என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடல் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதே மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 2021 ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இந்த கார் புகை வெளியீடு சார்ந்த ஆய்வுக்கான உபகரணம் பொருத்தப்பட்ட நிலையில் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவது தெரியவந்து இருக்கிறது. 

    ஃபார்ச்சூனர் ஸ்பை படம்

    தற்போதைய தகவல்களின் புதிய ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் மாடல் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பண்டிகை கால விற்பனையை பயன்படுத்திக் கொள்ள டொயோட்டா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

    புதிய ஸ்பை படங்கள் சமீபத்தில் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் போன்று காட்சியளிக்கிறது. இதில் புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பர், மெல்லிய ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பிளாக்டு-அவுட் கிரில், சென்ட்ரல் ஏர் இன்டேக், புதிய ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

    சர்வதேச சந்தையில் இந்த ஃபார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 204 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 

    ஸ்கோடா நிறுவனத்தின் என்யாக் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மமாடல் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்இபி பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும். 

    புதிய ஸ்கோடா காரில் ஃபோக்ஸ்வேகன் ஐடி 3 மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் பாடி பேனல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் செக் குடியரிசில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டு தேதி மட்டுமின்றி புதிய கார் வரைபடத்தையும் ஸ்கோடா வெளியிட்டு உள்ளது. 

     ஸ்கோடா என்யாக்

    ஸ்கோடா என்யாக் மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. புதிய என்யாக் மாடல் 2022 ஆம் ஆண்டிற்குள் பத்து எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடும் ஸ்கோடா நிறுவன திட்டத்தின் முதல் கார் ஆகும்.  

    புதிய ஸ்கோடா என்யாக் மாடலில் 72kWh யூனிட் பேட்டரி வழங்கப்படும் என்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 125 பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


    பியாஜியோ இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 125 ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இரு மாடல்களின் விலை முறையே ரூ. 1,10,373 மற்றும் ரூ. 1,14,204 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல்களில் 125சிசி, 3 சிலிண்டர் வால்வு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 9.7 பிஹெச்பி பவர், 9.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்கூட்டரின் முன்புறம் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் பூட் லைட் வழங்கப்பட்டு உள்ளது.

    வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 125

    முந்தைய மாடல்களை போன்றே புதிய வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 125 பிஎஸ்6 மாடல்களும் மெட்டல் பாடி பேனல்களை கொண்டிருக்கின்றன. இத்துடன் 11-10 இன்ச் வீல்கள் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனிற்கு ஹைட்ராலிக் ஆம் மற்றும் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 125 பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல்களை ஆன்லைன் அல்லது அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் முன்பதிவு செய்ய முடியும். 

    இரு மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1000 ஆகும். ஆன்லைன் முன்பதிவுகளுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.
    பியாஜியோ நிறுவனத்தின் 2020 வெஸ்பா 150 ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    பியாஜியோ நிறுவனம் 2020 வெஸ்பா 150 ஃபேஸ்லிப்ட் - விஎக்ஸ்எல் 150 மற்றும் எஸ்எக்ஸ்எல் 150 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 

    புதிய வெஸ்பா விஎக்ஸ்எல் 150 ஃபேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 1.22 லட்சம் என்றும் வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150 ஃபேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 1.27 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     வெஸ்பா 150 ஃபேஸ்லிப்ட்

    அப்டேட்களின் படி இரு மாடல்களிலும் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் பூட்லைட் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. 

    வெஸ்பா 150 ஸ்கூட்டரில் 149 சிசி மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் 10.2 பிஹெச்பி பவர், 10.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 200 எம்எம் டிஸ்க், பின்புறம் 140 எம்எம் டிரம் பிரேக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    சங்யோங் நிறுவனத்தின் புதிய இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான சங்யோங் மோட்டார் இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் டீசர் படங்களை வெளியிட்டு உள்ளது. இந்த கார் கொராண்டோ மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வருகிறது.

    சர்வதேச சந்தையில் சங்யோங் இ100 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் ம்றும் கியா இ நிரோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. வடிவமைப்பில் புதிய இ100 பார்க்க கொராண்டோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய காரில் ஸ்டிரீம்லைன் மற்றும் ஏரோடைனமிக் லைன்கள் வழங்கப்படுகின்றன.

    சங்யோங் இ100

    சங்யோங் இ100 மாடலில் 188 பிஹெச்பி திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 153 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 

    இந்த காரில் 61.5 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்படும் என்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 420 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் சங்யோங் இ100 அல்லது கொராண்டோ இவி மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    இந்தியாவில் இந்த கார் மஹிந்திரா இகேயுவி300 மாடலுக்கு போட்டியாக அமையும். இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    பெங்களூரு நெடுஞ்சாலையில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறந்த பைக்கரை போக்குவரத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

    சூப்பர்பைக்கில் அதிவேகமாக பறந்த பெங்களூரு பைக்கரை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான நபர் தனது சூப்பர்பைக்கில் மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் எலெக்டிரானிக் சிட்டி மேம்பாளத்தில் சென்றார். 

    முன்னதாக இவர் அதிவேகமாக சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார். இவர் பதிவேற்றம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

    ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    பின் இந்த வீடியோ அழிக்கப்பட்டது. வைரல் வீடியோ கொண்டு வாகன உரிமையாளரை தொடர்பு கொண்டு அவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு பைக்கர் தனது யமஹா ஆர்1 மோட்டார்சைக்கிளில் அபாயகரமாக சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

    மேலும் இந்த செயலில் ஈடுபட்ட பைக்கர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது 1000 சிசி மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக பெங்களூரு நகர காவல் துறை தெரிவித்து இருக்கிறது.
    லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் கார் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து உள்ளது.


    லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்து உள்ளது. லம்போர்கினி உருஸ் மாடல் உற்பத்தி 2017 ஆம் ஆண்டு துவங்கியது. 

    கடந்த மாதம் லம்போர்கினி நிறுவனம் உருஸ் பியல் கேப்சூல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் டூ-டோன் எக்ஸ்டீரியர் தோற்றம், பியல்சென்ட் ஷேட், நான்கு லேயர் பெயின்ட், சில சிக்னேச்சர் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன.  

     லம்போர்கினி உருஸ்

    லம்போர்கினி உருஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 650 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் 200 கிலோமீட்டர் வேகத்தை 12.8 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சம் 305 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடல் காரின் புது வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
     

    ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் ஐஎம்டி மற்றும் ஸ்போர்ட் ட்ரிம் வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

    புதிய ஹூண்டாய்  வென்யூ மாடல்கள் துவக்க விலை ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் ஸ்போர்ட் ட்ரிம் மாடல் விலை ரூ. 11.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டி ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஒ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 9.99 லட்சம் மற்றும் ரூ. 11.08 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    ஹூண்டாய் வென்யூ ஐஎம்டி

    புதிய ஐஎம்டி மாடலில் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இது கிளட்ச் பெடல் இல்லாத முதல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார் ஆகும். இந்த டிரான்ஸ்மிஷனுடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. புதிய பிஎஸ்6 ரக என்ஜின் 120 பிஹெச்பி பவர், 170 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ஹூண்டாய் வென்யூ ஸ்போர்ட் ட்ரிம் எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஒ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஒ வேரியண்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் ஆகும். 

    வென்யூ ஸ்போர்ட் ட்ரிம் எஸ்எக்ஸ் பிளஸ் வேரியண்ட் டர்போ பெட்ரோல் என்ஜின் எனும் ஒற்றை ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பசாட் ஃபேஸ்லிபிட் மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடலை விரைவில்  இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கார் பல்வேறு வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் புதிய பவர்டிரெயின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய பசாட் ஃபேஸ்லிப்ட் மாடல் இரண்டு மாதங்களுக்குள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. வெளியீட்டிற்கு முன் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    ஃபோக்ஸ்வேகன் பசாட்

    புதிய ஃபேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஃபோக்ஸ்வேகன் ஆல்ஸ்பேஸ் மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் பசாட் ஃபேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் புதிய பம்ப்பர், கிரில், எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லேம்ப் கிளஸ்டர், புதிய பசாட் லோகோ காரின் பூட் பகுதியில் பொருத்தப்படுகிறது.
    பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா ஸ்டாம் 125 டிஸ்க் பிரேக் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
      

    பியாஜியோ இந்தியா நிறுவனம் அப்ரிலியா ஸ்டாம் 125 டிஸ்க் பிரேக் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வேரியண்ட் விலை ரூ. 91,321 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டிரம் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 85,431 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    முன்னதாக இந்த ஸ்கூட்டர் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதற்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. புதிய வேரியண்ட்டின் முன்புறத்தில் 220எம்எம் டிஸ்க் பிரேக், ட்வின் போர்ட் கேலிப்பர், பின்பறம் 150 எம்எம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.

    அப்ரிலியா ஸ்டாம் 125

    இத்துடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டம், 6 லிட்டர் ஃபியூயல் டேன்க், 12 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், வைடு கிராஸ் பேட்டன் டையர்கள், போல்டு கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டர் ரெட் மற்றும் எல்லோ என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்த ஸ்கூட்டரில் பிஎஸ்6 ரக 124.45சிசி, ஏர் கூல்டு, SOHC, 3 வால்வு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 9.7 பிஹெச்பி பவர், 9.60 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    2020 பியாஜியோ வெஸ்பா ஃபேஸ்லிப்ட் சீரிஸ் ஸ்கூட்டர்களின் முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    பியாஜியோ இந்தியா நிறுவனம் 2020 வெஸ்பா விஎக்ஸ்எல், எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிப்ட் மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கியது. புதிய ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    2020 வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிப்ட் மாடல்கள் 125சிசி மற்றும் 150சிசி பிஎஸ்6 ரக என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய வெஸ்பா மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பியாஜியோ இந்தியா தெரிவித்து இருக்கிறது.

     வெஸ்பா ஸ்கூட்டர்

    வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் மாடல்களில் மோனோக்யூ ஸ்டீல் பாடி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்டி-லாக் பிரேக்கிஙஅ சிஸ்டம் அல்லது கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ட்வின் பாட் கேலிப்பர் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

    இரு ஸ்கூட்டர்களிலும் 5 ஸ்போக் பெட்டல் டிசைன் வீல் மற்றும் அகலமான டையர்கள், எல்இடி ஹெட்லைட், டே-டைம் ரன்னிங், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், பூட் லைட் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    மும்பை பூனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் அப்படி சென்றால் ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மும்பை மற்றும் பூனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில நெடுஞ்சாலை பிரிவு காவல்துறை அறிவித்து உள்ளது. இந்த விதிமுறை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.

    மேலும் இந்த விதிமுறை அர்சி மற்றும் காலாபூர் இடையே உள்ள டோல்களில் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அர்சி மற்றும் காலாபூர் இடை 50 கிலோமீட்டர் சாலை ஆகும். மும்பை மற்றும் பூனே பகுதிகளை இணைக்கும் எக்ஸ்பிரஸ்வே சாலையில் இப்பகுதி அதிக சிறப்பானது என கூறப்படுகிறது.

     மும்பை பூனே எக்ஸ்பிரஸ்வே

    இந்த பிரம்மாண்ட ஆறுவழி சாலை அடங்கிய நெடுஞ்சாலை அதிவேக வாகன ஓட்டிகளால் அபாயகரமான பகுதியாக மாறி உள்ளது. இதன் காரணமாக அர்சி மற்றும் காலாபூர் இடையிலான பகுதிகளில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல நெடுஞ்சாலை காவல்துறை அறிவித்து இருக்கிறது. 

    இந்த வேகத்தில் செல்லும் வாகனங்கள் இரண்டு டோல்களை கடக்க 37 நிமிடங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இரு டோல்களை 37 நிமிடங்களுக்குள் கடக்கும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
    ×