search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jawa Perak"

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மோட்டார்சைக்கிள்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #JawaMotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் என அழைக்கப்படும் புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களாக இருந்தன. 

    இந்தியாவில் என்ட்ரி-லெவல் ஜாவா 42 விலை ரூ.1.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) என்றும், ஜாவா பெராக் மாடல் விலை ரூ.1.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு நேரடி போட்டியாக அமைந்திருக்கிறது. சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய கான்டினென்டல் ஜி.டி. 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்களை அறிமுகம் செய்தது. 

    ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் மாடல்களில் ரெட்ரோ வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இவை பார்க்க ஏற்கனவே பிரபலமாக இருந்த ஜாவா மாடல்களைப் போன்று காட்சியளிக்கிறது. முந்தைய ஜாவா மாடல்களை போன்று, புதிய மாடல்களின் என்ஜின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.



    புது ஜாவா 42 மாடலில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புது என்ஜின் பி.எஸ். VI ரக எமிஷன் கொண்டிருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பெரிய போர் மற்றும் ஒரேவித ஸ்டிரோக் கொண்டிருக்கிறது. 

    ஜாவா மாடலில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் மஹிந்திரா மோஜோ மாடலில் வழங்கப்பட்டுள்ளதைப் போன்றதாகும். மஹிந்திரா மற்றும் ஜாவா இணைந்து புதிய மோட்டார்சைக்கிளின் என்ஜின் சத்தம் முந்தைய 2-ஸ்டிரோக் ஜாவா மாடல்களை போன்று ஒலிக்கும் படி உருவாக்கியுள்ளன. 

    புது ஜாவா மாடல்கள் மூன்று வித நிறங்கள்: ஜாவா பிளாக், ஜாவா மரூன் மற்றும் ஜாவா கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஜாவா 42 மாடல் ஹேலி டீல், கேலக்டிக் கிரீன், ஸ்டார்லைட் புளு, லூமினஸ் லைம், நெபுலா புளு மற்றும் கொமெட் ரெட் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. #JawaMotorcycles #Jawa42 #JawaPerak
    ×