என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இன்ஜெனியம் ரக என்ஜின் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டி உள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் இதுவரை 15 லட்சத்திற்கும் அதிக இன்ஜெனியம் ரக என்ஜின்கள் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட இன்ஜெனியம் என்ஜின் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
முதற்கட்டமாக 4 சிலிண்டர் கொண்ட டீசல் என்ஜினும், 2016 ஆம் ஆண்டு முதல் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உற்பத்தி துவங்கியது. பின் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் உற்பத்தி விவரங்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

ஜாகுவார் ஐ பேஸ் மாடல் அறிமுகமானது முதல் இந்த ஆலையில் எலெக்ட்ரிவ் டிரைவ் யூனிட்களின் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இரண்டு வடிவமைப்பு, பொறியியல் தளங்கள், மூன்று வாகன உற்பத்தி ஆலைகள், மற்றும் இரண்டு பவர்டிரெயின் உற்பத்தி ஆலைகளை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் வைத்திருக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியம் மட்டுமின்றி இந்தியா, சீனா, பிரேசில், ஆஸ்த்ரியா மற்றும் ஸ்லோவோகியா போன்ற பகுதிகளிலும் வாகன ஆலைகளை வைத்திருக்கிறது.
போர்ஷ் நிறுவனம் 992 ஜெனரேஷன் 911 டர்போ மாடல் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
போர்ஷ் நிறுவனம் புதிய 992 ஜெனரேஷன் 911 டர்போ மாடலை கூப் மற்றும் கேப்ரியோலெட் என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் 450 ஹெச்பி திறன் வழங்கும் கரெரா 4எஸ் மற்றும் 650 ஹெச்பி டர்போ எஸ் மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்தப்படுகிறது.
புதிய 911 டர்போ மாடலில் 580 ஹெச்பி திறன், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 3.7 லிட்டர் ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

இந்த என்ஜினுடன் 8 ஸ்பீடு பிடிகே டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் போர்ஷ் டிராக்ஷன் மேனேஜ்மென்ட் ஆக்டிவ் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட அதிக செயல்திறன் வழங்க வழி செய்கிறது.
இந்தியாவில் போர்ஷ் 911 மாடல் கரெரா மற்றும் கரெரா எஸ் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.82 கோடி மற்றும் ரூ. 1.99 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டாப் ரேன்ஜ் போர்ஷ் 911 டர்போ எஸ் மாடல் விலை ரூ. 3.08 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுவரை பிஎஸ்6 அப்டேட் பெறாத மாடலாக எஸ் கிராஸ் இருக்கிறது. இதுவரை டீசல் வேரியண்ட் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி இதன் பெட்ரோல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் உள்ளதை போன்று எஸ் கிராஸ் மாடலிலும் சுசுகியின் கே15பி பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. முதன்முதலில் இந்த என்ஜின் சியாஸ் மாடலில் வழங்கப்பட்டது. இது 105 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 8.5 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டுகாட்டி நிறுவனம் விரைவில் மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரங்கள் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆவணங்களில் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முதல் மாடலாக மல்டிஸ்டிராடா 1260 என்டியூரோ கிராண்ட் டூர் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ஹீட்டெட் க்ரிப்கள், பேனியர்கள், டாப் பாக்ஸ் மற்றும் பெரிய விண்ட் ஷீல்டு போன்றை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது மாடல் டையாவெல் 1260 லம்போர்கினி இருக்கும் என்றும் இந்த மாடலில் 1262சிசி, எல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 157 பிஹெச்பி பவர், 129 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடல் ரேஜிங் புல் பிராண்டிங் மற்றும் கார்பன் ஃபைபர் மூலம் உருவான பாகங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மூன்றாவது மாடல் ஆகும். மற்ற டுகாட்டி டார்க் வேரியண்ட்களை போன்று இந்த மாடலும் முழுமையான கருப்பு நிறம் கொண்டிருக்கும். மேலும் இதன் விலை சற்றே குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையை தொடர்ந்து விரைவில் இவை இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் 45 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை கடந்துள்ளது. புதிய மைல்கல் பற்றிய அறிவிப்பை ஹூண்டாய் நிறுவனம் தனது டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுக நிகழ்வில் அறிவித்தது. 2020 கிரெட்டா எஸ்யுவி மாடல் அறிமுகமாகி சில மாதங்களிலேயே இந்த மைல்கல் எட்டி இருக்கிறது.
இந்தியாவில் ஊரடங்கு துவங்கும் முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா வெளியீட்டிற்கு முன்பே 14 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை பெற்று இருந்தது. கடந்த மாதம் வரை 40 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், 14 நாட்களுக்குள் இந்த கார் மேலும் 5 ஆயிரம் புதிய முன்பதிவுகளை பெற்று உள்ளது.

புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய லோகோ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நிசான் நிறுவனம் தனது லோகோவை மாற்றியமைத்து புதிய லோகோவினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து இருக்கிறது. நிசான் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுடன் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.
2018 ஆரியா கான்செப்ட் மாடலில் பயன்படுத்தப்பட்ட லோகோவை பயன்படுத்த நிசான் நிறுவனம் ஏற்கனவே காப்புரிமைக்கு விண்ணப்பித்து இருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது. அந்த வகையில் நிசான் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

நிசான் நிறுவனத்தின் வியாபார யுக்தியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை குறிக்கும் வகையில் புதிய லோகோ வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லோகோ நிசான் நிறுவனத்தின் கடந்த காலத்துடன் இணைந்த வாக்கில் எதிர்காலத்தை குறிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
எலெக்ட்ரிக் கார் காலக்கட்டத்தில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது லோகோக்களை மாற்றி புதிய லோகோவினை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. நிசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய லோகோ ஏற்கனவே மாற்றப்பட்டு உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் சொனெட் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. கியா செல்டோஸ் மற்றும் கார்னிவல் எம்பிவி போன்ற மாடல்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில், கியா சொனெட் மாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
புதிய கியா சொனெட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

கியா சொனெட் புதிய ஸ்பை படங்களின் படி இந்த கார் இன்டகிரேட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர் கொண்டிருக்கிறது. காரின் பூட் லிட் முழுக்க லைட் பார் காணப்படுகிறது. இது இருபுறங்களில் உள்ள ஸ்ப்லிட் டெயில் லேம்ப்களை ஒன்றிணைக்கிறது. இத்துடன் காரை சுற்றி பாடி கிளாடிங், சிறிய குவாட்டர் விண்டோ கிளாஸ், ஸ்டீல் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
காரின் முன்புறம் டைகர் நோஸ் கிரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்படுகின்றன. உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் யுவிஒ கனெக்ட்டெட் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஏஎம்ஜி ஜிடி மாடல் பார்க்க கம்பீர தோற்றம் கொண்டிருக்கிறது.
புதிய மெர்சிடிஸ் மாடலில் ட்வின் டர்போ 4.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 730 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

மேலும் 200 கிலோமீட்டர் வேகத்தை வெறும் ஒன்பது நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதில் உள்ள தலைசிறந்த ஆக்டிவ் ஏரோடைனமிக் அம்சங்கள் இந்த கார் இத்தனை வேகம் செல்ல வழி செய்கிறது.
புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த கார் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இந்த கார் 2021 ஆண்டு விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்போர்ட்பேக் மாடல் விலை ரூ. 1.94 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் விநியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.
2020 ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மொத்தம் 13 நிறங்களில், ஐந்து மேட் ஃபினிஷ் பெயின்ட்டிங்கில் கிடைக்கிறது. புதிய 2020 ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 591 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் சிலிண்டர் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பமும் கொண்டிருக்கிறது.
புதிய ஆடிஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், மேம்பட்ட கம்பீர தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர், 21 இன்ச் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்கள், டிஃப்யூசர் மற்றும் இரண்டு எக்சாஸ்ட்டிப்கள் பொருத்தப்பட்ட பின்புற பம்ப்பர் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2020 எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் 2020 எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 20,90,000 எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
முந்தைய மாடலை விட 2020 மாடலில் ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த மோட்டார்சைக்கிளில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் சார்ந்து இயங்கும் 6.5 இன்ச் கலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் இந்த மாடல் ரேசிங் ரெட் மற்றும் ஐஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

2020 பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிளில் 999சிசி இன்லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு, 16 வால்வு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் லளக்தர்ரட்டுள்ளது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய 2020 பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மாடலுக்கு மூன்று ஆண்டுகள், வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும் இதே வசதியை நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய 2020 பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 மற்றும் கவாசகி வெர்சிஸ் 1000 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டொயோட்டா நிறுவனம் தனது கிளான்ஸா மாடல் கார்களில் சிறு கோளாறு இருப்பதால் அவற்றை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கிளான்ஸா பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலின் 6500 யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது. இந்த மாடல்களில் என்ஜினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்டதே திரும்ப பெறப்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்கி அக்டோர் 6, 2019 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கிளான்ஸா யூனிட்களில் இந்த கோளாறு இருப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவத்து உள்ளது.

கோளாறு உள்ள வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை டொயோட்டா விற்பனை மைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு வாகனத்தை கட்டணமின்றி சரி செய்து வழங்குவர்.
டொயோட்டா கிளான்ஸா மாடல் மாருதி சுசுகி பலேனோ மாடலின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். தோற்றத்தில் இரு மாடல்களும் ஒரே மாதிரி காட்சியளிக்கும். எனினும், டொயோட்டா சார்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய இகோஸ்போர்ட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் இகோஸ்ப்ரோட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. புதிய கார் டாப் எண்ட் ஆட்டோமேடிக் வேரியண்ட்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10.67 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது டாப் எண்ட் மாடலின் விலையை விட ரூ. 90 ஆயிரம் விலை குறைவு ஆகும். விலை குறைவுக்கு ஏற்றார்போல் புதிய வேரியண்ட்டில் சன்ரூஃப்ட, முன்புறம் இரட்டை ஏர்பேக்குகள் வழங்கப்படவில்லை. இத்துடன் ஆட்டோ ஹெட்லைட், வைப்பர்கள், பின்புற இருக்கையில் ஆம்ரெஸ்ட் மற்றும் முன்புற மேப் லைட்கள் நீக்கப்பட்டு உள்ளது.

புதிய இகோஸ்போர்ட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 123 ஹெச்பி மற்றும் 100 ஹெச்பி செயல்திறன் வழங்குகிறது.
இந்திய சந்தையில் புதிய இகோஸ்போர்ட் மாடல் டாடா நெக்சான் ஏஎம்டி, ஹூண்டாய் வென்யூ டிசிடி மற்றும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மைல்டு ஹைப்ரிட் ஏடி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






