மாடலான பெராக் மாடலின் விநியோகத்தை துவங்க திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவில் பெராக் மோட்டார்சைக்கிள் மாடல் விலை ரூ. 1.94 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளில் 334சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 30 பிஹெச்பி பவர், 31 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் பிடாடி உற்பத்தி ஆலையின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் பிடாடி பகுதியில் உள்ள உற்பத்தி ஆலை பணிகள் ஜூலை 14 முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் நோக்கில் அம்மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவின் படி ஆலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் கார்ப்பரேட் மற்றும் வட்டார அலுவல் அதிகாரிகள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர். மேலும் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் டொயோட்டா நிறுவனம் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கி உள்ளது.
முன்னதாக மார்ச் மாதத்தில் நாடுதழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே பிடாடி ஆலை பணிகள் நிறுத்தப்பட்டன. ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஆலை பணிகள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
460 கிலோமீட்டர் செல்லும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐஎக்ஸ்3 மாடல் அறிமுகம் செய்தது. புதிய கார் முதற்கட்டமாக சீன சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. ஐந்தாம் தலைமுறை இடிரைவ் பவர்டிரெயின் கொண்டிருக்கும் புதிய ஐஎக்ஸ்3 மாடல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருக்கிறது.
தோற்றத்தால் இந்த கார் பார்க்க மூன்றாம் தலைமுறை எக்ஸ்3 போன்றே காட்சியளிக்கிறது. பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் மாடலில் புதியி கிரில், பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோ டெயில்கேட் மற்றும் 510 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

இத்துடன் 19 இன்ச் ஏரோ வீல்கள், ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே, ஸ்போர்ட்ஸ் சீட், 3 சோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹார்மன் கார்டன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ கார் 282 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.8 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இதில் உள்ள 80கிலோவாட் பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 460 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் 150 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு பேட்டரி 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 34 நிமிடங்களே ஆகும். இத்துடன் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும்.
இந்திய சந்தைக்கான 2021 ரேன்ஜ் ரோவர் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
இந்திய சந்தைக்கான 2021 ரேன்ஜ் ரோவர் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2021 கார் முந்தைய மாடலை விட சில புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக மைல்டு ஹைப்ரிட் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் இருக்கிறது.

இது 3.0 லிட்டர் இன்லைன்-6 யூனிட் ஆகும். இந்த என்ஜின் 345 பிஹெச்பி பவர், 550 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெட்ரோல் பி400 இன்ஜெனியம் இன்லைன்-6 யூனிட் வழங்கப்படுகிறது. இது 395 பிஹெச்பி பவர், 550 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இரண்டு என்ஜின்களுடன் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் ரேன்ஜ் ரோவர் நிறுவனத்தின் புதிய 2 ஆஃப்-ரோடு ரெஸ்பான்ஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் பிஎஸ்6 மற்றும் யூரோ 6 விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
காரின் வெளிப்புற தோற்றம் தற்போதைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது. முன்புறம் பெரிய கிரில், ஃபுல் எல்இடி ஹெட்லைட்கள், டெயில் லேம்ப்கள், வழங்கப்படுகின்றன. இத்துடன் பவர் சீட், மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல், டச் ப்ரோ டூயல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் ஆப்பிள் கார்பிளே / ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி மற்றும் காரினுள் வைபை வசதி மூலம் நான்கு சாதனங்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சுசுகி நிறுவனம் தனது குருகிராம் உற்பத்தி ஆலையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது குருகிராம் ஆலையில் ஐம்பது லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. சுசுகி குருகிராம் ஆலையில் 50 லட்சமாவது வாகனமாக சுசுகி ஜிக்சர் எஸ்எஃப் 250 பிஎஸ்6 மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் சுசுகி நிறுவனம் தற்சமயம் ஐந்து மோட்டார்சைக்கிள் மற்றும் இரண்டு ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இதில் ஜிக்சர், ஜிக்சர் எஸ்எஃப், ஜிக்சர் 250, ஜிக்சர் எஸ்எஃப் 250, இன்ட்ரூடர், அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீடர் உள்ளிட்டவை அடங்கும்.

சுசுகி நிறுவனம் தனது பிஎஸ்6 ரக வி ஸ்டாம் 650 எக்ஸ்டி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் இருசக்கர வாகன நிறுவனமாக சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா இருக்கிறது. 2018-19 நிதியாண்டு சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திாவில் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2020 ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் துவக்க விலை ரூ. 22.3 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் ஜிஎல் (ஒ), ஜிஎல்எஸ் மற்றும் ஜிஎல்எஸ் 4 டபிள்யூடி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் டாப் எண்ட் மாடலில் டீசல் யூனிட் மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற இரு வேரியண்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் முறையே 150 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 180 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
நிசான் நிறுவனம் புத்தம் புதிய பி-எஸ்யுவி கான்செப்ட் மாடல் சர்வதேச வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நிசான் நிறுவனத்தின் புத்தம் புதிய பி-எஸ்யுவி கான்செப்ட் மாடல் ஜூலை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நிசான் காம்பேக்ட் எஸ்யுவி இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய நிசான் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பி-எஸ்யுவி வெளியீடு தாமதமாகி உள்ளது. அந்த வகையில் இந்த கார் 2021 ஆண்டு துவக்கத்தில் வெளியாக இருக்கிறது.

நிசான் பி-எஸ்யுவி கான்செப்ட் மாடலுக்கென பல்வேறு டீசர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கார் மேக்னைட் எனும் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிசான் மேக்னைட் மாடல் இந்தியாவில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் கியா சொனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






