என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் புது வேரியண்ட் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிரெஞ்சு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ரெனால்ட் விரைவில் டஸ்டர் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த என்ஜினை ரெனால்ட் நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தியது.
ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த காரின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதிய 1.3 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 153 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக சிவிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டஸ்டர் மாடலில் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
கியா சொனெட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த கார் கியா மோட்டார்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் புதிய கார் டீசர் வீடியோவும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டீசர் வீடியோவில் காரின் முன்புறம் மற்றும் பின்புறம் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்கள், பின்புற வைப்பர், ரிஃப்லெக்டர் ஸ்ட்ரிப், சில்வர் ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
காரின் முன்புறம் இலுமினேட்டெட் எல்இடி டிஆர்எல்கள், டைகர் நோஸ் கிரில், பிளாக் இன்சர்ட்கள், ரெட் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள், உள்புறத்தில் முன் மற்றும் பின்புறங்களில் ஹெட் ரெஸ்ட்கள் வழங்கப்படுகிறது.

கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கியா சொனெட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுதவிர புதிய சொனெட் மாடல் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகின.
ஜாவா நிறுவனத்தின் பெராக் மோட்டார்சைக்கிள் விநியோகம் இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் விநியோகம் துவங்கி உள்ளது. ஜாவா பெராக் முதல் மாடல் ஐதராபாத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா பெராக் முன்பதிவு இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. எனினும், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் உற்பத்தி மற்றும் விநியோக பணிகள் தாமதமாகின.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் விலை ரூ. 1.94 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளில் 334சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 30 பிஹெச்பி பவர், 31 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் விரைவில் ஸ்பெஷல் எடிஷன் காம்பஸ் எஸ்யுவி மாடலை நைட் ஈகிள் பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய லிமிட்டெட் எடிஷன் லாங்கிடியூட் பிளஸ் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. புகிய காருக்கான டீசரும் வெளியாகி இருக்கிறது.
புதிய காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் கிரில், விண்டோ லைன் உள்ளிட்டவற்றில் கிளாஸ் பிளாக் டீடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஜீப் பேட்ஜ்களும் பிளாக் நிறத்தில் இருக்கிறது. இதன் 18 இன்ச் அலாய் வீல்களும் கிளாஸ் பிளாக் நிறம் கொண்டிருக்கின்றன.
காரின் உள்புறம் டெக்னோ பார்ட் லெதர் சீட், இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ஏசி வென்ட்களை சுற்றி கிளாஸ் பிளாக் ட்ரிம் செயய்ப்பட்டு உள்ளது. புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் மாடலில் 8.4 இன்ச் யுகனெக்ட் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் புஷ்-பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி, டூயல் சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், செனான் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பிரேக் அசிஸ்ட், இஎஸ்பி மற்றும் ஹில் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷனில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டர்போ டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இவை முறையே 163 பிஹெச்பி, 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ, டீசல் என்ஜினுடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவை ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் 2020 ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் மாடல் ரூ. 11.13 லட்சம், எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் அறிமுகமாகி மூன்று மாதங்களுக்குள் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2020 ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் மாடல் விலையை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ஆர்எஸ் ஸ்டிரீட் மாடல் துவக்க விலை ரூ. 11.33 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2020 டிரையம்ப் ஸ்டிரீட் ட்ரிபில் ஆர்எஸ் மோட்டார்சைக்கிளில் 765சிசி மோட்டோ2 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 121 பிஹெச்பி பவர், 79 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய மாடலில் ட்வின் ஹெட்லேம்ப் வடிவமைப்பு, மெல்லிய எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்கள் உள்ளிட்டவை முந்தைய மாடலை விட வித்தியாசமாக இருக்கின்றன. மேலும் ஃபியூயல் டேன்க், டெயில் பகுதி உள்ளிட்டவையும் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
2020 டிரையம்ப் ஸ்டிரீட் ட்ரிபில் ஆர்எஸ் மாடலின் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மாற்றப்பட்டு, புதிய லே-அவுட் வழங்கப்பட்டுள்ளது. புதிய நிறங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை இந்த மோட்டார்சைக்கிளுக்கு புதுமையான தோற்றத்தை வழங்குகின்றன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எக்ஸ்எல்5 கார் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர் மாடலின் பிரீமியம் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பிரீமியம் மாடல் மாருதி எக்ஸ்எல்5 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.
முன்னதாக எக்ஸ்எல்5 மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய மாருதி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதம் ஆகி இருக்கிறது.

டெல்லியில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படும் மாருதி கார் முன்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், ட்வீக் செய்யப்பட்ட ஏர் டேம் முன்புற பம்ப்பரில் வழங்கப்பட்டு உள்ளது.
காரின் பின்புறம் செங்குத்தாக டெயில் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்ட வேகன்ஆர் மாடலை விட வித்தியாசப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய எக்ஸ்எல்5 மாடல் 15 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.
லம்போர்கினி நிறுவனத்தின் புதிய அவென்டடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் சேகோ எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் அவென்டடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் சேகோ எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. உலகம் முழுக்க இந்த கார் மொத்தம் பத்து யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
புதிய லிமிட்டெட் எடிஷன் லம்போர்கினி நிறுவனத்தின் விர்ச்சுவல் ஆட் பெர்சனம் ஸ்டூடியோ திட்டத்தை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் தங்களது கார்களை கஸ்டமைஸ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் இத்தாலியில் உள்ள சேன்ட் அகாடா போலோக்னீசில் உள்ள ஆட் பெர்சோனம் துறைக்கு செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.

லம்போர்கினி வாடிக்கையாளர்கள் சந்திப்புகளை இரண்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லம்போர்கினி ஊழியர்கள் குழு ஆட் பெர்சோனம் ஆப்ஷன்களை வரிசைப்படுத்தி பிரத்யேகமாக விளக்கம் அளிப்பர். இது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.
புதிய லம்போர்கினி அவென்டடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் சேகோ எடிஷன் மாடல் ஹெக்சகன் கிளவுட் பேட்டன்களை சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அவென்டடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் சேகோ எடிஷனினி வெளிப்புறத்தை உருவாக்க 120 மணி நேரங்கள் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் பிகோ பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஃபோர்டு நிறுவனம் தனது பிகோ ஹேட்ச்பேக் மாடலின் 1.2 லிட்டர் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரில் ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்ட 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய 1.2 லிட்டர் டிராகன் என்ஜின் முந்தைய 1194சிசி என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 96 ஹெச்பி திறன் வழங்குகிறது. புதிய என்ஜினுடன் பேடில்ஷாப்டர்களும் பிகோ மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த வேரியண்ட் ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகமாகும் என தெரிகிறது.

ஃபோர்டு பிகோ பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 8 லட்சம் முதல் ரூ. 8.3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்டு நிறுவனம் தனது பிகோ பேஸ்லிப்ட் மாடலை 2019 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த காரில் ரீடொன் கிரில், புதிய சின், சி வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பின்புற பம்ப்பர் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
புதிய பிகோ வேரியண்ட் மூன்றாவது வெர்ஷன் ஆகும். முன்னதாக பிகோ மாடலில் 123 ஹெச்பி வழங்கும் 1497சிசி பெட்ரோல் என்ஜின் மற்றும் 110 ஹெச்பி திறன் வழங்கும் 1499 சிசி 4 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது மோஜோ 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளின் மூன்றாவது நிறத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது மோஜோ 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான டீசர்களை வெளியிட்டு வருகிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் நிறங்களை இருமுறை மஹிந்திரா வெளியிட்டது.
அந்த வகையில் புதிய மஹிந்திரா மோஜோ 300 பிஎஸ்6 மாடல் கார்மெட் பிளாக் மற்றும் ரூபி ரெட் நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் இந்த மோட்டார்சைக்கிள் பிளாக் பியல் நிறத்திலும் கிடைக்கும் என மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.
புதிய நிறங்கள் தவிர புதிய மோட்டார்சைக்கிள் தோற்றம் பார்க்க பிஎஸ்4 மாடல் போன்றே காட்சியளிக்கிறது. வடிவமைப்பில் பெரிய, ட்வின் பாட் ஹெட்லேம்ப்கள், மஸ்குலார் ஃபியூயல் டேன்க் மற்றும் பெடைட் டெயில் பகுதி கொண்டிருக்கிறது.

மஹிந்திரா மோஜோ 300 பிஎஸ்6 மாடலில் 295சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் என்பதால் இதன் செயல்திறன் அளவுகளில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் மஹிந்திரா மோஜோ 300 பிஎஸ்6 விலை முந்தைய மாடலை விட ரூ. 10 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்4 மாடல் விலை ரூ. 1.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையினை சென்னையில் துவங்கி உள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஊரடங்கு காலக்கட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் சர்வீஸ் ஆன் வீல்ஸ் எனும் சேவையை அறிவித்தது.
சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை வீட்டில் இருந்தபடி சர்வீஸ் செய்து கொள்ள முடியும். அறிவித்து ஒருமாதம் ஆகிவிட்ட நிலையில், இந்த சேவை தற்சமயம் சென்னையில் துவங்கி உள்ளது.
தற்போதைய தகவல்களின் படி சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு சர்வீஸ் மற்றும் பெரும்பாலான ரிப்பேர்களை வீட்டிலேயே சரி செய்து தரப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சேவையை வழங்க ராயல் என்ஃபீல்டு 350 டிரையல் மாடல்கள் டூல்ஸ், ஸ்பேர் மற்றும் இதர உபகரணங்கள் கொண்டு செல்லும் வகையில் ஆல்டர் செய்யப்பட்டுள்ளன.

ஆல்டர் செய்யப்பட்ட விசேஷ சர்வீஸ் மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு சர்வீஸ் மையங்களில் கிடைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும் என்பதோடு சர்வீஸ் மையங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க முடியும்.
சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தலைசிறந்த மோட்டார்சைக்கிள் வல்லுநர்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு அனுப்பி, அவர்களது மோட்டார்சைக்கிளை சரி செய்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
பிகாஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான பிகாஸ் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.
பிகாஸ் ஏ2 மற்றும் பி8 என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முறையே இரண்டு மற்றும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்சமயம் இவை சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் பன்வெல் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது.

இந்தியாவில் பிகாஸ் ஏ2 லீட் ஆசிட் மாடல் விலை ரூ. 52499, ஏ2 லித்தியம் அயன் மாடல் விலை ரூ. 67999, பி8 லீட் ஆசிட் மாடல் விலை ரூ. 62999, பி8 லித்தியம் அயன் மாடல் விலை ரூ. 82999 என்றும் பி8 எல்ஐ தொழில்நுட்பம் கொண்ட மாடல் விலை ரூ. 88999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிகாஸ் ஏ2 ஸ்கூட்டர் என்ட்ரி லெவல் மாடல் ஆகும், இது மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்திலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லும். லீட் ஆசிட் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக ஏழு முதல் எட்டு மணி நேரங்கள் ஆகும். லித்தியம் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 2 மணி 15 நிமிடங்கள் ஆகும்.
பிகாஸ் பி8 பிரீமியம் மாடல் ஆகும். இது மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
டொயோட்டா நிறுவதனத்தின் பிடாடி உற்பத்தி ஆலை பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது பிடாடி ஆலை பணிகள் ஜூலை 20 ஆம் தேதி துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிடாடி ஆலை மூடப்பட்டது.
தற்சமயம் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனம் தனது பிடாடி ஆலை பணிகள் ஜூலை 20 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது. முந்தைய உத்தரவின் படி ஜூலை 14 ஆம் தேதி முதல் பிடாடி ஆலை பணிகளை டொயோட்டா நிறுவனம் நிறுத்தியது.

ஜூலை 15 வரை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன ஊழியர்களில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. முன்னதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஏழு பேர் குணமாகி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் டொயோட்டா ஆலையில் 40 முதல் 45 சதவீத ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர் என டொயோட்டா தெரிவித்துள்ளது. மேலும் ஆலை முழுக்க சுத்தப்படுத்தும் பணிகள் அவ்வப்போது நடைபெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.






